நற்சிந்தனை 25

 

தொழுகையை நிலைநிறுத்துவதற்கான காலக்கெடு கூறுவதென்ன!

 
வல்ல நாயன் அல்லாஹ் அருளாளன் அன்புடையோன். அதற்கொப்ப, ஈமான் கொண்டுள்ள தனது அடியார்களில் அவன் கொண்டுள்ள அளவற்ற நேசத்தை வெளிப்படுத்துவதற்காக , ஓர் கட்டாய கடமையாக அனைத்து முஸ்லிம்களாலும் தினமும் மேற்கொள்ளபபட்டு வரும் ஐவேளைத் தொழுகையின் அடைவு ஒன்றால் நாம நிலைநிறுத்தல் என்ற கட்டளையை, நமது வாழ்வு முடிவதற்குள் செய்து கொள்வதற்காகக் கொடுக்கபட்ட காலக்கெடுவே, மறுமைக்கு முன்னர் தொழுகையை நிலைநிறுத்துமாறு தரப்பட்ட எச்சரிக்கை.

 

இச்செய்தியைத் தாங்கி நிற்கும் குர்ஆனிய வசனம் 14:31. ஈமான் கொண்டுள்ள எனது அடியார்களுக்கு எதில் கொடுக்கல் வாங்கலும், நட்பும் இல்லையோ அந்த நாள் வருவதற்கு முன் தொழுகையை அவர்கள் நிலைநிறுத்துமாறும், அவர்களுக்கு நாம் வழங்கியவற்றிலிருந்து இரகசியமாகவும், பகிரங்கமாகவும் செலவு செய்து கொள்ளுமாறும் நீர் கூறுவீராக!

 

மேற்கண்ட வசனத்தைக் கண்டு சிந்திக்கும் ஒருவர், அதில் குறிப்படப்பட்டுள்ள தொழுகையை நிலைநிறுத்தலுள் மறைந்து நிற்கும் பிரயாசையைக் குறித்துக் காட்டி இருப்பதையும், அந்நிலைநிறுத்தல் நடந்தே தீர வேண்டியுள்ள ஒன்றாக இருப்பதையும், அது இலகுவில் கைவல்யமாக்கிக் கொள்ள முடியாததுதான் என்பதையும், அதற்காககவே அல்லாஹ் தனது கருணை மேலீட்டால், அந்நிலை நிறுத்தலை அடைவதற்கான காலக்கெடுவை மறுமை வரையுள் நீடித்துள்ளமையில் இருந்து உணர்ந்து கொள்ள வேண்டியுள்ளது. வசனத்தின் இறுதியாக அவன் வழங்கியவற்றில் இருந்து இரகசியமாகவும், பகிரங்கமாகவும் செலவு செய்து கொள்ளுமாறும் நமக்கு அறிவுறுத்தியுள்ளதில் மறைந்துள்ள வழிமுறையையும் உய்த்துணர்வோர் அறிந்து கொள்வர்.

 

ஆதலால், தொழுகை என்பது ஸ்டீரியோ டைப் முறையில் தொழுது முடிப்பதல்ல என்பது, இவ்வசனத்தினைப் பார்த்ததன் பின்னராவது நம்மனதில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அப்படிஏதாவது தாக்கம் நமக்கு ஏற்பட்டுவிடுமானால் நாம் நாம் அதனை அறிவத‌ற்கான முயற்சிகளில் ஈடுபடுவோம். நாம் இவ்வாறான முயற்சிகளி்ல் ஈடுபடுகிறோம் என்பதனை அல்லாஹ்வும் அறிந்து விடுகின்றான். தனது அடியான் தன்வழியீல் முயன்று கொண்டிருக்கின்றான் என்றால் அவன், வழிகாட்டலை நமக்கு உரிமையாக்கி விடுவான்.

 

இப்போது, நாம் தொழுகையின போது, சூரா பாத்திஹாவில் விடுத்துள்ள வேண்டுகோளை அல்லாஹ் நிறைவேற்றி வைத்துவிட வேண்டிய கடப்பாடு காரணமாக அவனது வழிகாட்டல் நமக்கு வழங்கப்பட்டுவிடும். தொழுகையும் நிலைநிறுத்தப்பட்டுவிடும்.

 

தொழுகை நிலைநிறுத்தப்படுவதே அவனை நினைவுகூரலின் வெற்றிதானே! நினைவுகூரல் என்பது அவனைக் காணுவதன் மூலம் நிறைவேற்றப்படுவதால், நமக்கு 7:172இன் மூலம் அறிவுறுத்தப்பட்ட நினைவுகூரல் நிறைவு பெறுகிறது.

 

அல்லாஹ்வின் வாக்குறுதியான அவன் எல்லோருடைய பார்வைகளையும் அடைகின்றான் எ்னபதனைக் கண்கூடாக அறிகின்றோம், அவனது வாக்கும் நிறைவேறுகின்றது. நமது வேண்டுதலும் பதிலைப் பெறுகின்றது. நமது அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு என்ற சாட்சியமும் உண்மையாகின்றது. அல்ஹம்துலில்லாஹ்!

 

- நிஹா -