Category Archives: Knowledge

முன்ஜென்மம் – ஓர் சிறப்புக் கண்ணோட்டம்

முன்ஜென்மம் – ஓர் சிறப்புக் கண்ணோட்டம்

அறிமுகம்- முன் ஜென்மம் பற்றிய பல தகவல்களை ஏலவே அறிந்திருந்தாலும் அவை பற்றி எழுதும் எண்ணம் எனக்கு என்றும் ஏற்பட்டதில்லை. காரணம் அந்த விடயத்தில் ஏதோ ஒரு விதத்தில், நாமறியாத சில உண்மைகள் பொதிந்துள்ளன என நான் எண்ணியிருந்ததே! அப்படியானவைகள் மக்களால் விளங்கிக் கொள்ளப்பட்ட விதத்தில் குளறுபடிகள் இருக்க வேண்டும் என்பதும் எனது எண்ணம். அதற்குக் காரணம், அது போன்ற, ஏழு ஜென்மம் அல்லது அதற்கு மேலும் எடுக்கும் கொள்கைகள் எப்படியோ மதங்களின் பெயரால் கூறப்பட்டுக் கொண்டிருந்தமையே!

Continue reading

அவ்லியாக்கள் என்ற இறைநேசர்களின் கபுறை முஸ்லிம்களில் எவரும் வணங்குகின்றார்களா! ஓர் கண்ணோட்டம்!

அவ்லியாக்கள் என்ற இறைநேசர்களின் கபுறை முஸ்லிம்களில் எவரும் வணங்குகின்றார்களா! ஓர் கண்ணோட்டம்!

அண்மைக் காலமாக, தௌஹீத் ஜமாஅத் என்ற பெயரில் இயங்கிக் கொண்டிருப்போர், ஸியாரத்துச் செய்பவர்களை, சிறப்பாக, அவ்லியாக்கள் என்ற இறைநேசர்களின் கப்ர் என்ற அடக்கத்அ தலங்களைத் தரிசிப்போரை, “கபுறு வணங்கிகள்“ என்று கூறி, அவர்கள் ஷிர்க் என்ற இணைவைப்பில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டிக் கொண்டும், அவர்களைப் பழித்துரைத்துக் கொண்டும், அவமானப்படுத்திக் கொண்டும், அப்படி அவர்களை அத்துமீறி விமர்சிப்பதையே தமது முக்கிய குறிக்கோளாகவும், அழைப்புப் பணியாகவும் செய்து கொண்டிருக்கின்றனர்.

இறைநேசர் என்ற அவ்லியாக்கள் பற்றி அல்லாஹ் தனது அருள் மறையில், அவர்கள் அச்சப்படவும் மாட்டார்கள், கவலைப்படவும் மாட்டார்கள் என்று கூறுகின்றான். Continue reading

அல்-குர்ஆனின் மொழிபெயர்ப்புக்களில் அடைப்புக் குறிகளினால் (Parentheses) தோற்றுவிக்கப்படும் விபரீதங்கள்

1. புனித குர்ஆன் புகழ்மிகு அல்லாஹ் சுபுஹானஹுவ தஆலாவால் அரபு மொழியில் அருளப்பட்டதை அறியாதோர் இலர். ‘நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக இதனை அரபியிலான குர்ஆனாக நிச்சயமாக நாமே இறக்கி வைத்தோம்’ ( 12:2 ) என அவனே விதந்துரைக்கின்றான். அதாவது, இதன் கருத்து உலக மக்கள் எல்லோரும் அரபு மொழியில் எழுதினால் விளங்கிக் கொள்வர் என்பதல்ல. அரபி மொழியில் எழுதப்பட்டால், உலக முடிவு வரையான, அனைத்து சாராருக்கும், அனைத்து சந்தர்ப்பங்களுக்கும் பயன்தரக்கூடிய, இறைவனின் விருப்பத்தைப் பரந்துபட்ட அளவில், உயர்ந்தபட்ச நிலையில், சிறந்த முறையில் வெளிப்படுத்தக் கூடியவாறு, விரிவான கருத்தை மிகத் தெளிவாக, இலகுவாக, விளங்க வைக்க முடியும் என்பதே! அத்தோடு அரபு மொழியே தெரியாத எழுத்தறிவற்ற அரபியான முஹம்மது (ஸல்) அவர்கள் மூலம் இதனை அனுப்பியது தன்னை (அல்லாஹ்வை)த்தவிர வேறு யாருமில்லை என்பதை விளங்கிக் கொள்ள என்பது போன்ற பல கருத்துக்களை வெளிப்படுத்துவதுமாகும். Continue reading

அசைவும் அடைவும்!

அசைவும் அடைவும்!

ஒரு மிகமிகச் சிறிய புள்ளியைச் சூழ வானம் பூமி, மிகப் பரந்த வெளி, உயர்ந்த பனி மலைகள், எரி மலைகள், ஆழமான மடுக்கள் கடல்கள், காடுகள், அருவிகள், ஆறுகள், நீர்நிலைகள், களனிகள், சோலைகள் என என்னென்னவோ, காணக் கூடியதாகவும், காண முடியாதவைகவும் இயற்கையில் அமைந்துள்ளன.

இவற்றில் நன்மைகளும், தீமைகளும், பயனுள்ளவையும், பயன் தருவனவும், இதம் தருபவையும். இன்னல் விளைப்பனவும், கேடு விளைப்பனவும், கெடுதி செய்வனவும், கொடுமை தருவனவும், படிப்பினைகளும், அத்தாட்சிகளும் என்று எண்ணில்லா தன்மைகளைக் கொண்டுள்ளவைகளாக இருக்கின்றன.

