ஒழுக்கம் 2

 

மேலும் அறிய சாலும் லிங்க்:  http://factsbehind.net/wp/?p=1259

 

வள்ளுவப் பெருந்தகை 
தெள்ளிதிற் கூறினார்
ஒழுக்கம் விழுப்பம் தரலால் அது
உயிரினும் ஓம்பப்படும் என்று!

 
அல்லாஹ் தன் அருள் மறையில்
சொல்லால் தன் தூதரைப் புகழ்ந்தான்
நீர் உயர் குணத்தின் உன்னத
நிலையில் உள்ளீர் என்று!

 
ஒழுக்கமே மனிதனைத்
தாழவும் வைத்திடும்
வாழ்விலும் உயர்த்திடும்
வையகமும் வியந்திட!

 
ஒழுக்கமில்லா அறிஞனும்
இழிவடைவான்
ஒழுக்கமில்லா வீரனும்
அழிவுறுவான்!

 
அறிவு அந்தஸ்தில்லாவிடினும்
வீரம் விவேகமில்லாவிடினும்
விரும்பப்படுவான் அனைவராலும்
ஒழுக்கமுடையவனாயிருப்பின்!

 

 

- நிஹா -

 

மேலும் அறிய சாலும் லிங்க்:

http://factsbehind.net/wp/?p=1259