Daily Archives: October 12, 2013

குர்ஆன் வழியில் …

நல்லொழுக்கமுள்ள பெண்கள் பணிந்தே நடப்பார்கள்

இவ்வசனத்தின் மூலம் பணிவு என்பது நல்லொழுக்கத்தின் பாற்பட்டது என்பது மிகத் தெளிவு.ஆயினும், பல விளக்கங்களையும் பல்வேறு பண்புகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது.பால், வயது, அந்தஸ்து, தரம், பதவி, இடம் போன்ற பல்வேறு தன்மைகளை வைத்து பணிவின் பண்பு அனுமானிக்க அல்லது வேறுபடுத்தப்படலாம்.
Continue reading

‘மை’ களில் உண் ‘மை’ கள்

நாட்டைப் பீடித்துள்ளதோ முடுமை
நாட்டில் நிலவுவதோ மிடிமை
தொடரின் இதுவே கொடுமை
தொடரவிடுவதோ மடமை
என்று மாறுமோ இந்நிலைமை
ஏனெனக் கேட்பதோ நம்முரிமை
தட்டாத பதில் தரல் அவர் கடமை
தட்டிக் கழிப்பதோ கயமை
ஏமாறி வாழ்ந்ததே நம் வழமை
ஏமாந்து சகித்ததோ இயலாமை
இனியும் தாங்காது வறுமை
இழப்பில் மடிவதோ பொறுமை
விழித்து எழுவதே முதன்மை
வீறு கொள்வதே அறிவுடமை
தேசத்தைக் காப்பது சீர்மை
சேதம் தவிர்ப்பது நேர்மை
பாத பூஜையோ பழமை
பழமை கழிவதே புதுமை
இழந்து நிற்பதே உண்மை !

தேசபக்தன்

உனக்கேன், உனக்கென்ன நஷ்டம், உனக்கென்ன இலாபம், உன் வேலையைப் பார் போன்றவை உலக அழிவை ஏற்படுத்துவதில் முதன்மையான பயங்கர ஆயுதம்!

கோர்ட்டில் கூட இந்த வசனங்களில் ஒன்றைக் கேட்ட போது நான் அப்படியே மலைத்து செய்வதறியாத நிலைக்குத் தள்ளப்பட்டேன். சட்டத்தின் காவலர்களான அதிசிரேஷ்ட நீதித் துறையினரின் வாய் உமிழ்ந்த விஷத்துளிகள் இவை என்றால் ஆச்சரியமாக இருக்கின்றதா?. இந்நிலை சட்டத்தின் தவறா? சட்டத்தை இயற்றியோரின் குற்றமா? சட்டங்களைத் தம் நன்மைக்காக கையாள்வோரின் கையாலாகாத்தனத்தால் ஏற்படும் கொடுமையா? மக்களின் முடியாமையின் மனோநிலை வெளிப்பாடா? அடக்குமுறையாளரின் அநியாயங்களின் விதைப்பா? கொடுமையை எதிர்க்கும் கொள்கைக்கு அடிக்கப்படும் சாவு மணியா? அநியாயத்துக்கு எதிரான போராட்டத்துக்கு அடிக்கப்படும் இறுதி ஆணியா? பிரித்தாளும் பிரபலங்களின் வஞ்சகமா? உரிமைகளைத் தட்டிப் பறிப்போருக்கு முண்டு கொடுத்து உற்சாகப்படுத்த உருவாக்கப்பட்ட ஊக்கிகளா?

இத்தன்மை நிலவும் எந்த நாடும் உருப்பட்டதாகச் சரித்திரமே இல்லை. எந்தச் சமூகமும் சிறப்பாக வாழ்ந்ததாகத் தெரியவில்லை. புத்தரையும், யேசுவையும், முஹம்மதையும் பின்பற்றுவதாகக் கூறிக் கொள்ளும் நாடுகளில் கூட இந்நிலைதான் என்பது வெட்கக்கேடான மனித அவலத்தை கோடிட்டுக் காட்டுகிறது. காட்டு மாடுகள்கூட சிங்க ராஜாவின் அக்கிரமத்துக்கெதிராக வீறு கொண்டெழும் கண்ணொளிகள் இணையங்களில் இடம் பிடித்துள்ள காலமிது. இந்தக் காலத்திலேதான் இவ்வவலங்கள் இழிகுணம் படைத்த மனித உருவிலான மலந்தின்னி ஆறறிவு மிருகங்களினால் மேடையேற்றப்படுகின்றமை மனித அவலத்தை விளக்க வல்லன. Continue reading

Wonders of Qur’an By Nasir Hussain Peerzadah

“Does man think that we shall not gather his bones” Yea! We are able to make complete his very finger tips.” (75:3-4)


Al-Qur’an was revealed to Prophet Muhammad. It took about 23 years for the complete revelation. The revelation was gradual and in parts. The message of holy Qur’an has been inspiring and revolutionary. The book has been unique in essence and profound in meaning. Human beings cannot produce even a single ayat like that found in Al-Qur’an. Continue reading

குர்ஆனை அறிவதற்கு மனிதனாக இருப்பதே அவசியம்!

25:44 – ”அல்லது, நிச்சயமாக அவர்களில் பெரும்பாலோர் விளங்கிக் கொள்கிறார்கள் என்று நீர் எண்ணிக் கொண்டீரா? அவர்கள் கால்நடை யைப் போன்றவர்களேயன்றி வேறில்லை;  அன்றியும், அவர்கள் பாதை யால் மிக வழிகெட்டவர்கள்.”

மேற்கண்ட வசனம் குர்ஆன் விளங்கிக் கொள்ளப்பட வேண்டியதன் அத்தி யாவசியத்தை நமக்கு உணர்த்துகிறது. மனிதன் என்ற அந்தஸ்தைத் தக்க வைத்துக் கொள்ள குர்ஆனை அறிந்திருக்க வேண்டியுள்ளது. மனிதனை மந்தைகளில் இருந்து வேறுபடுத்திக் காட்டுவதும் குர்ஆனிய அறிவே! விளங்கிக் கொள்ளாதவர்களை அல்லாஹ் கால்நடைகள் என்றே கூறியிருப்பது, நமக்கு தரப்பட்ட ஆறாவதறிவை, நுண்ணறிவை இலக்கு வைத்துக் கூறப்பட்டதே!.  இக் குர்ஆனை அவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? உய்த்துணர்ந்து நல்லறிவு பெற வேண்டாமா? போன்ற கேள்விகள் அல்லாஹ்வால், நாம் குர்ஆனில் உள்ளவற்றை சிந்திக்க வேண்டும், உய்த்துணர வேண்டும் என்ற தூண்டுதலை உருவாக்கும் வினாக்களாக வெளிப்பட்டுள்ளன.

புனித பைபிளில் கூட இதனையொத்த வசனம் காணப்படுகின்றது. இது வேதம் அறியப்படாத நிலையை வெளிப்படுத்துவது. Continue reading