Monthly Archives: June 2014
Medical tips – Boils
காற்று பற்றிய சில கூற்றுக்கள்!
காற்று பற்றிய சில கூற்றுக்கள்!
காற்றில்லாத உலகே இல்லை!
காற்று குறைந்தாலும் கூடினாலும் கூற்றாகிவிடுகின்றது!
காற்றின்றேல் மரங்களுட்பட உயிரினமே இல்லை!
காற்றை மட்டுமே முழுமையாக தன் வியாபாரப் பண்டமாக்கிட முடியவில்லை மனிதனால்!
காற்றின்றேல் மழையும் இல்லை, நீரும் இல்லை!
காற்று நீரில் கரைந்திராவிடில் கடல் வாழ் உயிரினமே இல்லை!
காற்று குருதியில் கரைந்து நம்மைப் போஷிக்கவிடில் நமது நிலை!
காற்று தான் உள்வாங்கும் நாற்றத்தை எங்க தொலைக்கிறது!
காற்று அசையாத நிலையை சற்று சிந்தியுங்கள்!
காற்று மாற்று இல்லாத சொத்து!
யாரும் உரிமை கொண்டாட முடியாமலுள்ள ஒன்றே காற்று!
காற்றின்றேல் போக்குவரத்துக்கான வாகனங்களும் அசையா!
காற்றின்றேல் கப்பல்களின் நிலை!
காற்றின் உதவியின்றேல் விமானம் காட்சிப் பொருளே!
காற்று நாற்றத்தைச் சுத்தப்படுத்தாவிட்டால்!
காற்று உஷ்ணததைக் குறைக்காவிட்டால்…
காற்று நீரை கொண்டு செல்லாவிடில்…!
காற்று மேகத்தை ஓட்டாவிடில்…!
காற்று கடலை அலைக்காவிடில் அலையேது!
இதனால்தான் வல்ல அல்லாஹ் காற்றை ஏசாதீர்கள் என்கின்றான்!
– நிஹா -
Know the teachings of Lord Buddha!
Dhammapada !
Heedfulness !
31. The Monk who delights in heedfulness and looks with fear at heedlessness advances like fire, burning all fetters, small and large.
32. The Monk who delights in heedfulness and looks with fear at heedlessness will not fall. He is close to Nibbana.
- niha -
குர்ஆன் குறள்!
குர்ஆன் குறள்!
பாக்கியமுள்ள இரவில் இறக்கிவைத்தோம் புர்கானை
பக்குவமாய் 44:3இல் அறி!
இறுதிவரை கிறிஸ்தவர்பால் ஆக்கினோம் பகைசினத்தை
மறந்ததால் உறுதியுரை தந்து 5:14 Continue reading
HOLY QURAN VERSE TO UNDERSTAND AND MEMORIZE !
தினமொரு திருமறை வசனம் விளங்கி, மனனம் செய்து நடைமுறைப்படுத்த…
அல் குர்ஆன் 2:183
ஈமான் கொண்டவர்களே! உங்களுக்கு முன்னிருந்தோர் மீது விதியாக்கப்பட்டிருந்தது போன்றே உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது. நீங்கள் தூய்மையாளர்களாக ஆகலாம்.
- நிஹா -
An Open letter to all Sri Lankan Brothers!
An Open letter to all Sri Lankan Brothers!
உடன் பிறவா உறவுகளுக்கு உளம் திறந்து ஓர் மடல்…
இத்திறந்த மடலை உளம் திறந்து உங்கள் அனுமதியுடன் அல்லாஹ்வைப் பயந்தவனாகத் தொடர்கின்றேன்.
நான் முதலில் மனிதன். அடுத்து, ஓர்இஸ்லாமியன், அதனையடுத்து தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவன், அனைத்திற்கும் மேலாக ஓர் இலங்கையன். இலங்கையை பாரம்பரிய தாயகமாகக் கொண்டவன். இஸ்லாம் இலங்கைக்குள் பரவும் முன்னர் எனது மூதாதையர் இலங்கையரே! ஆனால் இஸ்லாமியரல்லர். பெரும்பாலும், இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம்களும் இதே வரைவுள் அடங்குபவர்களே!
