Monthly Archives: November 2014

UNDERSTAND THE QURANIC VERSES DAILY IN KNOWN LANGUAGE AND MEMORIZE!

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண !

அல் குர்ஆன் 29:69

 
மேலும், எவர்கள் நம்முடைய வழியில் முயற்சிக்கிறார்களோ, அவர்களை நிச்சயமாக நம்முடைய நேரான வழியில் செலுத்துகின்றோம். நன்மை செய்வோருடன் நிச்சயமாக அல்லாஹ் இருக்கின்றான்.

 

- நிஹா -

 

Al Quran  29:69

 

And those who strive in Our – We will certainly guide them to Our Paths: For verily Allah is with those who do right. 

 

- niha -

நாம் செல்ல வேண்டிய வழியை உறுதி செய்து கொள்வது எப்படி!

நாம் செல்ல வேண்டிய வழியை உறுதி செய்து கொள்வது எப்படி!

நாம் ஓரிடத்துக்குச் செல்ல வேண்டியிருந்தால், அதற்கான ஆயத்தங்களைச் செய்வதோடு போகவுள்ள பாதை பற்றிய அறிவு வேண்டப்படுகின்றது. காரணம், பாதையே நாம் செல்ல வேண்டிய இலக்கை அடைவதற்கு உறுதுணையாயிருப்பது. ஒரு இலக்கை அடைவதற்குப் பல பாதைகள்கூட இருக்கலாம். அத்தனை பாதையிருந்தும் சில வேளை புதிய பாதை ஒன்றைப் போட்டுச் செல்ல வேண்டிய நிலைமைகூட காணப்படலாம். குறுக்கு வழிப் பாதைகள், ஒற்றையடிப் பாதைகள் எனப் பல்வேறு வகைத்தானவையும் உண்டே! இவை பாவிப்பவர்களின் திறன், அறிவு, அனுபவம், தேவை, வசதி என்பவற்றை உள்ளடக்கி அவரவர்களின் தெரிவுக்கு உள்ளாகும்.

Continue reading

நாடு போகிற போக்கில் நாட்டு மக்களின் சுயாதீனம்…. ஒரு பார்வை!

நாடு போகிற போக்கில் நாட்டு மக்களின் சுயாதீனம்…. ஒரு பார்வை!

நாட்டின் அரசியலமைப்பைப் பாதுகாப்பேன் எனப் பயபக்தியோடு சத்தியஞ் செய்து பாராளுமன்ற அங்கத்தவர்களாகப் பதவி வகிப்போர் அவர்கள் சத்தியம் செய்து எடுத்த உறுதிமொழியைப் பாதுகாக்கத் தவறியுள்ளதன் மூலம், பாராளுமன்றின் சிறப்புரிமைகளை மீறியுள்ளனரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அன்றி மக்கள் அவர்களிடம் அளித்திருந்த நம்பிக்கைப் பொறுப்பை மீறியுள்ளனரா! அல்லது இரண்டுமா!

யாப்பின் Xஆவது உறுப்புரையின் 63ஆவது பந்தியில் கூறப்பட்ட சத்தியத்தைச் செய்து அதனைச் செயற்படுத்தத் தவறியமை, பாராளுமன்ற அங்கத்தவரது தலையாய கடமையைச் செய்யாமல் புறக்கணித்ததாக அமையுமானால், அந்த அங்கத்தவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை என்ன? அவர்கள் பாராளுமன்ற அங்கத்துவத்தை இழந்தமையாகக் கொள்ள முடியுமா? என்பதும் ஓர் முக்கிய விடயமாகக் கருதப்பட வேண்டியதே! சத்தியம் செய்த பின்னர் அதனை நடைமுறைப்படுத்தாதவர்கள் பற்றிய நடைமுறைச் சட்டமென்ன? Continue reading

நற்சிந்தனை 32 அல்லாஹ்வை மறவாது அவனும் நம்மை மறக்காதிருக்க வழி தேடுவோம்!

நற்சிந்தனை 32

அல்லாஹ்வை மறவாது அவனும் நம்மை மறக்காதிருக்க வழி தேடுவோம்!

 
அல் குர்ஆன் 59:19 அல்லாஹ்வை மறந்து விட்டவர்களைப் போன்று நீங்களும் ஆகிவிட வேண்டாம். ஏனென்றால், அவன், அவர்கள் தங்களையே மறக்குமாறு செய்துவிட்டான்!

மேற்கண்ட வசனத்தில் முன்னைய கூட்டம் ஒன்று அவனை மறந்தது பற்றியும், அதனால் அல்லாஹ், அவர்களைத் தங்களையே மறக்கும்படி செய்து விட்டான் என்ற ஒரு உண்மையை வெளிப்படுத்தி நம்மையும் அப்படி ஆகிவிட வேண்டாம் என எச்சரிக்கின்றது.

