Daily Archives: November 1, 2013

பதிப்பில் வரா கிடப்புகள் ….

காற்றும் இங்கு கூற்றாய் மாறுமுன் நாற்றமடிக்கும் கூற்றைவெறுப்போம் …

அன்னையைப் பிள்ளையை அண்ணியை அண்ணனை
கண்ணின்மணியாம் கணவனைத் தனையனை
பெண்ணைப் பேதையை கன்னியைத் தந்தையை
எண்ணிலடங்கா இனத்தவர் பலரை ! Continue reading

குர்ஆன் வழியில் … அல்லாஹ் அனுமதியாததை எவரும் அனுமதிக்கலாமா?

அல்லாஹ் அனுமதியாததை எவரும் அனுமதிக்கலாமா?

அல்லாஹ் அனுமதியாதது அது நல்லதாகவோ, கெட்டதாகவோ இருக்கலாம். நமக்கு நன்மை போல் தெரிவதில் தீமைகள் காணப்படுவதும், தீமை போல் தெரிவதில் நன்மைகள் காணப்படுவதும் நமக்குப் புலப்படுவதில்லை. தெரிய வரும் காலங்களில் விடயங்கள் நடந்தேறி விடுகின்றன. இங்கு நாம் ஆராயவிருப்பது நாம் அறியாமற் செய்பவை அல்ல. அறிந்து கொண்டே, அதாவது அல்லாஹ் கூறவில்லை என்பதைத் தெரிந்து கொண்டே ஒன்றைப் பின்பற்றுவது. இச்செய்கை மிகப் பாரதூரமானதும், அச்செயலைத் தானாகச் செய்பவர் அல்லாஹ்வைப் போன்று காரியமாற்றுவதாக இருப்பின், அல்லது தனது மனோ இச்சைப்படி நடப்பவராக இருந்தால் அது ஷிர்க்கை வருவிக்கும் பயங்கரத்தை உண்டாக்கி விடும். இதனை அல்லாஹ் கண்டித்துள்ளான். திரு மறை 42:21 கூறுவதைப் பாருங்கள். Continue reading

ஆபத்தை விளைக்கும் வாழைப்பழம் சுப்பர் மார்க்கட்டுக்களிலா !

The Government should make arrangements to examine the credibility of the Imported Yellow Colour Bananas which are mostly sold out in the Super Markets ! 

 

முக்கியமான தகவல் படித்து அனைவரும் பகிரவும் நண்பர்களே…முன்பெல்லாம் டாக்டர்கள் தினமும் ஒரு வாழைப்பழமாவது சாப்பிடுங்கள், உடம்புக்கு ரொம்ப நல்லது என்பார்கள். ஆனால் தற்போது மரபணு மாற்று பெரிய மஞ்சள் வாழைபழத்தை சாப்பிடவே வேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள்.காரணம் தற்போது சென்னை வாசிகள் பெரும்பாலோர் உடலில்-தொண்டையில் அலர்ஜி, சைனஸ், தும்மல், வயிற்றுக்கோளாறு, வயிற்றுவலி, சிறுநீரக கற்கள், அடிக்கடி தலைவலி, புட் பாய்சன்… என்று கடுமையாக அவதிப்படுகிறார்கள். இவர்களை நோயாளிகளாக மாற்றியது இந்த மரபணு மாற்று மஞ்சள் வாழைப்பழங்கள் தான். Continue reading

குர்ஆன் வழியில் … அல்லாஹ் யாருடைய தீமைகளை நன்மையாக மாற்றிவிடுவான்?

அல்லாஹ் யாருடைய தீமைகளை நன்மையாக மாற்றிவிடுவான்?

மேற்கண்ட விடயம் சாமான்யமானதல்ல. தீமைகளை அகற்றுவது பற்றி அறிந்துள்ளோம். அப்படியான வசனம் ஒன்று 47:24 இல் பதிவாகியுள்ளது. அது பற்றி முன்னர் நான் இதுபோன்ற ஓர் கட்டுரை எழுதியுள்ளேன். ஆனால் இங்கு, அல்லாஹ் அதற்கும் மேல் ஒரு படி சென்று நமது தீமைகளை நன்மைகளாக மாற்றிவிடுவதாகக் கூறியுள்ள 25:70ஆம் வசனத்துக்கு வாசக முஸ்லிம்களது கவனத்தை ஈர்க்கின்றேன். குறிப்பிட்ட வசனம், ‘எவர் தவ்பாச் செய்து, ஈமான் கொண்டு, நற்செயல்களைச் செய்தாரோ அவரைத் தவிர. அத்தகையோர், அவர்களின் தீமைகளை நன்மைகளாக அல்லாஹ் மாற்றிவிடுவான். அல்லாஹ் மிக்க மன்னிப்போனும், மிகக் கிருபையுடையோனுமாவான்’, என்று கூறுகின்றது. Continue reading

QURAN IS THE GUIDANCE

Assalaamu alaikum waraahmathullahihi wa’ barakathu!

The limited little time given to me to speak on the vast topic of “Quran is the Guidance’ is like, to ask a person to put the oceans of water in a coffee cup.  Insha Allah, I’ll try my best to fill the cup by tell few drops of cream from the  Quran’s guidance start with salaam. Continue reading

குழந்தை வளர்ப்பின் பத்து கட்டளைகள்

குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை. பொதுவாக எல்லோருமே குழந்தைகள் தாங்கள் நினைப்பது போல செயல்பட வேண்டும் என்றும், தாங்கள் விரும்புவது போல வளர வேண்டும் என்றும் நினைக்கின்றனர்.

குழந்தைகள் நமது கையில் இருக்கும் களிமண் போல. அதை நம்முடைய விருப்பத்துக்கு ஏற்ப வனைய முடியும். அதற்கு முக்கியமாக கீழ்க்கண்ட பத்து விஷயங்களைக் கவனிக்க வேண்டும். Continue reading