Monthly Archives: October 2014

UNDERSTAND THE QURANIC VERSES DAILY IN KNOWN LANGUAGE AND MEMORIZE!

தினமொரு திருமறை வசனம்  தெரிந்த மொழியில் மனனம் செய்ய!

அல் குர்ஆன் 53:39- 41

மனிதனுக்கு அவன் முயற்சி செய்தே அல்லாமல் இல்லை.

நிச்சயமாக அவனது முயற்சி விரைவில் காண்பிக்கப்படும் பின்னர்

அதற்கு முழுமையான கூலியாக  அவன் கூலி வழங்கப்படுவான்.

 

-    நிஹா –

Al Quran  53:39 – 41

That man can have nothing but what he strives for;

That his striving will soon come in sight;

Then he will be rewarded with a reward complete;

 

-  Niha  -

நற்சிந்தனை 27 ஜின்களிடம் வேலை வாங்குவது குர்ஆனால் அனுமதிக்கப்பட்டதா!

நற்சிந்தனை 27

 

ஜின்களிடம் வேலை வாங்குவது குர்ஆனால் அனுமதிக்கப்பட்டதா!

 

இந்த குர்ஆன் மனிதர்களுக்காகவும் ஜின்களுக்காகவுமே இறக்கி அருளப்பட்டது. மனிதர்களையும் ஜின்களையும் கொண்டே நரகம் நிரப்பப்படவிருப்பதாகவும், மனிதர்களும் ஜின்களுமே நரகின் எரிபொருளாகவும் ஆக உள்ளனர் என்பதும் இறைவன் கூற்றிலிருந்து நாமறிந்து கொள்வதே!

இதிலிருந்து மனிதனைப் போன்று, அல்லாஹ்வை ஈமான் கொள்ள வேண்டிய, பின்பற்றலுக்கு வேதங்கள் கொடுக்கப்பட்ட, மறுமையைச் சந்திக்க வேண்டிய, விசாரனைக்கு உட்படவிருக்கின்ற படைப்பினமே ஜின்கள் என்பது தெளிவாகின்றது. இவர்களிடம் அதீத சக்தி உண்டென்பது குர்ஆன்களின் பல வசனங்களில் இருந்து அிறிய வருகின்றது. ஆயினும், மனிதர்கள் அவர்களையும் வைத்து வேலை வாங்குபவர்களாகவே இருப்பது, குர்ஆனில் கூறப்பட்டுள்ளதோடு, மனிதர் படைப்புக்களில் எல்லாம் மிகச் சிறந்த படைப்பாக உள்ளதையும் சான்று பகர்கின்றது. மேலும், மனிதனுக்கு அ‌னைத்தையும் அல்லாஹ் வசப்படுத்திக் கொடுத்துள்ளான் என்பது உய்த்துணரப்பட்டால், மேற்கண்ட தலைப்பிலான வினாவுக்கு “ஆம்“ என்று ஓரே வார்த்தையில் கூறிவிடலாம்! Continue reading

Quran Kural ! குர்ஆன் குறள் !

குர்ஆன் குறள்

விரித்திடுவான் நெஞ்சத்தை இஸ்லாத்தின் பக்கல்
விரும்பிடில் காட்டிட நேர்வழி! 6:125

 

மடமையினால் கொன்றவர் அறிவின்றிக் குழந்தையை
அடைந்தனர் நட்டமுடன்வழி கேட்டை! 6:140

 

Continue reading

UNDERSTAND THE QURANIC VERSES DAILY IN KNOWN LANGUAGE AND MEMORIZE!

தினமொரு திருமறை வசனம்  தெரிந்த மொழியில் மனனம் செய்ய!

 

அல் குர்ஆன் 19:59

இவர்களுக்குப் பின்னர், தீய கூட்டத்தினர் பிரதிநிதியாக வந்தனர். தொழுகையை அவர்கள் வீணாக்கினார்கள். மனோ இச்சையையும் பின்பற்றினார்கள். ஆகையால் பெரும் கேட்டை அவர்கள் சந்திப்பார்கள்.

Continue reading

UNDERSTAND THE QURANIC VERSES DAILY IN KNOWN LANGUAGE AND MEMORIZE!

தினமொரு திருமறை வசனம்  தெரிந்த மொழியில் மனனம் செய்ய!

அல் குர்ஆன் 14:13

 

நிராகரித்துக் கொண்டிருந்தவர்கள், தங்களின் தூதர்களிடம், “எங்களின் பூமியை விட்டும் உங்களை நாங்கள் நிச்சயமாக வெளியேற்றி விடுவோம். அல்லது நிச்சயமாக நீங்கள் எங்கள் மார்க்கத்திற்குத் திரும்பி விடுங்கள் “ என்று கூறினார்கள். அப்போது, “அநியாயக்காரர்களை நிச்சயமாக நாம் அழித்திடுவோம்“ என்று அவர்களது ரப்பு அவர்களுக்கு அறிவித்தான். Continue reading

Health tips – சுவாசப்பையைக் காத்து சுகவாழ்வு பெற சில உணவுகள்.

சுவாசப்பையைக் காத்து சுகவாழ்வு பெற சில உணவுகள்.

நாம் உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமாகத் தேவைப்படுகின்ற காற்றை சுவாசிப்பதற்குக் கருவியாக இருப்பது சுவாசாசயம் எனப்படும் நுரையீரலே. இது தனது செயற்பாட்டை நிறுத்திக் கொண்டால் சில நிமிடங்களிலேயே நாம் இறப்பைச் சநத்திக்க வேண்டி வரும். ஆதலால், அதனைத் திடகாத்திரமாக வைத்திருக்க வேண்டியது நமது கடனே! Continue reading

நற்சிந்தனை 25 தொழுகையை நிலைநிறுத்துவதற்கான காலக்கெடு கூறுவதென்ன!

நற்சிந்தனை 25

 

தொழுகையை நிலைநிறுத்துவதற்கான காலக்கெடு கூறுவதென்ன!

 
வல்ல நாயன் அல்லாஹ் அருளாளன் அன்புடையோன். அதற்கொப்ப, ஈமான் கொண்டுள்ள தனது அடியார்களில் அவன் கொண்டுள்ள அளவற்ற நேசத்தை வெளிப்படுத்துவதற்காக , ஓர் கட்டாய கடமையாக அனைத்து முஸ்லிம்களாலும் தினமும் மேற்கொள்ளபபட்டு வரும் ஐவேளைத் தொழுகையின் அடைவு ஒன்றால் நாம நிலைநிறுத்தல் என்ற கட்டளையை, நமது வாழ்வு முடிவதற்குள் செய்து கொள்வதற்காகக் கொடுக்கபட்ட காலக்கெடுவே, மறுமைக்கு முன்னர் தொழுகையை நிலைநிறுத்துமாறு தரப்பட்ட எச்சரிக்கை. Continue reading