இச்சம்பவத்தில் இறுதி இழப்பு அல்லது தண்டனை அல்லது விளைவு நம்மை அவன் மறந்து விடுவதுடன், நம்மை நாம் மறந்து விடவும் செய்வதிலுள்ள பாரதூரம் விளங்க வேண்டியது. எதற்காக நாம் நம்மை மறக்க வேண்டிய நிலையை அடைந்துள்ளோம் என்பதை ஒப்புநோக்கின்அல்லாஹ்வை மறந்ததற்காகக் கொடுக்கப்பட்டதனைக் காண்கின்றோம். Continue reading

UNDERSTAND THE QURANIC VERSES DAILY IN KNOWN LANGUAGE AND MEMORIZE!

 தினமொரு மறை வசனம் மனனம் பண்ண !

 

அல் குர்ஆன் 59:19
அல்லாஹ்வை மறந்து விட்டவர்களைப் போன்று நீங்களும் ஆகிவிட வேண்டாம். ஏனென்றால், அவன், அவர்கள் தங்களையே மறக்குமாறு செய்துவிட்டான்!

- ‌ நிஹா -

AlQuran 59:19

 

And be ye not like those who forgot Allah: and He made them forget themselves! Such are the rebellious transgressors!

 

- niha -

நீதி அழிந்ததுமில்லை! அநீதி இழியாதிருந்ததுமில்லை!

நீதி அழிந்ததுமில்லை!
அநீதி இழியாதிருந்ததுமில்லை!

 
உயர்வில் பணிவு வீழ்ச்சியைத் தடுக்கும்
வியந்து போற்றிப் புகழ்ந்தும் பேசும்
நயந்து வாழ்ந்திட வழியையும் சேர்க்கும்
பயந்திடா நிலையை பாரினில் வளர்க்கும்!

பதவி கிடைப்பது பழிசெய வல்ல
பதவியால் இழிவினை அடைந்திடா வழியில்
முதலாய் அதனை நிதமும் கொண்டு
உதவியே வாழ்ந்து உலகினை வெல்ல! Continue reading

QURAN KURAL !

குர்ஆன் குறள்!

 
 

ஞானம் நிறைந்தது அலிப்லாம் றாவென
கானம் பாடுவது 10:1

 

கூறுவீர் நற்செய்தி ரப்பிடத்தில் உயர்பதவி
நேருமே நம்பிக்கையாள ருக்கு 10:2

 

படைத்தபின் நிவையானான் அர்ஷின் மீதவனே
பாலிக்கின்றான் தனித்துத் தானே! 10:3

 

ஆரம்பப் படைப்பனைத்து மவன் செயலே
அறிந்திட 10:4 பார்!

 

ஈமானும் நற்செயலும் நேர்வழி பெறும்
இன்பமான சுவனச்‌‌சோலை வரும் 10:9

 

– நிஹா -

UNDERSTAND THE QURANIC VERSES DAILY IN KNOWN LANGUAGE AND MEMORIZE!

 தினமொரு மறை வசனம் மனனம் பண்ண !

அல் குர்ஆன் 19:59

இவர்களுக்குப் பின்னர், தீய கூட்டத்தினர் பிரதிநிதியாக வந்தனர். தொழுகையை அவர்கள் வீணாக்கினார்கள். மனோஇச்சையையும் பின்பற்றினார்கள். ஆகையால், பெரும் கேட்டை அவர்கள் சந்திப்பார்கள்.

 

- நிஹா -

 

Al Quran 19:59

 

But after them there followed a posterity who missed prayers and followed after lusts soon, then, will they face Destruction.

 

- niha -

கோடியில் ஒருவனாய் வாழே!

கோடியில் ஒருவனாய் வாழே!

கொள்கையில் திளைத்திட வேண்டும்
கோள்குண்டணி தவிர்த்திட வேண்டும்
உள்ளமை அறிந்திட வேண்டும்
உண்மையில் நிலைத்திட வேண்டும்!

கிள்ளியும் கொள்கை வளர்க்கும்
கள்ளர்கள் கொடுமை களையனும்
அள்ளியும் சென்றிடும் அற்பர்
உள்ளேயும் அனுப்பிட வேண்டும்! Continue reading

பள்ளிகள் கண்டிடில் உள்ளம் பதறியே அழித்திட எண்ணும்!

பள்ளிகள் கண்டிடில் உள்ளம்
பதறியே அழித்திட எண்ணும்

 

 

நாணத்தின் எதிர்ச் சொல் ஞானசார
மானத்தின் எதிரும் அதுவே
தானத்தின் அடைவும் அதுவே
ஞானத்தின் எதிரும் ஞானாவே!

பானத்தின் ஒத்த சொல் ஞானா
கோணல் குணத்துக்கும் அதுவே
தினம் தினம் தொல்லையும் அழிவும்
தேனாய் இனித்திடும் மதுவும்! Continue reading