Daily Archives: October 11, 2013

பதிப்பில் வராத கிடப்புகள் 3

              வெள்ளிக்கிழமை ஜும்ஆ நாளில் வெறியாட்டமும்              தம்புள்ள பள்ளிவாயல் தகர்ப்பும்

நேற்று இருபதாம் (20.04.2012) திகதி வெள்ளிக்கிழமை, அல்லாஹ்வால் கடமையாக்கப்பட்ட ஜும்ஆ விஷேட தொழுகையை மேற்கொள்ள விடாது, வணக்கவாளிகளைச் சொல்லாலும், கல்லாலும், பொல்லாலும் தாக்கி விரட்டி உள்ளனர். வணக்கவாளிகளின் மீதும் பள்ளியின் மீதும் காட்டுமிராண்டித் தனமான தாக்குதலுக்குத் தலைமை தாங்கி நடத்தியோர், காவியுடை அணிந்த பௌத்த குருமார் எனக் கூறப்படும் சில குண்டர்களும், பௌத்த பக்தர்கள் எனக் கூறிக்கொள்ளும் வெள்ளையுடை அணிந்த தருவிக்கப்பட்ட காடையர்களான ஆண்களும் பெண்களுமாவர். Continue reading

குர்ஆனின் பார்வையில் பிரபஞ்சம்…..

பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றி விஞ்ஞானிகள் தத்தமது அறிவின் எல்லைக்கேற்ப கூறிவந்த பல்வேறு கருத்துக்களை விஞ்ஞானம் அவ்வப்போது வெளிப்படுத்தி வந்துள்ளது. கிரேக்கர்கள் மத்தியில், அண்டவெளியில் காணப்பட்ட அழிவில்லாத ஏதோ ஒரு பொருளால் ஆக்கப்பட்டவையாக நட்சத்திரங்கள் இருக்கவேண்டும், என்ற கருத்து நிலவியது. உயிருள்ள ஒன்றின் பகுதியாக பிரபஞ்சமும், வானமும், பூமியும் பல கோடி ஆண்டுகட்கு முன்னர் தோன்றியிருக்க வேண்டுமெனவும், அவை, நாம் காணக்கூடிய தொலைவில் இன்று இருப்பதாகவும் சீனர்கள் அன்று எண்ணினர். நம் அறிவுக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியான ஏதோ ஒன்றால் பிரபஞ்சமும், வானமும், பூமியும் ஆக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் நம்பினர். Continue reading