Continue reading

மறுமையில் அல்லாஹ்விடம் பதில் கூறப் போவது யார்!

மறுமையில் அல்லாஹ்விடம் பதில் கூறப் போவது யார்!

அல்லாஹ் யாரையும் யாருக்கும் பொறுப்பாளனாக்கவில்லை! யாரையும் திருத்தும் வேலையையும் யாருக்கும் தரவில்லை!அவன் வழியில் நமது முயற்சிகளும், செயல்களும் நம்மைக் கரையேற்றுமே தவிர, அடுததவர் விடயத்தில் மூக்கை நுழைத்துத் திருத்த முயலும் செயலல்ல!

Continue reading

57-4 பற்றிய சிந்தனை…. ‘அல்லாஹ் அர்ஷில்நிலையானான்.’

57-4 பற்றிய சிந்தனை…. ‘அல்லாஹ் அர்ஷில் நிலையானான்.’

‘அவன் எத்தகையவனென்றால், வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். அர்ஷின் மீது நிலையானான். பூமியில் நுழைவதையும், அதிலிருந்து வெளிப்படுவதையும், வானத்திலிருந்து இறங்குவதையும், அதில் ஏறுவதையும் அவன் அறிவான். நீங்கள் எங்கிருப்பினும் அவன் உங்களுடைனேயே இருக்கிறான். மேலும் அல்லாஹ் நீங்கள் செய்து வருவதை நன்கு பார்க்கிறான்.’

இவ்வசனம் அல்லாஹ் பற்றியதுதான் என்பது நமக்குப் பெரும் சோதனையாகவும் இருக்கும். அவனை அவனது பண்புகளைக் கொண்டு அறிந்து ஈமான் கொள்ள வேண்டிய நாம், அவனது இருப்பை சாட்சியம் கூறி நமது ஈமானைப் உறுதிப்படுத்த வேண்டிய நாம் அவனை அறிய முனையவே வேண்டும். Continue reading

மரம் ஒரு வரம், அறிவோம், மறவோம், மதிப்போம்!

மரம் ஒரு வரம் –  அறிவோம், மறவோம், மதிப்போம்!

 

நிழலையும் தரும் பச்சை மரந்திலிருந்துதான்
நெருப்பையும் தந்தான் இறைவன் என்ற
முத்தான உண்மையை சத்தான வித்துவம் தந்து
எரித்து மகிழ விறகாயும் மாறியது மரம்தான்

எட்டமுடியா நெட்டையாக வளர்வதும் மரம்தான்
தொட்டிடுமளவு குட்டையாய் மாறுவதும் மரமேதான்
கட்டிப் பிடிக்க முடியா பெருக்காய் வளர்ந்ததும் மரம்தான்
வெட்டிட முடியா பெரு வைராமாய் மாறியதும் மரம்தான்!  Continue reading

மார்க்க போதனை என்ற பெயரில் அன்பு அழிக்கப்படுகின்றதா! வம்பு வளர்க்கப்படுகின்றதா!

மார்க்க போதனை என்ற பெயரில் அன்பு அழிக்கப்படுகின்றதா! வம்பு வளர்க்கப்படுகின்றதா!

 

 

அன்பு உலக மார்க்கம் என்று கூறின் அது மிகையல்ல. அல்லாஹ் தன்னை நிகரற்ற அன்புடையவன் என விழிப்பதில் இருந்து அன்பை உலக மார்க்கம் எனக் கூறின் அது மிகையல்ல என்பது தெளிவு. அன்பு பற்றி எது பேசவில்லையோ அது மார்க்கமும் அல்ல. அன்பு காட்டாதவன் மனிதனுமல்ல, இறைவனுமல்ல! அன்பே சிவம் என்போரும் உண்டே! அன்புதான் இன்ப ஊற்று என்று ஆதங்கப்பட்டவன் அசோகச் சக்கரவர்த்தியே!

உலகில் ஒரு பொதுவான வரியற்ற, ஆனால் முகபாவம் என்ற வரிவடிவமுடைய பாஷையை இறைவன் படைத்திருக்கிறான் என்றால், அது அன்பு என்ற பாஷையே தவிர இல்லை. Continue reading

Bee Honey a medicine for all தேன் சர்வலோகிலும் சர்வரோக நிவாரணி!

தேன் சர்வலோகிலும் சர்வரோக நிவாரணி!

 

 

உடல் கட்டியையும் உடைக்கும்
உடற் காயத்தையும் ஆற்றிவிடும்
மட்டற்ற சேவை மகிழ்வாகச் செய்து
கெட்டிடாது உதவும் கேடும் விழைக்காது!

களைப்பையும் எளிதாய்ப்போக்கிவிடும்
இளைப்பு தரும் சளியையும் அழித்து விடும்
சோர்வையும் அகற்றி சோம்பலைப் போக்கி
பார்வையைத் துலக்கிடும் பயன்தரும் நாளும்! Continue reading

UNDERSTAND THE QURANIC VERSES DAILY IN KNOWN LANGUAGE AND MEMORIZE!

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண !

 

அல் குர்ஆன் – 4:112

எவரேனும், தவறையோ, பாவத்தையோ சம்பாதித்து, பின்னர் அதைக் குற்றமற்றவர் மீது வீசியால், அப்பொழுது அவதூறையும், வெளிப்படையான பாவத்தையும் அவர் நிச்சயமாகச் சுமந்து கொள்கின்றார்.

 

- நிஹா -

 

Al Quran – 4:112

But if anyone earns, a fault or a sin and throws it on to one  that is innocent, he carries a false charge and a flagrant sin.  

 

- niha -