Category Archives: Hinduism

வேதங்கள் பற்றிய இஸ்லாமிய நிலைப்பாடு!

குர்ஆன் வழியில் …

வேதங்கள் பற்றிய இஸ்லாமிய நிலைப்பாடு!

ஒரு மனிதன் இஸ்லாமியனாக, அதன் நுழைவாயிலான அல்லாஹ் ஒருவன் அவனைத் தவிர வேறு யாருமில்லை என்பதை ஏற்க வேண்டும். அதற்காக லாஇலாஹ இல்லல்லாஹு என்ற தாரக மந்திரமான திருக் கலிமாவை வாயாலும் மனத்தாலும் கூறி அஷ;ஹது அன்லாயிலாஹ எனத் தொடங்கும் ஷஹாதத் கலிமாவைக் கூறி சாட்சியம் அளிக்க வேண்டும். எப்போது திருக் கலிமாவைக் கூறி இஸ்லாமியன் ஆகிவிட்டானோ அப்போது அவன் ஆறு விடயங்கள் மீது நம்பிக்கை கொள்ள வேண்டியுள்ளது. அதன் பின்னரே அவன் மீது சில விடயங்கள் கடமையாகி விடுகின்றன. Continue reading

உண்மையைக் கொண்டே பிரபஞ்சத்தைப் படைத்தவனைத் தவிர யாருமில்லை!

உண்மையைக் கொண்டே பிரபஞ்சத்தைப் படைத்தவனைத் தவிர யாருமில்லை!

 

மனிதனை இறைவனே படைத்ததாக அனைத்து வேதங்களும் எடுத்துரைக்கின்றன! மனிதன் மண்ணிலிருந்து படைக்கப்பட்டான் என்பதும் வேதங்கள் கூறும் உண்மையே! அதுவே விஞ்ஞான முடிபுமாக உள்ளது! நீரிலிருந்தே உயிரினங்களின் படைப்பை ஆரம்பித்ததாக அல்லாஹ் கூறுகின்றான்! பஞ்சபூதங்களான ஆகாயம், மண், காற்று, நீர், நெருப்பு போன்றவற்றின் கலவையே மனிதன் என்பதும் ஏற்கப்பட்ட, இரண்டாம் கருத்தற்ற உண்மையே! Continue reading

பொதுக் குறள்

பொதுக் குறள்!

 

காதவழி போவார் பாதவலி யற்று
வாதவலி இல்லா தார்!

படைபல மிருந்தும் நடைபலம் இன்றேல்
தடைப்படும் குடி யாட்சி!

கடிவாளமிலாக் குதிரையும் பிடிமானமிலா வாழ்வும்
படிமான மற்றுப் போம்!

உறையுள் வாளும் பறையுள் ஒலியும்
சிறையுள் வாழ்வு போலாம்!

சூடானால் மறைந்தும் குளிரானால் உறைந்தும்
பாடாவதே நீரின் பண்பு!

– நிஹா -

‘ஆன்சரிங் இஸ்லாம்’ என்ற தளத்தில் ‘முகம்மதுவின் பாவங்கள்’ என்ற தலைப்பில் வெளியான கட்டுரைக்கான பதில்.

ஆன்சரிங் இஸ்லாம்என்ற தளத்தில் முகம்மதுவின் பாவங்கள்என்ற தலைப்பில் வெளியான கட்டுரைக்கான பதில்.

 

இஸ்லாம்மிகவும் பிழையாக விளங்கிக் கொள்ளப்பட்ட மார்க்கம்

‘அல்லாஹ் எவனை நேர்வழிகாட்ட விரும்புகிறானோ அவனுடைய நெஞ்சத்தை இஸ்லாத்திற்காக விரிவுபடுத்துகிறான்’ 6:125

‘முகம்மதின் பாவங்கள்’ என்ற தலைப்பிற்கு ஆதாரமாகக் கொள்ளப்பட்ட சூரா 47:19 ‘ஆகவே, நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர நாயன் இல்லை என்று நீர் அறிந்து கொள்வீராக. இன்னும் உம்முடைய பாவத்திற்காகவும், முஃமின்களான ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் (பாவ) மன்னிப்புத் தேடுவீராக – அன்றியும் உங்களுடைய நடமாட்டத் தலத்தையும் உங்கள் தங்கும் இடங்களையும் அல்லாஹ் நன்கறிகிறான்.என்ற இவ்வசனத்தில் முஹம்மது பாவம் செய்துள்ளாரா என்று ‘ஆன்சரிங் இஸ்லாம்’ என்ற தளத்தில் ‘முஹம்மதுவின் பாவங்கள்’ என்ற தலைப்பில் வெளியான கட்டுரைக்கான பதில். Continue reading

நற் சிந்தனை! 15 நீதி செய்தால் மட்டும் போதாது, நீதி செய்வது வெளிப்படையாகத் தெரிய வேண்டும்!

நற் சிந்தனை! 15

 

நீதி செய்தால் மட்டும் போதாது, நீதி செய்வது வெளிப்படையாகத் தெரிய வேண்டும்!

இஸ்லாமியர் தம்மை ஒரு தனி இனமாக அடையாளப்படுத்துவதில் தவறில்லை. ஆனால், மற்ற இனங்களிடமிருந்து ஒதுங்கி வாழும் இனமாக, சமூக இசைவற்ற இனமாக பிறர் கணிக்கும்படியான வாழ்க்கை வாழும் ஒரு சமுதாயமாக மாறிவிடக் கூடாது. அப்படி வாழ்தல், இஸ்லாத்திற்குச் செய்யும் அப்படடமான துரோகமாகும்.

