3:73 நிச்சயமாக நேர்வழியானது அல்லாஹ்வின் நேர்வழிதான்

6: 125 அல்லாஹ் எவருக்கு நேர்வழி காட்டிட விரும்புகின்றானோ அவருடைய நெஞ்சத்தை இஸ்லாத்திற்காக விரிவுபடுத்துகிறான்.

3:29 உண்மை விசுவாசிகள் விசுவாசிகளையன்றி உற்ற நேசர்களாக ஆக்கிக்கொள்ள வேண்டாம். எவரொருவர் இவ்வாறு செய்வாரோ அப்பொழுது அவர் அல்லாஹ்விடம் எந்த ஒன்றிலும் சேர்ந்தவரல்லர். ஒருவித அச்சத்தினால் நீங்கள் பயந்து கொண்டிருந்தாலன்றி.

2:159 நிச்சயமாக தெளிவானவைகளையும், நேர்வழியையும் நாம் இறக்கி, அவற்றை மனிதர்களுக்காக நாம் விளக்கிய பின்னரும், எவர்கள் அவற்றை மறைக்கின்றனரோ அவர்களையே அல்லாஹ் சபிக்கிறான்.

4:105 அல்லாஹ் உமக்கு அறிவித்ததைக் கொண்டு மனிதர்களுக்கிடையே நீர் தீர்ப்பு வழங்கிடவே உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை உம்பால் நிச்சயமாக நாம் இறக்கியுள்ளோம். சதிகாரர்களுக்கு வழக்காடுபவராக நீர் ஆகிவிடாதீர்.

2:185 உங்களுக்கு இலகு அளிப்பதை அல்லாஹ் நாடுகின்றான். மேலும் உங்களுக்கு சிரமம் அளிப்பதை அவன் விரும்பவில்லை.

2:188 நீங்கள் அறிந்துகொண்டே மனிதர்களின் பொருட்களில் இருந்து ஒரு பகுதியை பாவமான முறையில் புசிக்கும் பொருட்டு அதை நீதிபதிகளிடம் கொண்டு செல்லாதீர்கள்.

2:279 அநியாயம் செய்யாதீர்கள் நீங்கள் அநியாயம் செய்யப்படமாட்டீர்கள்.

41:53 நிச்சயமாக இது உண்மையானதுதான் என்று அவர்கள் தெளிவாகும் வரையில் பல பாகங்களி லும், அவர்களிலும்,நமது அத்தாட்சிகளை அவர்களுக்கு நாம் காண்பிப்போம். நிச்சயமாக உமது ரப்பு ஒவ்வொரு பொருளின் மீதும் சாட்சியாளனாக இருக்கிறான் என்பது போதுமானதாக இல்லையா?

10:109 உமக்கு வஹீ அறிவிக்கப்படுகின்றவற்றையே நீர் பின்பற்றுவீராக! அல்லாஹ் தீர்ப்பளிக்கும் வரையில் நீர் பொறுமையுடன் இருப்பீராக! அவனே தீர்ப்பளிப்போரில் மிகச் சிறந்தவன்.

27:81 குருடர்களுக்கு அவர்களது வழிகேட்டை விட்டும் நேர்வழி காட்டுபவராக நீர் இல்லை. நம்முடைய வசனங்களைக் கொண்டு ஈமான் கொள்பவர்களைத் தவிர, நீர் செவியேற்கச் செய்திட முடியாது. இவர்கள்தாம் முஸ்லிம்கள்.

27:92 ‘இன்னும் குர்ஆனை நான் ஓதிக் காண்பிக்க வேண்டும் என்றும்’ எனவே, எவர் நேர்வழி பெறுவாரோ, அவர் நேர்வழி பெறுவதேல்லாம் அவருக்கே ஆகும். எவன் வழிதவறி விடுவானோ அப்பொழுது ‘நிச்சயமாக நானோ அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோரில் உள்ளவன்தான்’ என்று கூறிவிடுவீராக!

