மனிதரைப் பாதிக்கும் ஸ்ட்ரோக் – ஒரு பார்வை….

ஸ்ட்ரோக் என்ற மூளையிலுள்ள கலன்களுக்கு இரத்தத்தால் எடுத்துச் செல்லப்படும் பிராணவாயுத் தடையால் அன்றி பிராணவாயுக் குறைவால் திடீரென ஏற்படும் கலனின் இறப்பால் ஏற்படுவது. இந்த நிலை, எதிர் பாராத விதமாக மூளைக்கு இரத்தம் செல்லும் குழாயில் ஏற்படும் தடையால், அல்லது மூளையின் கலன்களுக்கு இரத்தத்தை எடுத்துச் சென்று பிராண வாயுவால் போஷிக்கும் குழாய்களில் ஏற்படும் திடீர் வெடிப்பு போன்றவையால் உருவாகின்றது.

இந்தத் தாக்குதலின் காரணமாக, நோயாளி பேச முடியாத நிலையை அல்லது ஞாபக சக்தியை இழந்துவிடும் நிலையை அல்லது முழு உடலினதும் ஒரு பக்கம் செயலிழந்து போகும் நிலையை அடையலாம்.

மனிதனை முடமாக்கும் இந்த ஸ்ட்ரோக் கை இரண்டு முக்கிய பிரிவுக்குள் அடக்கலாம்.

1. Ischemic stroke – இஸ்கீமிக் ஸ்ட்ரோக் முக்கால் பங்கினருக்கு திடீரென குருதியினுள் உருவாகும் கட்டி (blood clot), அல்லது த்ரொம்பஸ் thrombus எனப்படும் இரத்தத்தில் தடிப்பு நிலையால் உருவாகும் கட்டியினால் ஏற்படுத்தப்படும் அடைப்பு அல்லது தடையைக் குறிப்படலாம்.

எங்கோ உருவான blood clot தன்னிச்சையாக பயணித்து, மூளைக்கு நியமமாக, தடையின்றி இரத்தத்தை எடுததுச் செல்ல உதவும் குழாய்களில் தடையை ஏற்படுத்திவிடுகிறது. இந்நிலையை embolism எம்போலிஸ்ம் என்பர். இந்நிலை இரத்தக்கட்டி, வாயுக்குமிழி, கொழுப்புப் படிவங்கள் அல்லது வேறு ஏதாவது ஒரு பொருளால் ஏற்படுத்தப்படும் தடையே. இப்படி தன்னிச்சையாக பயணித்த இரத்தக் கட்டி மூளைக்கு குருதி எடுத்துச் செல்லப்படும் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்துவதையே இஸ்கீமிக் ஸ்ட்ரோக் என்போம்.

2. Hemorrhagic – ஹெமரேஜ் – மூளையின் வெளிப்பகுதியிலு்ள்ள இரத்தக் குழாய்கள் வெடித்து இரத்தம் வெளியேறி மூளைக்கும் மண்டை ஓட்டுக்கும் உள்ள இடைவெளியை நிரப்பிவிடும் நிலை. இதனை (subarachnoid hemorrhage) சுபறேக்நொய்ட் குருதி வெளியேற்றத்தினால் ஏற்படும் ஸ்ட்ரோக் என்பர். அடுத்தது (cerebral hemorrhage) செரிப்ரல் இரத்த வெளியேற்றத்தினால் ஏற்படும் ஸ்ட்ரோக். இது மூளையிலுள்ள நரம்புகள் நலிவடைந்து அவற்றில் பிளவுகள், துவாரங்கள் ஏற்படுவதனால் இரத்தம் வெளியேறி மூளையின் மற்றைய திசுக்களை செயலிழக்கச் செய்வது.

மேற்கண்ட இரு வகையான ஸ்ட்ரோக்குகளும் மூளைக்கு இரத்தம் சாதாரணமாக செல்லும் நிலையைத் தடைப்படுத்துவதனால் மூளைக்கு அதிக அழுத்தத்தைக் கொடுப்பதனால் உருவாவது.

இந்த ஸ்ட்ரோக் எற்படுவதன் விளைவாக மூளை எந்தளவு தாக்கப்படுகின்றது என்பதிலேயே அதன் விளைவுகளும், தாக்கங்களும் இருக்கும். சிறிய அளவில் தாக்கிய ஸ்ட்ரோக் சிறியளவு பாதிப்பை உருவாக்கும். அதாவது கையில்அல்லது காலில் பலஹீனத்தை உருவாக்குவது. பெரிய அளவிலான ஸ்ட்ரோக் மரணத்தை விளைவிக்கும். அதிகமான நோயாளிகள் உடலின் ஒரு பாகம் செயலிழந்த நிலையிலும், கட்டுப்பாடின்றி மூத்திரம் வெளியேறும், நிலையிலும், மூத்திரப்பைப் பிரச்சினைகளிலும் விடப்படுகின்றனர்.

இந்நோயால் பாதிக்கப்படுவோர் யார்? யார் வேண்டுமாயினும் ஸ்ட்ரோக் கால் பாதிக்கப்படலாம். அதிகமான காரணங்கள் நம்மால் கட்டுப்படுத்த முடியாதவை. சரியான போஷாக்கான உணவுகளும், உரிய மருத்துவங்களும் ஓரளவு உதவலாம். பின்வரும் காரணங்களால் ஸ்ட்ரோக் உருவாகும்.

1. 55 வயதுக்கு மேற்படுதல்
2. ஆண்களாயிருத்தல.
3. குடும்பத்தில் அந்நோயின் வரலாறு இருத்தல்.
4. உயர் குருதி அழுத்தம்
5. உயர் கொலஸ்ட்ரோல்
6. புகைப்பழக்கம்.
7. நீரழிவு வியாதி
8. உடற் பருமன் அல்லது அதிக எடை
9. இருதய வியாதிகள்
10. முன்னைய ஸ்ட்ரோக் – சிறியளவிலான இஸ்கீமிக் ஸ்ட்ரோக்
11. அதிகளவு அமினோ அஸிட் குருதியில் காணப்படுவது
12. கருத்தடைக் கட்டுப்பாடு அல்லது ஹார்மோன் சிகிச்சை
13. கொக்கெய்ன் பாவனை
14. அதிகளவு மதுபானம் பாவித்தல்
15. விவாகரத்துப் பெற்ற ஆண்கள்
16. நடு வயதுப் பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தம்

தொகுப்பு – நிஹா -