Daily Archives: October 1, 2013

சிறுவர் தின வாழ்த்துப் பா

வாழ்க பல்லாண்டு

வாழ்க பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு
வளர்க்க வேண்டும் சிறார் கல்விகொண்டு
வெல்க உலகை நும் திறன் கொண்டு
விலக்குக வேற்றுமை திறந்த மனங் கொண்டு

ஓச்சுக உலகை அறிவுத் திறன் கொண்டு
பாய்ச்சுக அறிவைப் பொறிகொண்டு
பழக்குக ஒழுக்கம் மறை நெறி என்று
விளக்குக உளங்கள் திளைக்க வென்று

மாய்ச்சலை அறுத்து எதிர் கொண்டு
மேய்ச்சலை மறந்திடா நெறி கொண்டு
பாய்ச்சலை இலக்கினை தடைகள் வென்று
பாய்ச்சுக ஒளியை தீனின் பொருள் நன்று

- நிஹா -

2013.10.01

சிறார் கல்விச் சீரழிவால் நாடு நரகமாகியுள்ளதா? அன்றி மறுதலையா?

சிறுவர் தினத்தை  முன்னிட்டு இக்கட்டுரை பதிவாகின்றது

முன்னொரு போது இந்நாட்டில் ஒரு நிரந்தரக் கல்விக் கொள்கை இருந்து வந்ததைக் கல்வி வெள்ளை அறிக்கை வெளிப்படுத்துகின்றது. நாடு சுதந்திரம் அடைந்ததன் பின்னர் கல்வியில் மாற்றங்கள் செய்ய வேண்டி இருந்தமை அக்காலை உணரப்பட்டது. வெள்ளையர் தம் ஆட்சியில் தமக்குத் தேவையான சில கீழ்மட்ட, அல்லது நடுத்தரப் பதவி களுக்கான ஆட்புலத்தை உருவாக்கும் வகையில் நிலைமை அமைந்திருந்தமை காரணமாகலாம். ஆரம்ப ஆசிரியத் தொழிலுக்குக்கூட அந்நிய நாடுகளில், உதாரணமாக இந்தியாவில், இருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டி இருந்தது. ஆரம்பக் கல்வியின் கதியே இப்படி இருந்த தென்றால் உயர் கல்வி பற்றி யூகிக்காமலே அறிந்து கொள்ளலாம். சேர் ஐவர் ஜென்னிங்ஸ் பல்கலைக்கழக உப வேந்தராகவிருந்தது சரித்திரம். சிறுபான்மை மக்கள் பெரும்பான்மை யினருடன் சேர்ந்து வாழவேண்டும் என்ற கருத்தை விதைத்துச் சென்றவர் அவரே! அதில் உண்மை இல்லாமலும் இல்லை. Continue reading