1. புனித குர்ஆன் புகழ்மிகு அல்லாஹ் சுபுஹானஹுவ தஆலாவால் அரபு மொழியில் அருளப்பட்டதை அறியாதோர் இலர். ‘நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக இதனை அரபியிலான குர்ஆனாக நிச்சயமாக நாமே இறக்கி வைத்தோம்’ ( 12:2 ) என அவனே விதந்துரைக்கின்றான். அதாவது, இதன் கருத்து உலக மக்கள் எல்லோரும் அரபு மொழியில் எழுதினால் விளங்கிக் கொள்வர் என்பதல்ல. அரபி மொழியில் எழுதப்பட்டால், உலக முடிவு வரையான, அனைத்து சாராருக்கும், அனைத்து சந்தர்ப்பங்களுக்கும் பயன்தரக்கூடிய, இறைவனின் விருப்பத்தைப் பரந்துபட்ட அளவில், உயர்ந்தபட்ச நிலையில், சிறந்த முறையில் வெளிப்படுத்தக் கூடியவாறு, விரிவான கருத்தை மிகத் தெளிவாக, இலகுவாக, விளங்க வைக்க முடியும் என்பதே! அத்தோடு அரபு மொழியே தெரியாத எழுத்தறிவற்ற அரபியான முஹம்மது (ஸல்) அவர்கள் மூலம் இதனை அனுப்பியது தன்னை (அல்லாஹ்வை)த்தவிர வேறு யாருமில்லை என்பதை விளங்கிக் கொள்ள என்பது போன்ற பல கருத்துக்களை வெளிப்படுத்துவதுமாகும். Continue reading
Daily Archives: October 27, 2015
அல்-குர்ஆனின் மொழிபெயர்ப்புக்களில் அடைப்புக் குறிகளினால் (Parentheses) தோற்றுவிக்கப்படும் விபரீதங்கள்
Leave a reply