Monthly Archives: October 2013

அல்லாஹ்வுக்கு உருவம் உண்டா? இல்லையா? என்ற விவாதம் இறை விரோதக் கருத்தே!

மேற்கண்ட தலைப்பில் ஓர் விவாதம் அண்டை நாடான தமிழ்நாட்டில் நடை பெற்று, அது இணைய தளத்தில் ஊட்டுதல் செய்யப்பட்டு, ஒரு நண்பரால் எனக்குச் சிபாரிசு செய்யப்பட்டு, அதனைக் கேட்க வேண்டியேற்பட்டு, கேட்டதைத் துர்பாக்கியமாக நினைந்து வேதனைப்பட வைத்தது.

இந்த விவாதம்கூட சாதாரண மக்களால் முன்வைக்கப்பட்டிருந்தால் சரி போகட்டுமென விட்டு விடலாம்! ஆனால் அவ்விவாதம், தமிழ்நாட்டில், தம்மை இஸ்லாத்தின பிதாமகர்களாகக் கூறிக் கொண்டிருக்கும் இரண்டு இஸ்லாமியக் குழுவினரால், பிரமாண்டமான அளவில் பிரச்சாரம் செய்யப்பட்டு, ஏதோ ஓர் சாதனையைச் செய்வது போல் நடத்தப்பட்டமைதான் நமக்கு வேதனையையும், அதிர்ச்சியையும் தந்த விடயமாகும். இதனால் என்ன நன்மையை எவரும் அடைந்தனரோ! Continue reading

அளவானால் பலம்.. அதிகமானால்…..

‘பருப்பு வகைகளில் புரதச் சத்து, வைட்டமின் – பி காம்ப்ளெக்ஸ் ஆகியவை அதிகமாக இருப்பதால், உடல் வளர்ச்சிக்கு அவை வலிமை சேர்க்கின்றன
எந்த பருப்பை எப்பொழுது யாரல்லாம் சாப்பிடலாம்!
இதோ உங்களுக்கு…..
முழுவதும் படித்து பயன் பெறவும்…
ஆமாங்க ஷேர் செய்தால் உங்கள் நண்பர்களும் பயன் பெறுவார்களே! Continue reading

பி.ஜே யின் ‘திருக்குர்ஆன் விளக்கம்’ வழிகேடா !

மேற்படி பிஜே எனவழைக்கப்படும் பி. ஜைனுல் ஆபிதீன் அவர்களின் ‘திருக்குர் ஆன் விளக்கம்’ என்ற புத்தகத்தின் 243ஆம் பக்கத்தில் 2, 3,4ஆம் பந்திகளில் காணப்படும் வசனங்கள், 50:16 ஆம் வசனத்தின் பிற்பகுதியான ‘….. அன்றியும் பிடரியிலுள்ள நரம்பைவிட அவன்பால் மிக்க சமீபமாக இருக்கிறோம்’ என்ற வசனத்திற்கு விளக்கம் கொடுக்க முனைவன. அவரது விளக்கத்தை அவரது வார்த்தைகளிலேயே பதிவாக்குகிறேன்.  Continue reading

குர்ஆன் வழியில்… தங்கள் ரப்பினிடத்தில் தாங்கள் நாடியதைப் பெறுவோர்….


தங்கள் ரப்பினிடத்தில் தாங்கள் நாடியதைப் பெறுவோர்…. 

அல் குர்ஆன் 39: 33 – மேலும் உண்மையைக் கொண்டு வந்தவரும், அதனை உண்மைப்படுத்தி வைத்தவர்களும், அத்தகையவர்கள்தாம் பயபக்தி யாளர்கள்.

அல்குர்ஆன் 39:34- அவர்களுக்குத் தங்கள் ரப்பிடத்தில் அவர்கள் நாடி யவை உண்டு. அது நன்மை செய்கிறவர்களுக்குரிய கூலியாகும். Continue reading

குர்ஆனின் பார்வையில் … உபகாரத்திற்குப் பிரதியுபகாரமா? கூடவே கூடாது!

உபகாரத்திற்குப் பிரதியுபகாரமா? கூடவே கூடாது!

இன்று உலகளாவிய ரீதியில், மக்கள் மத்தியில் நன்றி செலுத்தல், நன்றி மறத்தல், நன்றி கொல்லல் போன்ற பல சொற் பிரயோகங்கள் சர்வசாதா ரணமாக உதவிகளோடு, அன்பளிப்புகளோடு சம்பந்தப்படுத்தப்பட்டுப் பேசப்படுவதை அனைவரும் அறி‌வோம்.

சிறு உதவியைச்  செய்தவர் தான் செய்த உதவியை, சம்பந்தப்பட்டவர் நினைவில் வைத்திருக்க வேண்டும், அதற்காக அவர் என்றும் கடமைப் பட்டவராக இருக்க வேண்டும், சந்தர்ப்பம் ஏற்படும் போது அவர் தனக்கு உதவுபவராகவோ, அன்றி தனக்கு ஒத்தாசை வழங்குபவராகவோ, இக்கட்டான நிலைகளில் தனக்காகப் பேசுபவராகவோ இருக்க வேண்டும் என்றே எதிர்பார்க்கிறார். Continue reading

அறிதலுக்காக சில குர்ஆன் வசனங்கள்

3:73 நிச்சயமாக நேர்வழியானது அல்லாஹ்வின் நேர்வழிதான்

6: 125 அல்லாஹ் எவருக்கு நேர்வழி காட்டிட விரும்புகின்றானோ அவருடைய நெஞ்சத்தை இஸ்லாத்திற்காக விரிவுபடுத்துகிறான்.

