Daily Archives: October 8, 2013

மனிதர் மறதியில் புறக்கணித்தவர்களாகவே உள்ளனர்

அல்குர்ஆன் 21:1 ” மனிதர்களுக்கு அவர்களுடைய கேள்வி கணக்கு நெருங்கி விட்டது. அவர்களோ மறதியில் புறக்கணித்தவர்களாகவே உள்ளனர்.“

இது ஓர் அபாய  அறிவிப்பு.  ஆம் மறைவான எச்சரிக்கையுடன் கூடியது. மறதியில் உள்ளவர்கள் நாம் என்ற நம் குறையைச் சுட்டிக்காட்டி, நாம் மறந்த எதையோ ஞாபகப்படுத்துமாறு மனிதரைத் தூண்டிக் கொண்டிருக்கும் பண்புடன், தனது கிருபா கடாட்சத்தை வெளிப்படுத்தி நிற்கும் அல்லாஹ் சுபுஹானஹுவதஆலாவின் நெருங்கிவிட்ட மறுமை யையும். அங்கு கேள்விக்கு பதில் அளிக்க வேண்டி இருப்பதையும் பறை தட்டும், அருளும் பொருளும் பொதிந்த அற்புதமான அழைப்பு.  Continue reading

வாதனை செய்வதை விட்டு விடு வேதனை உன்னைப் பிடிக்கு முன்னே!

புது பல சேனா போதுமடா உன் அடாவடித்தனம்

புத்தம் காக்க என்கின்றாய் பகைமைதனை வளர்க்கின்றாய்

சித்தம் கலங்கி திரிகிறாய் சேற்றை வாரி இறைக்கின்றாய்

பித்துப் பிடித்து அலைகின்றாய் அத்துமீறி அழிக்கின்றாய் Continue reading

சுகக் குறள்

1. அதிகாலை எழுந்து மிதமாக நீரருந்தி
இதமான வாழ்வுகாண் பீர்.
2. நார்ச்சத்தும் நீர்ப்பொருளும் மலபந்தம் அகற்றும்
நேர்மைமிகு ஒளடத மாம்.
3. பார்வைக் கோளாறைப் பக்குவமாய்த் தள்ளிவிட
சீராக ஏ டீ எடுப் பீர்.
4. எலுமிச்சை நெல்லியில் எளிதாகச் சீ சத்தை
நலமாகப் பெற்றிடு வீர்.
5. பத்துவகை நன்மைகள் சத்தாகப் பெற்றிடுக
நித்தமும் நன்மீனை உண்டு. Continue reading

மூளை நலத்துக்கு உறக்கம் அவசியம்.

நமது வாழ்வில் மூன்றில் ஒரு பகுதியை உறக்கத்திற்காக நாம் ஒதுக்குகிறோம். போதுமான தூக்கமின்மை, வேலையில் நமது வேகம், கவனம், ஞாபகம், காரணங்காணும் திறன் போன்றவற்றில் மோசமான தன்மைகளை ஏற்படுத்தும்.

உறக்கத்துக்குப் போனதும் நமக்கு என்ன நடக்கின்றது என்பதை மிகச் சரியாக யாராவது கூற முடியுமா என வினவினால், மிகச் சுருக்கமாக யாராலும் நிட்சயப்படுத்திக் கூறமுடியாது என்பதே பதிலாக வரும். Continue reading

குர்ஆன் வழியில்…

நபிகளார் மூலம் புனித குர்ஆன் புவிக்கு இறக்கப்பட்டதன் நோக்கம்.

அனைத்து செயல்களும் நோக்கம், தாக்கம், விளைவு, பயன்பாடு போன்றவைகளை அடியொற்றியதாகவே காணப்படுகின்றன. வீணாக நாம் எதனையும் படைத்துவிடவில்லை என்று பறைசாற்றிக் கொண்டிருக்கின்றது அல் குர்ஆன். இக்குர்ஆனே கூட புனித நோக்கத்தோடே படைக்கப்பட்டு உள்ளதை அக்குர்ஆன் வாயிலாகவே அல்லாஹ் வெளிப்படுத்தியுள்ளமை நம் கருத்தைக் கவர்வது. விளக்கத்தைத் தருவது. விவேகத்தை வளர்ப்பது. வேதனையைக் களைவது. வீடுபேற்றைத் தரவல்லது. கீழ்க்கண்ட வசனம் மிகத் தெளிவாக சான்று தருகின்றது. Continue reading