இஸ்லாம் ஒரு நடைமுறை மாரக்கம். செய்து காட்டலினால் மக்கள் மத்தியில் அறிமுகமான மார்க்கம். செய்து காட்டல் என்னும் போதே அதில் மறைந்துள்ள உண்மை வெளிப்படையாக விளங்குகின்றது. செய்து காட்டலுக்கு பார்வையாளர் தேவையாக இருக்கின்றது. இங்கு செய்து காட்டல் என்பதில் பார்வையாளர்களைக் கூட்டி ஏதோ ஒன்றைச் செய்து காட்டும் வேலை நடைபெறுவதில்லை. ஆனால், மக்களோடு மக்களாக குர்ஆனின் அடிப்படையில் வாழ்வதன் மூலம் இஸ்லாம் கூறியுள்ள பண்புகளை நமது நடத்தையின் மூலம் வெளிப்படுத்துவதனால் உலகறியச் செய்ய முடியும். உண்மையிலேயே இதுவே சிறந்த தஃவாப் பணியாகவும் கருதலாம். Continue reading

ஹைகூ வில் கவிதைகள்!

ஹைகூ வில் கவிதைகள்!

 

பாராத கண்ணைப் போன்றதே,
பகுத்துப் பாரா
பகுத்தறிவும்.

மனிதன் பகுத்தறிவால் மட்டுமே
மற்றைய உயிரினங்களைவிட
மேலானவன்.

பயன்படுத்தப்படாத பகுத்தறிவு
வெளிச்சத்தைக்
காணாத பயிரே!

மனித அறிவு பயன்படுத்தப்பட்டால்
அகிலமனைத்தும்
அவன் காலடியில்.

 

- நிஹா -

சிந்திந்துச் செயற்படுவதற்காகச் சில சிறப்பான புனித குர்ஆன் வசனங்கள்

சிந்திந்துச் செயற்படுவதற்காகச் சில சிறப்பான புனித குர்ஆன் வசனங்கள்

6:125 – அல்லாஹ் எவருக்கு நேர்வழி காட்டிட விரும்புகின்றானோ அவருடைய நெஞ்சத்தை இஸ்லாத்திற்காக விரிவுபடுத்துகின்றான். மேலும். எவரை வழி தவறச் சயெ்ய விரும்பகின்றானோ, அவருடைய நெஞ்சத்தை வானத்தில் ஏறுகின்றவனைப் போன்று சிரமத்துடன் கூடிய நெருக்கடியானதாக ஆக்கிவிடுகின்றான். இவ்வாறே ஈமான் கொள்ளதாவர்கள் மீது தண்டனையை அல்லாஹ் ஏற்படுத்துகின்றான். Continue reading

இஸ்லாத்தை ஏற்பதில் அதிகமானோர் தயக்கம் காட்டுவதேன்!

இஸ்லாத்தை ஏற்பதில் அதிகமானோர் தயக்கம் காட்டுவதேன்!

 

இஸ்லாம் பின்பற்றுவதற்குக் கடினமான மார்க்கமா!

ஓன்றை ஏற்பதற்கும், தயக்கம் காட்டுவதற்கும், மறுப்பதற்கும்கூட ஏதோ ஒரு வகையான அறிவு, சம்பந்தப்பட்ட ஒன்றில் இருக்க வேண்டும். அந்த அறிவுகூட உரிய வழியில் பெற்றுக் கொண்டதாக இருக்க வேண்டும். அது முழுமையான அறிவாக இல்லாவிடினும் கூட பரவாயில்லை, தவறான அறிதலால் வந்த அறிவாக இருக்கக் கூடாது. தெளிவின்மை, கஷ்டம், சந்தேகம், போன்றன நம்பிக்கை ஏற்படாத நிலையை உருவாக்கி விடுவதால். முடிவு எடுக்க முடியாத தன்மையை உருவாக்கி விடுகின்றது. இந்நிலையில்தான் நமது பகுத்தறிவு ஏற்பையோ, மறுப்பையோ, தயக்கத்தையோ வெளிப்படுத்தி அதனால் கால தாமதத்தையும் ஏற்படுத்துகின்றது. Continue reading

The Dhammapada Translated from the Pali

The Dhammapada !

 

2. Heedfulness!

 

25.  By effort and heedfulness, discipline and self-mastery, let the wise one make for himself an island which no flood can overwhelm. 

 

26. The foolish and ignorant indulge in heedlessness, but the wise one keeps his heedfulness as his best treasure. 

 

- niha -

HOLY QURAN VERSE TO UNDERSTAND AND MEMORIZE !

HOLY QURAN VERSE TO UNDERSTAND AND MEMORIZE !

அல் குர்ஆன் 3:126 

இன்னும், உங்களுக்கு ஒரு நற்செய்தியாகவும், இதன் மூலம் உங்கள் இதயங்கள் அமைதி  பெறுவதற்காகவுமே அன்றி அல்லாஹ் இதனை ஆக்கவில்லை. மேலும் மிகைத்தோனும்,  ஞானமிக்கவனுமாகிய அல்லாஹ்வின் புறத்திலிருந்தே தவிர உதவி இல்லை.

Continue reading