Daily Archives: April 14, 2014

Quran Kural!

குர்ஆன் குறள்!

கண்டுகொள்க அத்தாட்சி நம்பிக்கை கொண்டோர்
கொண்டுளதே வானம்பூமி யதனை! 45:3

இருளிலிருந்து வெளியேற்றி அவனொளியின் பால்
அருளினானே குர்ஆனை ரப்பு! 14:1

கண்டிடுவீர் அத்தாட்சி விண்டுவிட உண்டுன்னுள்ளே
என்றிடுவான் 14:5 இல்!

குறைக்கின்றானே சுற்றிவர பூமிதனை காணலையோ
இறைமகிமை மண் மீது! 13:41

அழித்திடுவோம் நிச்சயமாய் அநியாயக்காரரை என்று
அறிவித்தானே ரப்பு 14:13இல்!

- நிஹா -

பகை அழிக்கும் சுவைமிகு விளாம்பழம்!

பகை அழிக்கும் சுவைமிகு விளாம்பழம்!

 

விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம்புச் சத்தும், வைட்டமின் ஏ சத்தும் உள்ளது. இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும். Continue reading

HOLY QURAN VERSE TO UNDERSTAND AND MEMORIZE !

HOLY QURAN VERSE TO UNDERSTAND AND MEMORIZE !

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண!

அல் குர்ஆன் 38:29

பாக்கியமிக்க வேதமாகும். இதனுடைய வசனங்களை அவர்கள் சிந்திப்பதற்காகவும், அறிவுடையோர் நல்லுபதேசம் பெறுவதற்காகவும், இதை உம்பால் நாம் இறக்கிவைத்தோம்.

Al Quran 38:29

A Book which We have sent down unto thee., full of blessings. That they may meditate on the Signs, and that men of understanding may receive admonition.

– நிஹா -