சுவாசப்பையைக் காத்து சுகவாழ்வு பெற சில உணவுகள்.

நாம் உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமாகத் தேவைப்படுகின்ற காற்றை சுவாசிப்பதற்குக் கருவியாக இருப்பது சுவாசாசயம் எனப்படும் நுரையீரலே. இது தனது செயற்பாட்டை நிறுத்திக் கொண்டால் சில நிமிடங்களிலேயே நாம் இறப்பைச் சநத்திக்க வேண்டி வரும். ஆதலால், அதனைத் திடகாத்திரமாக வைத்திருக்க வேண்டியது நமது கடனே!
நவநாகரிக உலகில் சூழல் மாசடைவதால் முதலில் பாதிக்கப்படுவது நுரையீரலே! புகை, தூசு, கிருமிகள் போன்றவை நாமறியாமலே காற்றோடு கலந்து நம்முள் அழையா விருந்தாளியாக நுழைந்து உடலுக்கும் குறிப்பாக சுவாசப்பைக்கும் ஊறு விளைவிக்கின்றது.
இது இன்றைய நிலையில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருப்பதால், நாம் நமது உணவின் மூலம் சுவாசப்பையைப் பலப்படுத்திக் கொள்வது ஒன்றே நமது சுவாசப்பைக்கு நாம் செய்யக் கூடிய மிகப் பெரும் உதவியாவிருக்கும். அதன் மூலமே நமது ஆயுளை ஆரோக்கியமாக பேண முடியும்.
அந்த வகையில் சில உணவுப், பொருட்களை ஆய்வாளர்கள் சிபாரிசு செய்துள்ளனர். அவற்றை உண்டு வருவது நமது சுவாசப்பையைக் காக்கும் ஆரோக்கிய வழிகளாக அமையும்.
1. மாது‌ளம் பழம்
2. வெங்காயம்
3. ஆப்பிள்
4. கி‌ரேப் ஃப்ரூட் ( பம்பளிமாஸ் )
5. கேரட்
6. பருப்புகள் (வால்நட், பாதாம், ஹஸ்ல்நட்)
7. தோடம்பழம் (ஆரஞ்சு)
8. அவரை (பீன்ஸ்)
9. மஞ்சள்
10. சவ்வரிசி

 

- நிஹா -