Daily Archives: June 29, 2014

காற்று பற்றிய சில கூற்றுக்கள்!

காற்று பற்றிய சில கூற்றுக்கள்!

காற்றில்லாத உலகே இல்லை!
காற்று குறைந்தாலும் கூடினாலும் கூற்றாகிவிடுகின்றது!
காற்றின்றேல் மரங்களுட்பட உயிரினமே இல்லை!
காற்றை மட்டுமே முழுமையாக தன் வியாபாரப் பண்டமாக்கிட முடியவில்லை மனிதனால்!
காற்றின்றேல் மழையும் இல்லை, நீரும் இல்லை!
காற்று நீரில் கரைந்திராவிடில் கடல் வாழ் உயிரினமே இல்லை!
காற்று குருதியில் கரைந்து நம்மைப் போஷிக்கவிடில் நமது நிலை!
காற்று தான் உள்வாங்கும் நாற்றத்தை எங்க தொலைக்கிறது!
காற்று அசையாத நிலையை சற்று சிந்தியுங்கள்!
காற்று மாற்று இல்லாத சொத்து!
யாரும் உரிமை கொண்டாட முடியாமலுள்ள ஒன்றே காற்று!
காற்றின்றேல் போக்குவரத்துக்கான வாகனங்களும் அசையா!
காற்றின்றேல் கப்பல்களின் நிலை!
காற்றின் உதவியின்றேல் விமானம் காட்சிப் பொருளே!
காற்று நாற்றத்தைச் சுத்தப்படுத்தாவிட்டால்!
காற்று உஷ்ணததைக் குறைக்காவிட்டால்…
காற்று நீரை கொண்டு செல்லாவிடில்…!
காற்று மேகத்தை ஓட்டாவிடில்…!
காற்று கடலை அலைக்காவிடில் அலையேது!

இதனால்தான் வல்ல அல்லாஹ் காற்றை ஏசாதீர்கள் என்கின்றான்!

– நிஹா -

 

குர்ஆன் குறள்!

 

குர்ஆன் குறள்!

பாக்கியமுள்ள இரவில் இறக்கிவைத்தோம் புர்கானை
பக்குவமாய் 44:3இல் அறி!

இறுதிவரை கிறிஸ்தவர்பால் ஆக்கினோம் பகைசினத்தை
மறந்ததால் உறுதியுரை தந்து 5:14 Continue reading

HOLY QURAN VERSE TO UNDERSTAND AND MEMORIZE !

தினமொரு திருமறை வசனம் விளங்கி, மனனம் செய்து நடைமுறைப்படுத்த…

அல் குர்ஆன் 2:183

ஈமான் கொண்டவர்களே! உங்களுக்கு முன்னிருந்தோர் மீது விதியாக்கப்பட்டிருந்தது போன்றே உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது. நீங்கள் தூய்மையாளர்களாக ஆகலாம்.

- நிஹா -

Continue reading