Daily Archives: November 21, 2013

இளமையைப் பாதுகாக்க….

பாதாம்   Almond Nut

பாதாம் பருப்பில் முதுமையை தடுக்கும் வைட்டமின் ‘ஈ’ அதிக அளவில் அடங்கியுள்ளது.ஆரோக்கியமான மேனி, தலைமுடி மற்றும் நகங்களை அளிப்பதில் பாதாமின் பங்களிப்பு அபாரமானது என்கிறார்கள் டயட்டீசியன்களும், அழகு கலை நிபுணர்களும்.பாதாமில் உள்ள வைட்டமின் ‘ஈ’, சூரியனின் புற ஊதா கதிர்கள், காற்று மாசு போன்றவற்றால் நோய் எதிர்ப்பு அணுக்கள் பாதிப்படைவதை தடுக்கிறது.நாளொன்றுக்கு 12 பாதாம் பருப்புகளை ஒருவர் உண்ணலாம் என்கிறார்கள் நிபுணர்கள். Continue reading

குர் ஆன் குறள் !

1. செய்யாவிடில் நீரும்செயப்பட மாட்டீர் அநியாயம்
பொய்யாத குர்ஆன் 2 : 279ல்

2. நேர்வழி யென்ப வேறல்ல அவனதே
சீர்பெறு ஆலஇம்ரான் 17

3. தேடுவீரோ தாழ்ந்ததை சிறந்ததை விடுத்துவேறு
கூவுதே பகறா61 லுமை Continue reading

Ibn Battuta – the great traveller

Ibn Battuta – the great traveller

Abu Abdullah Muhammad Ibn Battuta, also known as Shams ad – Din, was born at Tangier, Morocco, on the 24th February 1304 C.E. (703 Hijra). He left Tangier on Thursday, 14th June, 1325 C.E. (2nd Rajab 725 A.H.), when he was twenty one years of age. His travels lasted for about thirty years, after which he returned to Fez, Morocco at the court of Sultan Abu ‘Inan and dictated accounts of his journeys to Ibn Juzay. Continue reading

புனித பூமி மனிதர் வாழுமிடமில்லையா!

புனித பூமி மனிதர் வாழுமிடமில்லையா!

புனித பூமி என்ற இச்சொல் பழமையானது. பொருள் பொதிந்தது. இறையருள் பெற்றது. இதற்கு அனைத்துலக மக்களாலும் ஏற்கப்பட்ட வரைவிலக்கணமும் உண்டு.

அண்மைக் காலங்களாக இந்நாட்டில் சில பௌத்த மதத் துறவிகள் எனப்படுபவர்களால் தன்னிச்சையாகச் சில இடங்கள் புனித பூமிகள் எனக் கூறப்பட்டு. அவ்விடங்களில் பிற மதவழிபாட்டு நிலையங்கள் கூட இருக்கக் கூடாது என்ற வகையில், பலாத்காரமாக தகர்ப்பு வேலைகளில் கூட ஈடுபடுவதும், இறை தியானத்தில் ஈடுபட வந்தவர்களைத் தமது கடமையைச் செய்ய விடாது கலைத்த சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. Continue reading

குறைகாண முடியாத நிறைவான வல்ல நாயன் அல்லாஹ் பற்றி ஒரு நோக்கு…

தனது இறுதிச் செய்தியை உலகோருக்கு வெளிப்படுத்த ஏன் ஓர் எழுத,வாசிக்கக் கற்காத மனிதனைத் தேர்ந்தான் !  

                            ( சிறப்புக் கண்ணோட்டம்)

                  

வல்ல அல்லாஹ் ரப்புள் ஆலமீன் நபிமாரைத் தேர்ந்து அவர்கள் மூலம் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கில் வேதங்களை வழங்கினான். அப்படித் தெரிவு செய்யப்பட்டவர்கள் அனைத்து நபிமாரும் அறிவின் சிகரங்களாகவும், பண்பின் பிறப்பிடங்களாகவும், பொறுமையின் பொக்கிஷங்களாகவும், ஒழுக்கத்தின் விழுப்பங்களாகவும், உண்மையின் வாரிசுதாரர் களாகவும், நன்மையின் உறைவிடங்களாகவும், தன்மையின் உதாரணங்களாகவும் இருந்தே வந்துள்ளனர்.

பல்வேறு சிறப்பம்சங்களும் பொருந்தியவராக பால்ய வயதிலேயே திகழ்ந்த முஹம்மது அவர்கள் கல்வியை நாடாதிருந்தமைக்கான காரணம் எதுவும் இருந்திருக்கவில்லை. குழந்தையாக இருந்த போதே பெற்றாரை இழந்திருந்தாலும், அவர்களை வளர்த்தவர்கள் அக்காலை குறைசிகளான ஹாஸிம் கோத்திரத்தார். இவர்கள் கல்வியறிவு, ஆட்சி அந்தஸ்து, பணபலம், பொருட் செல்வம், மனித வளம் போன்ற அனைத்தையும் பெற்றிருந்த சீராளர்களே. ஆயினும், அவர்கள் ஏன் தம்மால் வளர்க்கப்பட்ட தமது பேரக்குழந்தையை, பெறாமகனை பாடசாலைப் பக்கம்கூட ஓதுங்க விடாது கல்வியை அவர்களுக்கு எட்டாக் கனியாக்கி, உம்மி  எழுத, வாசிக்கத் தெரியாதவர், அல்லது யாரிடமும் கல்வி பெறாதவர், யாராலும் கல்வி ஊட்டப்படாதவர் என்ற பட்டப் பெயருக்குச் சொந்தமாக்கினரோ தெரியவில்லை. Continue reading

பச்சைத் தேயிலை அருந்தி உச்ச நன்மை பெறலாம்

தற்போது உலகளாவிய ரீதியில் பச்சைத்தேயிலை அருந்தும் பண்பு நாளுக்கு நாள் அதிகரிப்பதற்கான காரணங்கள் மனித ஆரோக்கியத்துக்கான நன்மைகள் அதில் காணப்படுவதாகக் கண்டறியப்பட்டு உள்ளமையே.

நாம் தினசரி 3,4 கோப்பை பச்சைத்தேநீர் அருந்தவில்லை என்றால், நம் ஆரோக்கிய வாழ்வுக்காக நாம் எதையும் செய்துகொள்ளவில்லை என்ற அளவுக்கு பேசப்படுவதாகின்றது

பச்சைத் தேயிலையை நாம் ஏன் அருந்த வேண்டும் என்பதற்கு 25 உடல்நலத்துக்கான காரணங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. Continue reading