Daily Archives: December 22, 2013

அறு சுவைகளின் குணம்!

சாப்பிடும் ஒழுங்கு!

முதலில் இனிப்பு. அடுத்து, புளிப்பு, உப்பு, காரம், கசப்பு, இறுதியில் துவர்ப்பு. இப்படி சாப்பிடுவதனால் பஞ்ச பூதங்கள் சமநிலை பெறும்.

உண்டபின்….

- தயிரும், உப்பும் கலந்துண்டால், உணவில் கலந்துள்ள வாத, பித்த,         ரசங்கள் எனும் முக்குற்றங்களும் நீங்கிடும்.
- நோய் தோன்றுவதற்கான காரணிகள் அகன்று விடும்.

அறுசுவைகளை உண்டால் மாத்திரம் போதாது, சில வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.
- உரிய காலத்தில் உண்ணல்.
- சூரியோதய, அஸ்தமண காலத்தில் உண்பதைத் தவிர்த்தல்.
- கோபம், கவலை, துக்க நேரங்களில் உணவு உட்கொளாது தவிர்த்தல்.
- நின்று கொண்டு, கையை ஊன்றிக் கொண்டு உண்பதை விலக்கல்.

உண்ணலும் திசைகளும்:
- கிழக்கு நோக்கியிருந்து உண்டால் ஆயள் அதிகரிப்பு
- தெற்காயின் புகழ்
- மேற்காயின் செல்வம்
- வடக்காயின் அழிவு

எங்கோ, எப்போதோ வாசித்தறிந்தவை!

- நிஹா -

வாக்கு பற்றி நோக்குகள் சில!

வாக்கு பற்றி நோக்குகள் சில!

வாக்குகளை ஞாபகமூட்ட அவதரித்த தூதரனைவரும்
தோற்றுப்போன இடமும் அதுவே!

பிரபஞ்ச மனைத்தும் இறை வாக்கால்
பிரயாணித்துக் கொண்டிருப்பனவே!

இறைவாக்கு படைப்பின் மூலம்.
மனித வாக்கு கிடப்பின் அவலம்! Continue reading