தனது இறுதிச் செய்தியை உலகோருக்கு வெளிப்படுத்த ஏன் ஓர் எழுத,வாசிக்கக் கற்காத மனிதனைத் தேர்ந்தான் !
( சிறப்புக் கண்ணோட்டம்)
வல்ல அல்லாஹ் ரப்புள் ஆலமீன் நபிமாரைத் தேர்ந்து அவர்கள் மூலம் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கில் வேதங்களை வழங்கினான். அப்படித் தெரிவு செய்யப்பட்டவர்கள் அனைத்து நபிமாரும் அறிவின் சிகரங்களாகவும், பண்பின் பிறப்பிடங்களாகவும், பொறுமையின் பொக்கிஷங்களாகவும், ஒழுக்கத்தின் விழுப்பங்களாகவும், உண்மையின் வாரிசுதாரர் களாகவும், நன்மையின் உறைவிடங்களாகவும், தன்மையின் உதாரணங்களாகவும் இருந்தே வந்துள்ளனர்.
பல்வேறு சிறப்பம்சங்களும் பொருந்தியவராக பால்ய வயதிலேயே திகழ்ந்த முஹம்மது அவர்கள் கல்வியை நாடாதிருந்தமைக்கான காரணம் எதுவும் இருந்திருக்கவில்லை. குழந்தையாக இருந்த போதே பெற்றாரை இழந்திருந்தாலும், அவர்களை வளர்த்தவர்கள் அக்காலை குறைசிகளான ஹாஸிம் கோத்திரத்தார். இவர்கள் கல்வியறிவு, ஆட்சி அந்தஸ்து, பணபலம், பொருட் செல்வம், மனித வளம் போன்ற அனைத்தையும் பெற்றிருந்த சீராளர்களே. ஆயினும், அவர்கள் ஏன் தம்மால் வளர்க்கப்பட்ட தமது பேரக்குழந்தையை, பெறாமகனை பாடசாலைப் பக்கம்கூட ஓதுங்க விடாது கல்வியை அவர்களுக்கு எட்டாக் கனியாக்கி, உம்மி எழுத, வாசிக்கத் தெரியாதவர், அல்லது யாரிடமும் கல்வி பெறாதவர், யாராலும் கல்வி ஊட்டப்படாதவர் என்ற பட்டப் பெயருக்குச் சொந்தமாக்கினரோ தெரியவில்லை. Continue reading →