Monthly Archives: October 2013

முப்பசியின் முக்கியத்துவமும் இறையருளின் இரகசியமும் !

பசிகள் மூவகைத்து. அவை பாலியற் பசி அல்லது காமப்பசி, வயிற்றுப்பசி, அறிவுப்பசி என அறியலாம். இனவிருத்தியை மூலதாரமகக் கொண்டு முதற் பசியும், உயிரினங்களின் இயக்கத்தையும் சமநிலையைப் பேணி உலகைக் காப்பதையும் மையமாகக் கொண்டு உணவு தேடலான வயிற்றுப் பசியையும், இவற்றையெல்லாம் படைத்துப் பரிபாலிக்கும் சர்வ வியாபகனும், சர்வ வல்லமையுள்ள வனுமான இறைவனை அறிதலையும், ஆத்ம உய்வையும் மறைமுக நோக்காகக் கொண்டு மனித இனத்துக்கு மட்டும் அறிவுப் பசியையும் இறைவன் அளித்தமை அவனின் அருளே என்பதை சிந்திக்கக்கூடிய எவரும் மறுக்க மாட்டார். Continue reading

பதிப்பில் வராத கிடப்புகள் ….

                                              ஓட்டிய புலிகளை உவந்திட தகுமோ !                                                 விரட்டிய குற்றம் வேறுலகில் உண்டோ !

எட்டொண்ப தாண்டுகள் ஒட்டு மொத்தமாகப்
பட்டதை எண்ணிப் படைத்திடல் எளிதோ !
சுட்டதை யாற்ற மருந்துக ளுண்டோ !
விட்டதைப் பிடிக்க வித்தைக ளுண்டோ ! Continue reading

புனித பூமி மனிதர் வாழுமிடமில்லையா!

புனித பூமி மனிதர் வாழுமிடமில்லையா!

புனித பூமி என்ற இச்சொல் பழமையானது. பொருள் பொதிந்தது. இறையருள் பெற்றது. இதற்கு அனைத்துலக மக்களாலும் ஏற்கப்பட்ட வரைவிலக்கணமும் உண்டு.

அண்மைக் காலங்களாக இந்நாட்டில் சில பௌத்த மதத் துறவிகள் எனப்படுபவர்களால் தன்னிச்சையாகச் சில இடங்கள் புனித பூமிகள் எனக் கூறப்பட்டு. அவ்விடங்களில் பிற மதவழிபாட்டு நிலையங்கள் கூட இருக்கக் கூடாது என்ற வகையில், பலாத்காரமாக தகர்ப்பு வேலைகளில் கூட ஈடுபடுவதும், இறைதியானத்தில் ஈடுபட வந்தவர்களைத் தமது கடமையைச் செய்ய விடாது கலைத்த சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. Continue reading

இன்றைய காலகட்டத்தில் குர்ஆனியச் சட்டங்களும் – ஷரிஆச் சட்டங்களும் … சிறப்புப் பார்வை.

குர்ஆனை ஏற்றுள்ள முஸ்லிம்கள் அனைவரும் குர்ஆன் விலக்கிய வற்றையும், ஏவியவற்றையும் கடைப்பிடிக்கக் கடமைப்பட்டு உள்ளனர்.  இதனைப் பின்வரும் குர்ஆனிய வசனம் வலியுறுத்தும். 6:106 – ‘உம்முடைய ரப்பிடமிருந்து உம்பால் ‘வஹீ’ யாக அறிவிக்கப்பட்டதை நீர் பின்பற்றுவீராக…’ அதனைப் பின்பற்றுவோரே  உண்மை முஸ்லிம்கள். Continue reading

Useful Health Tips !

1. சோற்றுக் கற்றாழையைச் சித்த மருத்துவத்தில் ‘குமரி’ என அழைப்பர். காய கல்பத்தில் அதுவும் ஒரு மூலிகையாகச் சேர்க்கப்படுகின்றது. அதன் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை எடுததுச் சற்றே அலசிப் பின் மோரில் கலந்து தினம்தோறும் உண்டு வந்தால், அல்சர் போன்ற நோய்கள் குணமாகும். மேலும் உடலில் இளமைத் தன்மை அதிகரிக்கும். Continue reading

முஸ்லிம் மாதரின் முகத்திரைகள் -குர்ஆன் கூறுவதென்ன?

அண்மைக் காலமாக முஸ்லிம் மாதர் சிலர் முகத்திரை அணியத் தொடங்கியுள்ளார்கள். இது அனுமதிக்கப்பட்ட அல்லது குர்ஆன் குறித்துரைத்த ஆடை முறையா என்பதை ஆராயும் முன் உலக வாழ்க்கையில் இது எந்த அளவுக்கு ஏற்புடையது என்பதும், நடைமுறைச் சாத்தியமானது என்பதும், இதனால் ஏற்படக்கூடிய அசௌகரியங்கள், வழிகேடுகள், பிரச்சினைகள் போன்ற இன்னோரன்னவற்றையும் ஆராய்வது, ஆடை பற்றிய குர்ஆனியக் கருதுகோளைச் சரியாகப் புரிந்துகொள்வதிலும், இஸ்லாமியர் அல்லாதோர் இஸ்லாம் பற்றிக் கொண்டுள்ள தப்பான அபிப்பிராயங்களையும், மேலாக, இத்திரைகளை அணிவோர் அல்லது அப்படி அணிய வேண்டும் என்ற கருத்துக் கொண்டோரும், தமது பெண்களை அணியுமாறு வற்புறுத்துவோரும் அறிந்து கொள்ளவும், குர்ஆனிய வாழ்க்கையை மேற்கொள்ளவும் உதவியாக இருக்கும் என்பது என் வலுவான அபிப்பிராயம். Continue reading