3:29 உண்மை விசுவாசிகள் விசுவாசிகளையன்றி உற்ற நேசர்களாக ஆக்கிக்கொள்ள வேண்டாம். எவரொருவர் இவ்வாறு செய்வாரோ அப்பொழுது அவர் அல்லாஹ்விடம் எந்த ஒன்றிலும் சேர்ந்தவரல்லர். ஒருவித அச்சத்தினால் நீங்கள் பயந்து கொண்டிருந்தாலன்றி. Continue reading

இறை இருப்பை அறிவிக்கும் அறிவியல் உண்மைகளும்; இறைவெளிப்பாடுகளும்

இப்பேரண்டத்தைப் வடிவமைத்து, படைத்து, விரிவுபடுத்தி, இற்றைவரை பரிபாலித்துவரும் வல்ல இறைவன் நாம் வாழும் இப்புவியை அமைத்துள்ள விதம் அவனது இருப்புக்குச் சான்று தருவனவற்றுள் முதன்மையானது. 2:117. வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றி, தானே உண்டாக்கினான். 27:61. இந்தப் புமியை வசிக்கத் தக்க இடமாக ஆக்கியவனும், அதனிடையே ஆறுகளை உண்டாக்கியவனும், அதற்காக (அதன் மீது அசையா) மலைகளை உண்டாக்கியவனும் இரு கடல்களுக் கிடையே தடுப்பை உண்டாக்கியவனும் யார்? இது சம்பந்தமாக விளக்கங்கள் தரப்புகின் அது தொடர் ஆகிவிடும். அதனால் சிலவற்றைக் கூறுகிறேன். Continue reading

நினைவில் நின்றவை 41 – உள்ளூர் பிரபலங்கள் ஒரு பார்வை …..

உள்ளூர் பிரபலங்கள் ஒரு பார்வை …..

எனது சமூக சேவையோடு தொடர்புள்ள வாழ்வில் நான் பலரைச் சந்தித்து, உறவாடி, பல்வேறு தேவைகளை நிறைவேற்றிய போது அவர்களது குணாதிசயங்களும், நடத்தைகளும், அறிவார்ந்த செயற்பாடுகளும், அவர்தம் நேர்மையும், உண்மைத் தன்மையும் என்னை வெகுவாகக் கவர்ந்தன. மட்டுமல்ல அவை என ஆளுமையிலும் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய மாற்றங்களை ஏற்டுத்தி இருந்தன. அவர்கள் பற்றி எனக்கிருந்த மதிப்பைவிட, என்னைப் பற்றி அவர்களுக்கிருந்த மதிப்பே சமூகத்தில் எனக்கு முக்கியத்துவத்தையும், முதலிடத்தையும் வழங்கின. எந்த விடயம் என்றாலும், அதற்காக பிரதிநிதி ஒருவரைத் தெரிவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும் போது, முதலாவது அவர்கள் கண்முன் தெரிவது நிஸாமாகவே இருந்தது என்று கூறுவதே எனக்குப் பெருமையாக உள்ளது. அந்தளவு அபிமானத்தை அவர்கள் என்மீது வைத்திருந்தார்கள். இதற்கு என்னிடம் காணப்பட்ட நேர்மை, உண்மை, பயமின்மை, பக்கச்சார்பின்மை, துணிவு, எந்த இடத்திற்கும் பொருந்திப் போகும் எனது ஆளுமை, தன்னலமின்மை, எதிர்பார்ப்பின்மை போன்ற இத்தியாதி காரணங்கள் இருந்தன. அவர்களது பார்வையில் நான் மிக உயர்ந்த நிலையிலும், அவர்தம் எண்ணத்தில் நான் இன்னும் உயர்நிலையை அடைய வேண்டும் என்ற அவாவும், எனது ப்ளஸ் பொயின்ட்ஸ் ஆகியிருந்தன. அதனால் எனது செயற்பாடுகள் தங்குதடையின்றி, பெரும் ஆதரவுடன் மேடையேறின. ஓவ்வொரு செயற்பாட்டிலும் ஒரு புதுமையும் மெருகும் ஏறியிருக்கும். ஆக்கபூர்வமான விமர்சனங்கள் வந்தமையால் இன்னும் திறமையாகச் செய்ய வேண்டும் என்ற உந்துதலுடன் எனது சிந்தனை ஓர் முகத்தை நோக்கியிருக்கும். மெழுகுதிரி போன்று ஒளிவீசி இருள்போக்கி நான் அழிந்துவிடவில்லை. மாறாக நானும் மெருகேறினேன், மணம் வீசினேன். அதன் பயனைப் பலரும் அநுபவித்தனர். Continue reading