Daily Archives: June 22, 2014

காவியுடைப் பாவி !

காவியுடைப் பாவி !

ஞானசாரர் என்பவதவர் பேராம்
நாசம் விளைவிப்பதே அவர் கூறாம்
பானமருந்திப் பத்திரமுமின்றி வாகனம் ஓட்டியதால் மன்றில்
மானம் இழந்து நின்றானாம்!

கலபொட அத்த ஒரு தேரர்
கலபொல செய்வதில் கை  தேர்ந்தார்
கள்ளமிலா முஸ்லிம்களைத் தொல்லையில் ஆழ்த்திவிட
கொள்ளை கொலை செய்திடுவார் பாரீர்!

காவியுடையில் திரியும் ஓர் பாவி
நாவு கூசாது பேசிக் குர்ஆனைப் பழிக்கும் மூதேவி
காவு கொள்ளும் எண்ணத்துடன் காடையரை ஏவியதால்
காவு கொண்டான் முஸ்லிம்களைப் பாவி!

– நிஹா -

 

 

 

 

நற்சிந்தனை 9 ! தானத்தின் மேன்மை தானம் பெறுதலில் !

நற்சிந்தனை!

தானத்தின் மேன்மை தானம் பெறுதலில் !

இறை சந்நிதானத்திற்கே நம்மை உயர்த்துகின்றது தானம். தவத்தினால் பெற முடியாத வற்றையதவற்றையும் தானம் நமக்களித்துவிடுகின்றது.

தானம் பெ?றுவதற்கு யாருமில்லாவிடில் எப்படி தானத்தினால் பெறும் பெரும் பயனை நாம் அடைவோம் என நாம் சற்ற சிந்தித்தால், தானம் கேட்பவனை, மானங்கெட்டவன் என நினைக்கவாவது முடியுமா!

தானம் பெறுபவன் நமக்கு சுவனத்திற்கு பாலமாக அமைபவனல்லவா!

– நிஹா -