தீர்ப்புக் கூறுவதற்கு தகுதி பெறுதல்….

 

உலக விவகாரங்களில், (சிறப்பாக இயற்கையோடு ஒட்டிய விடயங்களில்), கருத்து வேற்றுமை ஏற்படும் போது, இஸ்லாமியராகிய நாம், குர்ஆனிலிருந்து தீர்வைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்கின்றான் வல்ல நாயன் அல்லாஹ். தீர்வு என்ற ஒன்றில் அல்லாஹ்வும் அவனது நபியும் தீர்ப்பளித்துவிட்டால் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டியதும் இஸ்லாமியனது கடமை.

தற்காலத்தில் அல்லாஹ்வின் வேதமும் தீர்ப்புக்காக நபிகள் ஸல் அவர்களது ஹதீதும் பயன்படுத்தப்படு கின்றது. ஹதீது ஒன்றைத் தீர்வுக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் போது, அது குர்ஆனுக்கு முரண்படாத கருத்தைத் தாங்கியுள்ளதா என்பதில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். சில விடயங்களில் அச்சந்தர்ப்பத்தில் தேவைப்படும் விதமாகவும், இன்னொரு சந்தர்ப்பத்தில் பிரயோகமாகாத ஆலோசனைகளாகவும் இருக்கலாம். அல்லது, அது போன்ற நிலையில் மட்டுமே அது செல்லுந் தன்மை கொண்டதாகவும் இருக்கலாம். அவ்வாறான நிலையினைக் கொண்ட ஹதீதுகள், உண்மை யானவை என ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தாலும், அவை தேவை கருதிய செயற்பாடாகவோ, சொல்லாகவோ, அங்கீகாரமாகவோ இருக்கலாம். Continue reading