தமிழ் அழிந்து கொண்டிருக்கும் பொறுப்பைத் தமிழரே ஏற்க வேண்டும்
மொழிக்கு சட்டரீதியான அந்தஸ்துக்கள் கொடுப்பதனால் அதனைப் பாதுகாக்கலாம் என யாராவது எண்ணுவாரேயாகில் அவர்கள் நிஜவுலகில் வாழாமல் கற்பனையுலகில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறார்கள் என்று துணிந்து கூறலாம். வருடமொரு முறை தமிழாராய்ச்சி மாநாடுகள் என்ற பெயரில் விழாக்கள் நடத்தப்படுவதால் தமிழ் வளர்கின்றது என நினைப்பதும் முன்னையதைப் போன்றதே. ஆவணங்களாக்கப்படுபவை ஓர் காலத்தில் தடயங்களாக, சுவடுகளாக, ஆதாரங்களாக, மொழி என்ற ஒன்று இருந்ததாக நிரூபிக்க உதவுவதாக இருக்கலாம். தவிர மொழி வாழ்வதற்கு அது எவ்வகையிலும் உதவிடப் போவதில்லை.
மொழி என்பது பேச்சை முழுமுதலாகக் கொண்டது. மனிதன் தோன்றிய காலத்திலேயே, எழுத்துருப் பெறும் முன்னரே மொழிகள் தோன்றிவிட்டன. ஆரம்பத்தில் இறைவன் ஆதம் என்ற முதல் மனிதனுக்கு பொருட்களின் பெயரைக் கற்றுக் கொடுத்தாகத் தெரிகிறது. இதிலிருந்து, மனித படைப்பின் ஆரம்பத்திலிருந்தே மொழிகள் இருந்தமை தெளிவாகின்றது. அடுத்தவருக்கு அதன் வெளிப்பாடு ஆரம்பத்தில் சைகை மூலமாக சென்றடைந்து இருந்திருக்கும். இவை சைகை மொழியாக வளர்ந்திருக்கும். இன்றும் சைகை மொழிகள் உலகெங்கும் காணப்படுவது இதனை மெய்ப்பிக்கும். இக்காலத்தில் செவிப்புலன் அற்றோருக்காக இவை பாவிக்கப்படுகின்றன. Continue reading