Category Archives: Entertainments

எனக்குப் பிடித்தவை !

எனக்குப் பிடித்தவை !

எனக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பிடிக்கலாம். பிடித்தால் சுவையுங்கள்!

பெண்ணின் பெருமை, அருமையை, உரிமையை, உளப்பாங்கை உய்த்துணருங்கள். இறை படைப்பின், அனைத்தும் மனிதப் படைப்பில். எந்நதப் படைப்பிலும் காண முடியாத, அரிய பெரிய பண்புகள் விரவிக் கிடக்கின்றன. மனித உருவினுள். முடிந்தால் வெளிப்படுத்த முனையுங்கள். உலகே அமைதிப் பூங்காவாக மாறிவிடும். அதுவே இறை நோக்கமும். மறுமையிலும் வெற்றியாளர்களாகி விடலாம். வரவேற்க ஹுருலீன்கள் என்ற பார்வை தாழ்த்திய பருவம் மாறா, கைபடாத கன்னியர் காத்திருப்பர். Continue reading

ஹை கூ வில் காவு கொண்ட பா !

ஹை கூ வில்

காவு கொண்ட பா !

காவி !
பாவி !
கூவி !

தாவி!
ஏவி!
நோவி!

கொள்ளை!
கொள்ளி!
கொலை!

பழிப்பு!
களிப்பு!
தவிப்பு!

அழிப்பு!
ஒழிப்பு!
இழப்பு!

குவிப்பு!
காப்பு!
கலைப்பு!

நெறிதவறி!
தறிகெட்டு!
குறிவைத்தது!

சட்டம்!
ஒழுங்கு!
சகதியுள்!

யாப்பு!
கோப்பில்!
கிடப்பில்!

ஆ…!
ஓ…….!
ஊ….!

 

- நிஹா -

காற்றில் வந்தது!காதில் விழுந்தது!

காற்றில் வந்தது! காதில் விழுந்தது!

 

ஒரு பாடசாலை அதிபர் தனது பாடசாலையில் கிணறு கட்டுவதற்காக திணைக்களத்திலிருந்து நிதி பெற்றிருக்கின்றார்.

பின்னர் கிணறு கட்டப்படவில்லை என முறைப்பாடுகள் கிடைத்திருக்கின்றது. அதன் பின்னர்தான் தெரிய வந்தது, அவ்வதிபர், கிணற்று நீர் உவப்பாக இருந்ததாகக் கூறி, கிணற்றை மூடுவதற்கான பணத்தையும் ஏற்கனவே பெற்றிருந்தது.

இல்லாத ஒன்று, இருந்து இல்லாமல் போனது. இரட்டிப்புப் பணம் பெற்றது!

கற்பனை அல்ல! காற்றில் வந்தது! கூற்றில் வருகின்றது!

கள்ளனும் காவற்காரனும் எனலாமா!

 

- நிஹா -

இலக்கிய இன்பம்!

இலக்கிய இன்பம்!

 

நளன் – தமயந்தி காதை!

 

நள மகாராசன் வாழ்வில் கலி பிடித்து அவனை வாட்டியது. கட்டிய குற்றத்திற்காக அவன் அருமை மனைவி தமயந்தியும் மகனும் கஷ்டத்தை அனுபவிக்க வேண்டி வருகின்றது. வனத்தில் கட்டியிருந்த தனது ஆடையினையும், கலியின் சூழ்ச்சியால் இழந்து. மனைவியின் ஆடைக்குள் தன் மானத்தைக் காத்துக் கொள்கின்றான். நடுநிசியில், மனையாளைப் பிரியும் மனத்தோடு, ஆடையில் பாதியை கிழித்துக் கொண்டு வெளியேறுகிறான்.

கண் விழித்த போது கணவனைக் காணாத பெண் மயிலாள் செய்வதறியாது. அவனைத் தேடு பணிகளில் ஈடுபடுகின்றாள். கலியின் வலியால், அவனது உருவமும் மாற்றமடைந்து விட்டதால் தேடிக் கண்டு பிடித்தல் என்பது வெற்றியளிக்காது என்பதை உணர்ந்து தந்திரம் செய்கிறாள்.

பறை அறிவிப்பவனை அழைத்து தெருத் தெருவாக கீழ்க் கண்ட பாடலைப் பாடும்படி கூறுகின்றாள். அந்தப் பாடலைப் பாடினால், அது தன் கணவன் நளனின் காதுகளை எட்டுமாயின் அவன் பதில் தர வருவான். அதன் மூலம் அவன் உயிரோடு எங்கிருக்கின்றான், என்பதை உறுதிப்டுத்திக் கொள்ளலாம் என்பதுவே!

அப்பாடல்:

கானகத்துக் காதலியை காரிருளில் கைவிட்டுப்
போனதுவும் வேந்தர்க்குப் போதுமோ – என்று 
சாற்றினான் அந்தவுரை தார் வேந்தன் தன் செவியில்
ஏற்றினான் வந்தான் எதிர்.

தன்னைக் கண்டு கொள்வதற்கான தந்திரோபாயமே இது  என்பதை அறிந்த நளனும், தன்னையும் பிடி கொடுக்காது அதற்கு பதில் கொடுக்க முனைகின்ற காட்சியே பின்வரும் செய்யுளாக வருகின்றது.

ஒன்டொடி தன்னை உறக்கத்தே நீத்ததுவும்
பண்டைவிதியின் பயனே காண் – தண்டளரப் பூத்தாம
வெண்குடையான் பொன்மகளை வெவ்வனத்தே
நீத்தான் என்றையுரேல் நீ!

 

தமயந்திக்கு இச்செய்தி அறிவிக்கபபட்டு, தன்னருமைக் கணவன் உருமாறிய நிலையில் இருக்குமிடத்தைத் தெரிந்து கொள்கின்றாள்.

ஐந்தாறு தசாப்தங்களுக்கு முன்னர் படித்ததில் பிடித்து மனத்தில் இருந்து சுவைத்து மகிழ்ந்தது.

 

- நிஹா -