ஒரு நாடு சுபிட்சமாக வாழ்கின்றதென்றால், அங்கு மக்கள் வாழ்க்கை அமைதியாக, நிம்மதியாக, சந்தோஷமாக, பயமற்றவர்களாக, கவலையற்றவர்களாக எவ்விதப் பிரச்சினைகளுமற்று வாழ்கிறார்கள் என்பதே! நம்நாட்டு மக்கள் அனைவரும் அந்த வகையில் எதிர்மாறான தன்மைகளுடன் 2009 இன் கடைப்பகுதிவரை எழுத்தில் வடிக்க முடியா பல்வேறு துன்பங்கள், துயரங்கள், அச்சுறுத்தல்கள், பாதுகாப்பின்மை, பயங்கரம், வறுமை போன்ற இன்னோரன்ன இன்னல்களால் மனதாலும், உடலாலும், மானசீகமாகவும், வெளிப்படையாகவும் பாதிக்கப் பட்டவர்களாகவே இருந்து வந்துள்ளனர். அப்போதைய அனைத்துக் கஸ்டங்களும் பங்கரவாதத்தின் பாதிப்புக்களால் ஏற்பட்டிருந்ததாக மக்களும் நம்பிப் பொறுமையைக் கடைப்பிடித்தனர். அனைத்துப் பிரச்சினைகளிலும் நேரடியாக, தாக்கத்தை ஏற்படுத்தி, அன்றாடம் முகங்கொடுக்க வேண்டிய பிரச்சினையாக விஸ்வரூபம் எடுத்திருந்தது வாழ்க்கைச் செலவு என்பதே! இவற்றை, அமைதியை விரும்பிய மக்கள் மிகப் பொறுமையாக ஏற்றனர் விடிவை எதிர்பார்த்து! Continue reading
Daily Archives: November 6, 2013
பத்திராதிபர் கடிதங்கள்… நம்பிக்கையீனங்களே வாழ்க்கையாகி…..
மலச்சிக்கல் போக்கும் மகிமையுள்ள வெண்டிக்காய் !
உலகில் மக்களைப் பாதிக்கும் பல நோய்களுக்கு முக்கிய காரணமாயமைந்தது மலச்சிக்கல் எனப் பெரும்பான்மை மாற்று வைத்திய நிபுணர்கள் கருத்துக் கொண்டுள்ளார்கள். மலச்சிக்கலால் அவதிப்படுவோர் தொகை நாளுக்குநாள் அதிகரித்து வருவதும் கண்டறியப்பட்டுள்ளது. அது அனைவரது வாழ்விலும் சர்வசாதாரணமாகத் தனது கைவரிசையைக் காட்டி வருகிகிறது. இதனால் பெண்களே பெருமளவு பாதிக்கப்படுவதாகவும் தெரிகிறது. சாதாரணமாக நமது வீடுகளிலும், சந்தைகளிலும் காணப்படும் வெண்டிக்காய் இதனைப் போக்குமென மக்கள் ஓரளவு அறிந்தே இருந்தனர் என்றாலும் தற்போது ஆராய்ச்சிகளின் மூலம் வெண்டிக்காய் மலச்சிக்கலைப் போக்கும் மகிமை பெற்றது என்பது நிரூபணமாகியுள்ளது. Continue reading
குர்ஆன் குறள் – சன்மானம்
சன்மானம் என்பது எந்நோக்கும் இல்லாது
தன்னாலே கொடுக்கப் பெறும்
தன்மானம் இழக்காத சன்மானம் பெறுவது
பின்னாளில் இகழ்வைத் தரா
பெறுமானம் அற்ற சன்மானம் தனக்கு
வருமானம் எதிர்பாரா தீர் Continue reading
குறும்பா வடிவில் குர்ஆனிய நறும்பா !
அறி லாஇலாஹஇல்லல்லாஹு கலிமா அதை
அறிந்து சொல்வதே விதிமா – பொருளுண்மை
அறியாமல் சாட்சியம் கூறியதால் இற்றைவரை
அறிந்து பொய்யுரைத்த பழிமா ! Continue reading
முற்காப்பும் முதலுதவியும்
கடிகாயத்தின் மேல்கட்டி காயத்தைக் கீறி
கடிவாயில் உறிஞ் சிடுக
உண்டநஞ்சின் குணமறிந்து சென்றதை வெளியேற்ற
கைகண்டதைக் கொடுத் திடுக
உண்டது காரமாயின் உடலுளே வசப்படுத்த
வேண்டிய மாற்றினைக் கொடு
மாரடைப்பு வந்தவரை முடிந்தவரை பக்கத்து
மருந்தகம் சேர்த் திடுக Continue reading
KNOWLEDGE – REALLY AMUSING
[1] FORTNIGHT comes from ‘Fourteen Nights’ (Two Weeks).
[2] POP MUSIC is ‘Popular Music’ shortened.
[3] MOPED is the short term for ‘Motorized Pedaling’.
[4] BUS is the short term for ‘Omnibus’ that means everybody.
[5] DRAWING ROOM was actually a ‘withdrawing room’ where people withdrew after Dinner. Later the prefix ‘with’ was dropped.. Continue reading
முஸ்லிம் அல்லாதவர்களுக்கு ஸலாம் கூறலாமா !
அல்லாஹ், உலக மாந்தர் ஒருவருக்கொருவர் ‘ஸலாம்’ என்ற முகமன் கூறுமாறு தனது திருமறையில் பணித்துள்ளான். நாமும் அவ்வாறே செய்து வருகின்றோம். ஸலாத்துக்கு முந்திக் கொள்ளுங்கள் என்ற நாயக வாக்கியமும் உள்ளது. இந்த வகையில் ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்று முகமன் கூறுதல் மூலம் ‘வஅலைக்கும் ஸலாம்’ என்ற பதிலைப் பெறும் போது, மனிதர் மத்தியில் ஐக்கியம், அந்நியோன்யம், நட்பு, நல்லெண்ணம், கருத்துப் பரிமாற்றம் போன்ற இன்னபிற நன்மைகள் உருவாகின்றன. Continue reading