3:81 இன்னும் அல்லாஹ் நபிமார்களிடம், ‘நான் உங்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கொடுத்து, பின்னர் உங்களிடம் இருப்பதை உண்மைப்படுத்தி வைக்கும் ஒரு தூதர் உங்களிடம் வந்தால், நீங்கள் அவரை நம்பிக்கை கொண்டு, அவருக்கு நிச்சயமாக உதவிட வேண்டும் என்று உறுதிமொழி எடுத்த பொழுது நீங்கள் உறுதிப்படுத்தினீர்களா? இதன் மீது என்னுடைய வாக்குறுதியை நீங்கள் எடுத்துக் கொண்டீர்களா?’ என்று கேட்டான். ‘நாங்கள் உறுதிப்படுத்தினோம்’ என்று கூறினார்கள். ‘நீங்கள் சாட்சியாக இருங்கள், நானும் உங்களுடன் சாட்சியாளனாக இருக்கிறேன்’ என்று அவன் கூறினான்.

3:82 ஆகவே இதன் பின்னரும் புறக்கணிப்பாராயின், அத்தகையோர்தாம் தீயோர்.

3:83 அல்லாஹ்வின் மார்க்கம் அல்லாததையா அவர்கள் தேடுகிறார்கள்? வானங்களிலும் பூமியிலும் உள்ளவை விரும்பியோ அல்லது நிர்ப்பந்தமாகவோ அவனுக்குப் பணிந்து நடக்கின்றன. மேலும் அவர்கள் அவனிடம் மீட்கப்படுவார்கள்.

3:86 அவர்கள் இறைநம்பிக்கை கொண்டு, இன்னும், நிச்சயமாக இந்த தூதர் உண்மையாளர்தான் என்று சாட்சியம் கூறி, இன்னும் அவர்களுக்குத் தெளிவான ஆதாரம் அவர்களிடம் வந்த பிறகும் நிராகரித்து விட்டார்கள். ஒரு கூட்டத்ததாரை அல்லாஹ் எவ்வாறு நேர்வழியில் செலுத்துவான்? மேலும் அல்லாஹ் அநியாயக்கார கூட்டத்தினரை நேர்வழியில் செலுத்தமாட்டான்.

3:87 இத்தகையவர்கள் அவர்களுக்குரிய பிரதிபலனாகிறது, நிச்சயமாக அவர்கள் மீது அல்லாஹ், இன்னும், வானவர்கள், இன்னும் மனிதர்கள் அனைவரினதும் சாபங்களும் உண்டாகும்.

3:89 எவர்கள் இதற்குப் பின்னர் தவ்பாச்- மன்னிப்பு –  செய்து தங்களைச் சீர்திருத்திக் கொண்டார்களோ அவர்களைத் தவிர. திண்ணமாக அல்லாஹ் மன்னிப்பவனும், மிகக் கிருபையுடையோனுமாவான்.

3:90 நிச்சயமாக, எவர்கள் தாங்கள் ஈமான் கொண்ட பின்னர், நிராகரிப்போராகி, பின்னர் நிராகரிப்பை அதிகமாக்கிக் கொண்டனரோ, அவர்களது தவ்பா – மன்னிப்பு – ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது. மேலும் அவர்கள்தான் முற்றிலும் வழிகெட்டவர்கள்.

3:91 நிச்சயமாக, எவர்கள் நிராகரித்து, மேலும் நிராகரித்தவர்களாகவே இறந்து விடுகின்றனரோ, அவர்களில் ஒருவரிடம் பூமி நிரம்ப தங்கமாக இருந்து, அதனை அவர் இழப்பீடாகக் கொடுத்த போதிலும், அவரிடமிருந்து ஒப்புக்கொள்ளப்ட மாட்டாது. இத்தகையவர்களுக்கு நோவினை அளித்திடும் வேதனை உண்டு. அவர்களுக்கு உதவி செய்வோரும் இருக்கமாட்டார்கள்.

Composed by நிஹா