பிழையாக விளங்கிக் கொள்ளப்பட்டமைக்கு,அடிப்படையை விளங்காமையே காரணம்
இஸ்லாத்தைப் பின்பற்றும் ஒருவர் அது பற்றிய அடிப்படை அறிவைப் பெற்றிருக்க வேண்டும். இஸ்லாம் என்ற வாழ்வியல் திட்டம் உலகில் மனிதப் படைப்பு தோன்றிய போதே வேதங்களாகவும் கட்டளை களாகவும், நபிமார்கள், தூதுவர்கள் மூலமாக காலத்துக்குக் காலம் தேவைக்கு ஏற்ப இறைவனால் இறக்கி அருளப்பட்டவையே! இவையனைத்தையும் குர்ஆனின் தாய் எனப்படும் உம்முல் கிதாபில் அல்லாஹ் பதிந்து வைத்திருப்பதாகக் கூறியுள்ளான். இறுதியாக அனைத்து வேதங்களில் கூறப்பட்டவையும் தனது இறுதி நபி முஹம்மது ஸல் அவர்கள் மூலம் வெளிப்படுத்தினான். குர்ஆன் அப்படி வெளிப்படுத் தப்பட்ட ஒன்றே தவிர வேறல்ல என்றும் மிகவும் வலியுறுத்திக் கூறி யுள்ளான். நபிமார்களும், தூதுவர்களும் தமக்கு இறக்கி வைக்கப்பட்ட வற்றை வெளிப்படுத்த அவனால் தேர்ந்தெடுக் கப்பட்ட சாதாரண மனிதர்களே என்பதும் அவனது கூற்றே! நபிமார்களோ, தூதுவர்களோ அவர்கள் போதித்த வேதங்களின் உரிமையாளர்கள் அல்லர் என்பதை நன்கு மனத்தில் இருத்திக் கொள்ளல் மார்க்கத்தை அறிவதில் மிக அவசியம் தேவைப்படுவது. அவர்களும் தாம் போதித்த இறை செய்தி களான வேதங்களைப் பின்பற்றியவர்களே என்பதே யதார்த்தம்!
நேர்வழி என்பது அல்லாஹ்வின் வழி என்பதால், இறுதி மார்க்கமாக வெளிப்படுத்தப்பட்டு, இறைவனால் தெரிவு செய்யப்பட்ட இஸ்லாமிய வேத நூலான புனித குர்ஆனே அந்தத் தகைமையைக் கொண்டது. அது அல்லாஹ்வின் வழிகளைக் கூறிக் கொண்டிருப்பது. அதனையே நாம் அல்லாஹ் வின் சுன்னா(வழி) என அரபியில் காண்கின்றோம். நான் ஏற்கனவே கூறியது போல் நபிமார்கள் பின்பற்றிய வழி எனப்படும் சுன்னாவும் அல்லாஹ்வின் சுன்னாவே! அல்லாஹ்வை நேசிப்போர் எனது சுன்னாவைப் பின்பற்றுவர் என நாயகம் ஸல் அவர்கள் கூறியிருக் கின்றார்கள் என்றால் அந்த வழி அல்லாஹ்வின் வழியே தவிர வேறு வழியில்லை. நபிமார்களுக்கு என்று தமது சொந்த வழிகள் எதுவு மில்லை.
46:9 – “நான் தூதர்களில் புதுமையானவனல்ல. மேலும், என் தொ டர்பாகவும், உங்கள் தொடர்பாகவும், என்ன செய்யப்படும் என்பதை நான் அறிய மாட்டேன். என்பால் வஹீ அறிவிக்கப்படுவதைத் தவிர நான் பின்பற்றுவதில்லை. மேலும், நான் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனேயன்றி இல்லை!“ Continue reading →