அவ்லியாக்கள் என்ற இறைநேசர்களின் கபுறை முஸ்லிம்களில் எவரும் வணங்குகின்றார்களா! ஓர் கண்ணோட்டம்!

அண்மைக் காலமாக, தௌஹீத் ஜமாஅத் என்ற பெயரில் இயங்கிக் கொண்டிருப்போர், ஸியாரத்துச் செய்பவர்களை, சிறப்பாக, அவ்லியாக்கள் என்ற இறைநேசர்களின் கப்ர் என்ற அடக்கத்அ தலங்களைத் தரிசிப்போரை, “கபுறு வணங்கிகள்“ என்று கூறி, அவர்கள் ஷிர்க் என்ற இணைவைப்பில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டிக் கொண்டும், அவர்களைப் பழித்துரைத்துக் கொண்டும், அவமானப்படுத்திக் கொண்டும், அப்படி அவர்களை அத்துமீறி விமர்சிப்பதையே தமது முக்கிய குறிக்கோளாகவும், அழைப்புப் பணியாகவும் செய்து கொண்டிருக்கின்றனர்.

இறைநேசர் என்ற அவ்லியாக்கள் பற்றி அல்லாஹ் தனது அருள் மறையில், அவர்கள் அச்சப்டவும் மாட்டார்கள், கவலைப்படவும் மாட்டார்கள் என்று கூறுகின்றான். Continue reading