நற்சிந்தனை 27

 

ஜின்களிடம் வேலை வாங்குவது குர்ஆனால் அனுமதிக்கப்பட்டதா!

 

இந்த குர்ஆன் மனிதர்களுக்காகவும் ஜின்களுக்காகவுமே இறக்கி அருளப்பட்டது. மனிதர்களையும் ஜின்களையும் கொண்டே நரகம் நிரப்பப்படவிருப்பதாகவும், மனிதர்களும் ஜின்களுமே நரகின் எரிபொருளாகவும் ஆக உள்ளனர் என்பதும் இறைவன் கூற்றிலிருந்து நாமறிந்து கொள்வதே!

இதிலிருந்து மனிதனைப் போன்று, அல்லாஹ்வை ஈமான் கொள்ள வேண்டிய, பின்பற்றலுக்கு வேதங்கள் கொடுக்கப்பட்ட, மறுமையைச் சந்திக்க வேண்டிய, விசாரனைக்கு உட்படவிருக்கின்ற படைப்பினமே ஜின்கள் என்பது தெளிவாகின்றது. இவர்களிடம் அதீத சக்தி உண்டென்பது குர்ஆன்களின் பல வசனங்களில் இருந்து அிறிய வருகின்றது. ஆயினும், மனிதர்கள் அவர்களையும் வைத்து வேலை வாங்குபவர்களாகவே இருப்பது, குர்ஆனில் கூறப்பட்டுள்ளதோடு, மனிதர் படைப்புக்களில் எல்லாம் மிகச் சிறந்த படைப்பாக உள்ளதையும் சான்று பகர்கின்றது. மேலும், மனிதனுக்கு அ‌னைத்தையும் அல்லாஹ் வசப்படுத்திக் கொடுத்துள்ளான் என்பது உய்த்துணரப்பட்டால், மேற்கண்ட தலைப்பிலான வினாவுக்கு “ஆம்“ என்று ஓரே வார்த்தையில் கூறிவிடலாம்! Continue reading