Daily Archives: October 9, 2013

குர்ஆன் வழியில் …வாக்குறுதிகள் வழங்கும் போது நிபந்தனைகள் அவசியமே!

வாக்குறுதிகள் வழங்கும் போது நிபந்தனைகள் அவசியமே!

வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டியவை. நிறைவேற்றப்பட வேண்டியவை என்பதால் அவை நிதானமாக, நடைமுறைப்படுத்தப்படக் கூடியவற்றையே கொண்டிருத்தல் வேண்டும். வாக்குறுதியின் உயர் பண்பை விளக்க, அல்லாஹ் தான் வாக்கு மாறாதவன் எனக் கூறியிருப்பதே போதுமானதாகும். அண்ட சராசரங்களை ஆறே நாட்களில் படைத்துப் பரிபாலித்து, அடக்கி ஆள்பவன் தன்னைப் பற்றிக் கூறும் போது, தான் வாக்கு மாறாதவன் எனக் கூறுவதிலேயே பெருமை கொள்கின்றான். Continue reading

வாழ்வாங்கு வாழ இயற்கை நமக்களித்த வாழ்வாதாரச் சட்டம் – ஓர் கண்ணோட்டம்

1. இன்று உலகில் காணப்படும் முளைப்பன, வளர்வன, துளிர்ப்பன, பூப்பன, காய்ப்பன, கனிவன, வாழ்வன, மடிவன போன்ற பண்புகளைக் கொண்ட தாவரங்கள், செடி கொடிகள், மரங்கள் போன்றவையும் பிறப்பன, நகர்வன, ஊர்வன, நீந்துவன, பறப்பன, நடப்பன போன்ற அனைத்தும் உயிருள்ளவையென அனைவரும் அறிவர். இதற்கு மாற்றுக் கருத்துக்கள் இல்லை, இல்லை, இல்லவே இல்லை. Continue reading

குர் ஆன் வழியில் …

உறவு முறைத் திருமணம் பிறக்கும் பாலகரைப் பாதிக்குமா?

இன்று மக்கள் மத்தியில் பரப்பப்படும் திருமணம் பற்றிய ஓர் பரபரப்பான செய்தியே உறவு முறைத் திருமணங்களில் பிறக்கும் குழந்தைகள் ஊனமாகப் பிறக்கின்றன அல்லது ஏதோ வகையில் குறைபாடான பிள்ளைகளாகவே பிறக்கின்றன என்பதே. இது பற்றிய ஓர் வரலாற்று ரீதியான ஆதாரபூர்வமான ஆக்கமே இந்தச் சிறு கட்டுரை.

நாம் ஏதாவது ஓர் விடயத்தில் தீர்வுக்கு வருவதற்குப் பல காரணிகள் உண்டென்பதை அறிந்து வைத்திருக்கிறோம். ஆயினும் அவை ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. அப்படி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுக் பெறப்படுபவைகள் முடிவான முடிபுகளாகவும் அதிகமாக இருப்பதில்லை. காலத்துக்குக் காலம் ஒவ்வொரு விடயத்திலும் முரண்பாடான ஆய்வறிக்கைகளும் கருத்துக்களும் வெளியாகிக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் ஏற்றுக் கொள்ளப்படுகின்ற அதிகமான விடயங்கள், நடைமுறைச் சாத்தியங்களைக் கூறும் சரித்திரச் சான்றுகளில் இருந்து பெறப்படுகின்றன. அவை நிரூபணத்துக்கு அப்பாற்பட்டு ஏற்கப்பட வேண்டிய உண்மைகளாகவும் உள்ளன. காரணம் நடந்து முடிந்த உண்மைகள் என அனைவராலும் ஏற்கப்பட்டமையே. ஒரு உதரரணத்தைக் காண்போம். அது புனித பைபிளும், புனித குர்ஆனும் கூறியவை. 2000 வருடங்களுக்கு முன்னர் பைபிளில் கூறப்பட்டு, 1400 வருடங்களுக்கு முன்னர் இறக்கப்பட்ட குர்ஆன் கூறிய ஓரே விடயம். Continue reading

குர்ஆன் வழியில் …

உபாயங்களின் மூலம் உதவிகள் செய்யப்படலாம்!

மனித வாழ்வில் தேவைகள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. தேவையற்ற மனிதரைக் காண்பது மிகமிக அருமை. இறைவன் ஒருவனே தேவையற்றவன். அவன் யாருடைய, எதனுடைய தேவையும் அற்றவன். உணவு, உடை, உறையுள் மட்டுமல்ல, உறவு, நட்பு, உதவிகள், பொருள், பணம், பதவி, மருத்துவம், கல்வி, போக்குவரத்து, தொடர்பாடல் போன்ற இன்னோரன்ன தேவைகள் இருக்கவே செய்கின்றன. இவைகளில் உதவி பெறுவதும் முக்கியமான ஒன்றாகவே உள்ளது. அனைத்துத் தேவைகளிலும் உதவியின் கரம் இன்றியமையாததாகிறது. சில சந்தர்ப்பங்களில் அவ்வாறான உதவிகளைப் பெறுவதில் சங்கடங்களும் தோன்றுகின்றன. சட்டங்களின் தடைகளும் உண்டே. சமூகக் கட்டுப்பாடுகள், ஒழுக்க விழுமியங்கள் என பல்வேறு காரணிகளும் உதவி பெறப்படுவதில், செய்வதில் இடைமறிப்புச் செய்வதுமுண்டு. அப்படியான சந்தர்ப்பங்களில் சட்டத்துக்கு, சமூகக் கட்டுப்பாடுகளுக்கு, ஒழுக்க விழுமியங்களுக்கு முரணற்ற விதத்தில் நாம் சில காரியங்களைச் செய்ய வேண்டியே உள்ளது. Continue reading