Monthly Archives: October 2014

Quran Kural!

குர்ஆன் குறள் !

 

 

போட்டிடாதீர் கைகளை அழிவின்பால் மேலும்
நாடிடுவீர் நன்ம செய! 2:195

 

ஆயத்தம் செய்தீடுவீர் ஹஜ்ஜுக்காக அறிந்திடுவீர்
இறையச்சமே சிறந்த தென்று! 2:197

 

தந்துவிடெனின் ஹஜ்ஜின் பயன் பூவுலகில்
தந்திடானே மறுமைதனில் நற்பயன்! 2:200

 

பார்த்திட லாகாதோ படைத்தவனின் சான்றுகளை
பார்த்திடுக உமக்குள்ளும் கருத்தாய் ! 51:21

 

அறிந்திடுக அச்சமில்லை அல்லாஹ்வின் நேசருக்கு
தெரிந்திடுக யூனூஸ் 62இல்!

 

 

- நிஹா -

UNDERSTAND THE QURANIC VERSES DAILY IN KNOWN LANGUAGE AND MEMORIZE!

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண !

 

அல் குர்ஆன் 46:9

 

நான் தூதர்களில் புதுமையானவனல்ல. மேலும், என் தொடர்பாகவும், உங்கள் தொடர்பாகவு்ம் என்ன செய்யப்படும் என்பதை நான் அறிய மாட்டேன். என்பால் வஹீ அறிவிக்கபபடுகி்றதைத் தவிர நான் பின்பற்றுவதில்லை. மேலும், நான் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனேயன்றி இல்லை என்று நீர் கூறுவீராக! Continue reading

வடக்கு முஸ்லிம்களின் இடக்கர் அகற்றுவீர்!

வடக்கு முஸ்லிம்களின் இடக்கர் அகற்றுவீர்!

 

புண்ணியமல்ல நாம் உமைக் கேட்பது
மண்ணில் உள்ள நமது உரிமையே!

 

வருடந் தோறும் எண்ணி மகிழ்ந்தனர்
வாழ்வை இழந்த வடக்கு மக்களை
புருடாக் கதைகள் பலதும் பேசி
குருடர்கள் போன்று கொண்டாடித் தீர்த்தனர்!

புலிகள் விரட்டியது கொடுமைதான் ஆயினும்
புலிகள் பெயரால் காலத்தை ஓட்டி
பழிகள் செய்து தம்வாழ்வினை நகர்த்தும்
பழிகாரர் செயலை பழித்தே விடுவோம்! Continue reading

UNDERSTAND THE QURANIC VERSES DAILY IN KNOWN LANGUAGE AND MEMORIZE!

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண !

 

அல் குர்ஆன் 25:63

 

அர்ரஹ்மானுடைய அடியார்கள் எத்தகையவர்கள் என்றால், பூமியில் பணிவாக அவர்கள் நடப்பார்கள். அறிவீனர்கள் அவர்களிடம் தர்க்கம் செய்திட முனைந்தால், ‘ஸலாமுன்’ எனக் கூறிவிடுவார்கள்.

 

- நிஹா -

 

 

Al Quran 25:63

 

And servants of (Allah) most gracious are those who work on the earth in humility, and when the ignorant addresses them, they say, “PEACE”,  

 

- niha -

 

 

நற்சிந்தனை 29

நற்சிந்தனை 29

அல் குர்ஆன் 28:77

இன்னும், “அல்லாஹ் உனக்கு அளித்துள்ளவற்றிலிருந்து நீ மறுமை வீட்டைத் ‌தேடிக் கொள்! இன்னும், இவ்வுலகில் உனது பங்கை மறந்துவிடாதே! மேலும், அல்லாஹ் உனக்கு உபகாரம் செய்தது போன்று, நீயும் உபகாரம் செய்! பூமியில் நீ குழப்பத்தைத் தேடாதே! நிச்சயமாகக் குழப்பவாதிகளை அல்லாஹ் நேசிக்கமாட்டான்“

Continue reading

எனக்குப் பிடித்தவை !

எனக்குப் பிடித்தவை !

எனக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பிடிக்கலாம். பிடித்தால் சுவையுங்கள்!

பெண்ணின் பெருமை, அருமையை, உரிமையை, உளப்பாங்கை உய்த்துணருங்கள். இறை படைப்பின், அனைத்தும் மனிதப் படைப்பில். எந்நதப் படைப்பிலும் காண முடியாத, அரிய பெரிய பண்புகள் விரவிக் கிடக்கின்றன. மனித உருவினுள். முடிந்தால் வெளிப்படுத்த முனையுங்கள். உலகே அமைதிப் பூங்காவாக மாறிவிடும். அதுவே இறை நோக்கமும். மறுமையிலும் வெற்றியாளர்களாகி விடலாம். வரவேற்க ஹுருலீன்கள் என்ற பார்வை தாழ்த்திய பருவம் மாறா, கைபடாத கன்னியர் காத்திருப்பர். Continue reading

உங்களுக்குத் தெரியுமா!

 உங்களுக்குத் தெரியுமா!

 

மாலை மாற்று   –  PALINDROME 

 

PALINDROME இதனைத் தமிழில் இருவழி ஒக்குஞ்சொல் – மாலை மாற்று எனலாம். இதன் விளக்கம்: சுருக்கமாகக் கூறின் விகடகவி என எழுதப்பட்டுள்ளதை முன்புறத்தால் வாசிப்பது போன்றே பின்னிருந்து தொடங்கி வாசிப்பதை ஒத்ததாம்.

 

இம்முறையில் அக்காலத்தில் பேரின்பப் பாடல்களைக் கூட புலவர்கள் யாத்துள்ளார்கள் என்றறியும் போது , நாம் எம்மாத்திரம்.

Continue reading

தமிழ்க் கால அளவை

தமிழ்க் கால அளவை

60 வினாடி       – 1 நாளிகை
2 1/2 நாளிகை – 1 ஓரை
3 3/4 நாளிகை – 1 முகூர்த்தம்
7 1/2 நாளிகை – 1 சாமம்
8 சாமம் – 1 நாள்
7 நாள் –    1 கிழமை
15 நாள் –  1 பக்கம்
30 நாள் –  1 திங்கள்
6 திங்கள் – 1 அயனம்
2 அயனம் – 1 ஆண்டு

 

- நிஹா -

Quran Kural !

குர்ஆன் குறள்

 

வுளுவை அறிந்திடுக மாயிதா ஆறில்
பழுதிலாது தொழுகைநிறை வேற! 5:6

 

அஞ்சிடுக அல்லலாஹ்வை தேடிடுக வழிதனை
துஞ்சிடாதவன் நெருக்கம் பெற! 5:35

 

ஓராத்மாவில் நம்மனை வ‌ரையும் படைத்தவனின்
பேறை விளங்கி யறி! 6:98

 

அடைந்திடாதே பார்வைகள் அவனை என்றும்
அடைந்திடுவன் நும்பார்வை தனை! 6:103

 

கலிமத்து ரப்பி பரிபூரணம் அடைந்துளது
உண்மையாலும் நீதத்தாலும் காண்! 6:115

 

- நிஹா -