Category Archives: Essays

அசைவும் அடைவும்!

அசைவும் அடைவும்!

ஒரு மிகமிகச் சிறிய புள்ளியைச் சூழ வானம் பூமி, மிகப் பரந்த வெளி, உயர்ந்த பனி மலைகள், எரி மலைகள், ஆழமான மடுக்கள் கடல்கள், காடுகள், அருவிகள், ஆறுகள், நீர்நிலைகள், களனிகள், சோலைகள் என என்னென்னவோ, காணக் கூடியதாகவும், காண முடியாதவைகவும் இயற்கையில் அமைந்துள்ளன.

இவற்றில் நன்மைகளும், தீமைகளும், பயனுள்ளவையும், பயன் தருவனவும், இதம் தருபவையும். இன்னல் விளைப்பனவும், கேடு விளைப்பனவும், கெடுதி செய்வனவும், கொடுமை தருவனவும், படிப்பினைகளும், அத்தாட்சிகளும் என்று எண்ணில்லா தன்மைகளைக் கொண்டுள்ளவைகளாக இருக்கின்றன.

Continue reading

நல்லதை அறிந்திட முயன்றால் வல்லவன் உதவியும் கிட்டும்!

நல்லதை அறிந்திட முயன்றால்
வல்லவன் உதவியும் கிட்டும்!

 

நாயகம் அவணியில் உதித்தார்
நறுமணம் உலகில் கமழ
நற்செயல் தந்திடும் நன்மை
நயம்பட மனிதர்க்குரைத்தார்!

Continue reading

மனிதப் படைப்பின் மகிமை!

மனிதப் படைப்பின் மகிமை!

 

தன்னைத் தன் ஆற்றலை வெளிப்படுத்துவான் வேண்டிப் படைக்கப்படும் எப்பொருளும் அதன் உயர் மதிப்பைப் பெறவும், அதன் மூலம் படைப்பாளனை வெளிக் கொணரவும் வேண்டுவதால்,அவை சிற்பபான முறையில் பாதுகாக்கப்பட்டுப் பராமரிக்கப்பட்டு, வழிகாட்டப்படுகின்றது.

அது போன்றே இறைவனும் மனிதப் படைப்பை தன்னை வெளிப்படுத்தும் சாதனமாக்கியுள்ளான்.

முன்னையதில் படைப்பிற்கு அழிவு மட்டுமே எஞ்சும், பின்னையதில், இவ்வுலகிலும் மறுமையிலும் நன்மைகள் பல விளையும்!

 

- நிஹா -

 

வெண்புறா! சமாதானப் புறா!

 

வெண்புறா! சமாதானப் புறா!

 

புவனம் முழுதும் நிறைந்து

கவனம் சிதறாது பறந்து

ஆவணம் கொணர  விரையும்

சமாதானம் கூறும் புறாவே!

புராதனமான  உனது தூதை

சாதனமாக்க மறந்தனரோ!

வேதனை சூழ் வையத்திலே!

 

- நிஹா -

 

 

HOLY QURAN VERSE TO UNDERSTAND AND MEMORIZE !

அல் குர்ஆன் 10:39

என்றாலும், அதனுடைய ஞானத்தை அவர்கள் சூழ்ந்தறியாத காரணத்தினாலும், மேலும், அதன் விளக்கம் அவர்களுக்குக் கிடைக்காததாலும் அவர்கள் பொய்யாக்குகின்றனர். இவர்களுக்கு முன்னிருந்தோரும் இவ்வாறே பொய்ப்பித்தனர். ஆகவே, அந்த அநியாயக்காரர்களின் முடிவுஎன்னவாயிற்று என்பதைநீர் நோக்குவீராக!

- நிஹா -

 

Al Quran 10:39

Nay, they charge with falsehood that whose knowledge they cannot compass, even before the interpretation thereof hath reached them; thus did those before them make charges of falsehood: But see what was the end of those who did strong

 

– niha –

 

1

 

விவாதமா ஆய்வா உண்மையை வெளிப்படுத்த வல்லது!

விவாதமா – ஆய்வா உண்மையை வெளிப்படுத்த வல்லது!

மனித நடவடிக்கைகளில் மிக உன்னதமான இடத்ததை வகிப்பது உண்மையைக் கண்டறிவதே! அந்த வகையில் உண்மையைக் கண்டறியும் பல்வேறு வசதிகளும் வாய்ப்புகளும், உத்திகளும் இருந்தாலும்கூட ஒப்பு நோக்கல் comparative study மிகத் தெளிவான உண்மையைக் கண்டறிய உதவும் ஓர் பொறிமுறையாகப் பார்க்கலாம். Continue reading

பட்டம் நோக்கிய படிப்பால் கெட்டழியுது மாணவர் குழாம், தட்டழியுது சமூகம், விட்டொழிவது எப்போது?

பிரித்தானியரின் வருகைக்குப் பின்னரே, இந்நாட்டில் கல்வி . வளர்ச்சி அடையத் தொடங்கியது. அதற்கு முன்னைய காலப்பகுதியில் அமைப்பு ரீதியான கல்விச் சூழல் காணப்படவில்லை. குரு – சிஷ்ய முறைக் கற்பித்தலும், திண்ணைக் கல்வி முறையுமே காணப்பட்டதாகத் தெரிகிறது. இதற்கு மேல், வசதி படைத்தோர் வெளிநாடு சென்று கற்கும் சந்தர்ப்பம் மிகமிகக் குறைந்த அளவில் காணப்பட்டது. பிரித்தானியர் தமது நிர்வாகத்துக்கு ஏற்றவாறான இலிகிதர்களை உருவாக்குவதற்கு ஏதுவான கல்வி முறைமையையே இந்நாட்டில் உருவாக்கி இருந்தனர். அக்கல்வியின் அதி உயர் மட்ட இலக்காக, கலைப்பட்டதாரிகள் உருவாக்குவதும், அவர்களில் இருந்து போட்டிப் பரீட்சைகள் மூலம் நிர்வாக சேவைக்குத் தேவைக்கான சில ஆட்களைத் தேர்வதையும் தம்நோக்காகக் கொண்டிருந்தனர். நிர்வாகத்துக்குத் தேவையான பெரும்பாலோர் இறக்குமதி செய்யப்பட்டவர்களே. Continue reading

அன்று அரசவை துகிலுரிப்பு இன்று அரங்க ஆடையவிழ்ப்பு!

முழு மனித குலமும் வெட்கித் தலைகுனிய வைத்த செய்தியே பாஞ்சாலி துகிலுரிப்பு. உலக வரலாற்றைக் கறைபடுத்திய பல நிகழ்வுகளில் ஆதியானது. அந்நிகழ்வு உண்மையோ கற்பனையோ எதுவாயினும் அதனை இலக்கியமாகக் கொள்ளுதல் மனித நாகரிகத்தைக் குழிதோண்டிப் புதைப்பதே! தாய்க்குலத்தைத் தலைகுனிய வைப்பதே! அதனைப் பாடியோர் எவராயினும் இகழப்பட வேண்டியவர்களே! தவிர புகழப்படக் கூடியவர்கள் அல்லர். அக்கதையைப் பாடநூலாக்கிய அனைவரும் பகுத்தறிவற்ற ஜென்மங்களே! அதனைப் புத்தக வடிவில் கொணர்ந்தோர் சமூகக் குற்றவாளிகளே!

Continue reading