இஸ்லாத்தை ஏற்பதில் அதிகமானோர் தயக்கம் காட்டுவதேன்!
இஸ்லாத்தை ஏற்பதில் அதிகமானோர் தயக்கம் காட்டுவதேன்!
இஸ்லாம் பின்பற்றுவதற்குக் கடினமான மார்க்கமா!
ஓன்றை ஏற்பதற்கும், தயக்கம் காட்டுவதற்கும், மறுப்பதற்கும்கூட ஏதோ ஒரு வகையான அறிவு, சம்பந்தப்பட்ட ஒன்றில் இருக்க வேண்டும். அந்த அறிவுகூட உரிய வழியில் பெற்றுக் கொண்டதாக இருக்க வேண்டும். அது முழுமையான அறிவாக இல்லாவிடினும் கூட பரவாயில்லை, தவறான அறிதலால் வந்த அறிவாக இருக்கக் கூடாது. தெளிவின்மை, கஷ்டம், சந்தேகம், போன்றன நம்பிக்கை ஏற்படாத நிலையை உருவாக்கி விடுவதால். முடிவு எடுக்க முடியாத தன்மையை உருவாக்கி விடுகின்றது. இந்நிலையில்தான் நமது பகுத்தறிவு ஏற்பையோ, மறுப்பையோ, தயக்கத்தையோ வெளிப்படுத்தி அதனால் கால தாமதத்தையும் ஏற்படுத்துகின்றது. Continue reading
Quran Kural ! குர்ஆன் குறள் !
குர்ஆன் குறள் !
பற்றுவோன் மனோஇச்சையை தவறிடுவன் வழி
பற்றானே அல்லாஹ்வின் வழி ! 28:50
செலுத்திட முடியாதே நீர் விரும்பியவரை
செலுத்துவனே அல்லாஹ்விரும்பிய வரை! 28:56 Continue reading
HOLY QURAN VERSE TO UNDERSTAND AND MEMORIZE !
HOLY QURAN VERSE TO UNDERSTAND AND MEMORIZE !
அல் குர்ஆன் 42:30
மேலும், எத்துன்பம் உங்களை வந்தடைந்தாலும் , அது உங்கள் கரங்கள் சம்பாதித்துக் கொண்டதினாலாகும். பெரும்பாலானவற்றை அவன் மன்னித்து விடுகின்றான்.
- நிஹா -
Al Quran 42:30
Whatever misfortune happens to you, is because on the things your hands have wrought, and for many (of them) He grants forgiveness.
- niha -
கடமை ! DUTY!
கடமை
கடமை என்ற மூன்று எழுத்துள் அடங்கும் வார்த்தை, பிரபஞ்சம் அளவிற்குப் பரந்து விரிந்தது. அதனை விவரிக்கப் புகின் நம் அறிவும், திறனும், காலமும் இடங்கொடா. வாசிப்போரும் மனத்திலிருத்திக் கொள்ளார். நன்றாக எழுதப்பட்டுள்ளது என்ற விமர்சனத்தோடு சிந்தனையிலிருந்து விடைபெற்றுக் கொள்ளும்.
உலக கடமைகள், இறை கடமைகள், குர்ஆனியக் கடமைகள், அன்றாடம், அடைவு வரை, வாரமொரு முறை, வருடமொரு தடவை, வாழ்வில் ஒரு தரமாவது செய்ய வேண்டியன, நம் குடும்பத்துக்கு, நம் உறவினருக்கு, நம் சமூக கத்துக்கு, நம் நாட்டுக்கு, உலகுக்கு, மனித குலத்துக்கு, மறுமைக்கு, இல்லாதோருக்கு, இயலாதோருக்கு, உள்ளவர்கள் செய்ய வேண்டியன, எழுதப்பட்ட கடமைகள், எழுதப்படா கடமைகள், தார்மீகக் கடமைகள், எதிர்பார்ப்பற்ற கடமைகள் என நீண்ட பட்டியலையே தரலாம். Continue reading