‘கோ’னுயர்ந்தால் வீணழிவே!

ஞானசாரா ஞானம்சாரா கோணற் குணத்தாய்
மானமற்று கேணைத்தனமாய் மனிதாபிமாமும் இன்றி
ஊனமனத்தால் காணாததைக் கண்டதாக குர்ஆனில்
வீணாய்ப் பழிசுமத்தி மக்களை வழிகெடுத்தாய்!

அதனால் மானாய் மருண்டனர் மக்கள்
வீணாய் அளுத்தகம அழித்தது கண்டு
போநாய் எனக்கூற ஒரோநாயும் இல்லாது
தானாய் நடத்தினர் ‘பொ’னாக்கள் பார்த்திருக்க!

பானமருந்தி நாணமின்றி சோனகர் சொத்தை
காணச்சகியாது ஈனத்தனமாய் எரித்தே தள்ளினர்
‘ஜ’னாவும் ‘கோ’னாவும் கூசாமற்சுமத்தினர் குற்றம்
‘ம’னாவின் மானங்காக்க ஐநா சென்றதை மறந்து!

பேனாக்காரர் சேனா(ய்)க் கூட்டத்தைக் கண்டனரில்லை
கண்டிக்க வுமில்லை தண்டிக்க வேண்டியோர்
மண்டியிட்டனர் தண்டல்கார தலைவனின் கூற்றால்
குண்டர்படையினர் கொளுத்தி கொள்ளையு மடித்தனர்!

காவிகள் கவிகளாய் காடைத் தனத்தால்
காவு கொண்டனர் தாவிச் சென்றே
மூதேவிகள் செயலால் சீதேவிகள் அழிந்தனர்
கோதாவில் நின்றோர் பேதமை காட்டினர்!

சாதுக்கள் பெயரில் சண்டாளர் கூட்டம்
வாதுகள் செய்து வம்பை வளர்ப்பதா
மோதுதல் விரும்பா மூமின்களை அழிக்க
சூதுகள் செய்து தீதுகள் செய்யாதீர்!

போதும் உங்கள் புன்மனச் செய்கை
மீத முள்ளதைக் பாதுகாத்திட நாமும்
மோதும் நிலையை உருவாக்கியே எம்மை
ஏதும் செய்திட ஏவுறீர் தூண்டி!

 

- நிஹா -