Daily Archives: April 2, 2014

உணவுக்காக மாடறுப்பது மிருக வதையா!

உணவுக்காக மாடறுப்பது மிருக வதையா!

 

மாடறுப்பது வதையாயின், இந்நாட்டின் பிரதான வளங்களில் இரண்டான மீன்பிடியைச் செய்ய முடியாது, விவசாயத்தில் உழவுக்கோ, சூடுமிதிப்புக்கோ மாடுகளைப் பயன்படுத்த முடியாது. Continue reading

Do you know the Stem Cells!

ஸ்டெம் செல் (STEM CELLS)

 

விஞ்ஞானி எர்நெஸ்ட் என்பவர் 1877இல் எழுதிய ஆந்த்ரோபோஜெனி (Anthropogenic) என்ற நூலில் முதன் முதலில் கரு முட்டைகளை (Fertilized egg) ஸ்டெம் செல் எனக் குறிப்பிட்டார். 

இலங்கையில் பிறந்த ஆரிப் பாங்சோ (Ariff Bongso) எனும் கரு ஆராய்ச்சியாளர்தான் உலகில் முதன் முதலில் 1994இல் மனிதனின் கருவிலிருந்து ஸ்டெம் செல்லைத் தனியாக பிரித்தவர். 
அமெரிக்க ஆராய்ச்சியாளர் ஜேம்ஸ் தாம்சன் ஸ்டெம்செல் பற்றி புத்தகமாக முதலில் வெளியிட்டாலும் ஆரிப் பாங்சோ அவர்களின் முயற்சிதான் ஸ்டெம் செல்லின் முக்கியத்துவத்தை உலகிற்கு உணர்த்தியது.

உயிர் என்பது உயிரணுக்களின் (செல்) இயக்கமே ஆகும். எல்லா உயிரினங்களிலும் உயிர் அணுக்கள் உண்டு.. ஸ்டெம் செல் எனும் அடிப்படை செல் பொதுவாகக் குழந்தை பிறக்கும்போது தாயுடன் பிணைக்கப்பட்டிருக்கும் நஞ்சுக் கொடி (umbilical cord blood)-யில் உள்ள இரத்தத்தில் அதிகமாக இருக்கும். மனிதனின் எலும்பு மஜ்ஜை (Bone Marrow)யிலும், இரத்தத்திலும், முதுகெலும்பு தண்டு வடத்திலும், நரம்பு மண்டலத்திலும், குடலிலும், தோலிலும் உள்ள திசுக்களிலும், அடிவயிற்றிலுள்ள கொழுப்பு திசுக்கள் சுற்றியும் ஸ்டெம் செல்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது . கரு ஸ்டெம் செல்களுக்கு நிகரான ஸ்டெம்செல்கள் தாய்ப்பாலிலும் இருப்பதோடு மட்டுமில்லாமல், தாய்ப்பால் சுரக்கும் மார்பகதிசுவிலும் இருப்பது ஆதாரப்பூர்வமாக நீரூபிக்கப்பட்டுள்ளது. 

ஸ்டெம் செல்கள் கண்டுபிடிப்பு மனித குலத்திற்கு கிடைத்த வரப்பிரசாதம் எனலாம்.. பரம்பரை நோய்கள் என்று சொல்லக்கூடிய நோய்களுக்கு காரணமான மரபணுவை நேரடியாக சரி செய்து அதனால் பாதிக்கப்பட்டுள்ள செல்களை குணப்படுத்துவதை தான் ஸ்டெம் செல் சிகிச்சை என்கிறோம். பாதிக்கப்பட்டவர்களின் செல்லை எடுத்து அதை கரு முட்டையாக மாற்றி வளர வைத்தால் செல்களின் பிரதிகளை உருவாக்க முடியும். பின்பு பாதிக்கப்பட்ட செல்களை நீக்கிவிட்டு இந்த புதிய செல்களை அங்கு பொருத்தினால் அவர்களை குணமாக்க முடியும். ஸ்டெம் செல்கள் தன்னைத் தானே புதுப்பித்துக்கொள்ளவும், தனிப்படுத்திக் கொள்ளவும் இயலும் என நிரூபித்தும் காட்டப்பட்டுள்ளது. ஒரு நோய்க்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு புதிய செல்களை உருவாகுவதைத் தான் ஸ்டெம் செல் சிகிச்சை விவரிக்கிறது. செல் சிகிச்சை பெரும்பாலும் செல்களில் இருக்கும் மரபணு திசுக்களை புதுப்பித்து நோய்களை இனம் கண்டறிந்து நீக்குகிறது. நோய் அல்லது காயம் ஏற்படும் நேரங்களில் சிகிச்சை செய்யும் போது பழுதடைந்தை செல்களை சரி செய்வதோடு மட்டுமில்லாமல் புதிய திசுக்களை உருவாக்குவதிலும் ஸ்டெம் செல் இன்றியமையாததாக திகழ்கிறது.

குணப்படுத்தவே முடியாது என்று கூறப்பட்ட வியாதிகளான சிறுநீரக செயலிழப்பு, இரத்தப் புற்று நோய் , நீரழிவு நோய் மற்றும் இருதயக் கோளாறு, எய்ட்ஸ், பார்கின்சன்ஸ் எனப்படும் மூளை முடக்குவாதம், அல்சமீர், தண்டுவட பாதிப்புகள், நரம்பு மண்டல பாதிப்புகள், பார்வை கோளாறுகள் உள்ளிட்ட பல நோய்களுக்கு இந்த சிகிச்சை முறை மேலான ஒன்றாகும். இந்த சிகிச்சை முறை நம் உடலின் அழகை மேலும் கூட்டும் அழகுக்கலையையும் விட்டு வைக்க வில்லை.. 

மருந்து, மாத்திரை, அறுவை சிகிச்சை இல்லாமல் மனிதனை ஆரோக்கியமாக வாழவைக்க இவ்வகை ஸ்டெம் செல்கள் உதவும் என்பதில் சந்தேகமே இல்லை. இந்தியாவிலும் அதிக அளவில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

- நிஹா -

Source: Web

Quran Kural! குர்ஆன் குறள்!

குர்ஆன் குறள்!

 

தவறாதிருக்க பாதுகாத் திடுவீர் உம்வழியை
தவறியோர் தாராரே தீங்கு 5:105

வெல்லாரே சொல்வோர் அல்லாஹ்மீது பொய்யை
வல்லோனே சொல்லுரானே 10:69இல்!

மாற்றானே அல்லாஹ் மாறாத சமுதாயத்தை
மாறுவதே அவரதம் கடமை! 13:11

நம்பிக்கையாளரைக் காப்பது கடமை என
தம்மீது கொண்டானே 10:103ல்!

கொள்ளாரே நம்பிக்கை மனதரிற் பெரும்பாலோர்
கொள்ளாதீர் பேராசை நீர்! 12:103

 

– நிஹா -

புதுக் கவிதைகள்!

புதுக் கவிதைகள்!

 

சீட்டுக்கட்டுகளுக்குள்
முடங்கிய இராஜாக்கள்
வோட்டுக் கட்டுக்களால்
மீள் பிரவேசம்!

 

அரசியல் யாப்பு தனிமனித
ஆராதனையின் கோப்பு,
காப்பு, வாய்ப்பு, ஏய்ப்பு!

- நிஹா -