அல் குர்ஆன் வசனம் 2:102
உண்மை நிலையைக் கண்டறிதல்…
மேலும், சுலைமானுடைய ஆட்சிக் காலத்தில் ஷைத்தான்கள் ஓதிய ஒன்றையே பின்பற்றினார்கள். மேலும், சுலைமான் நிராகரித்துக் கொண்டிருக்கவில்லை. எனினும், ஷைத்தான்கள் நிராகரித்துக் கொண்டிருந்தனர். மேலும், மக்களுக்குச் சூனியம் என்னும் கலையையும், பாபிலோனில் ஹாரூத், மாரூத் என்னும் இரு வானவர்கள் மீது இறக்கப்பட்டிருந்ததையும், கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ‘தவிர, நாம் ஒரு சோதனையேதாம்’ ஆகவே, நிராகரிப்பவனாக ஆகிவிடாதே என்று, அவ்விருவரும் சொல்லும் வரை எவருக்கும் அவ்விருவரும் கற்றுக் கொடுக்கவில்லை. பின்னரும், அவர்கள் கணவனுக்கும் மனைவிக்குமிடையே பிரிவை உண்டு பண்ணக் கூடியதை அவ்விருவரிடமிருந்து கற்றுக் கொண்டனர். மேலும், அல்லாஹ்வின் அனுமதி கொண்டேயல்லாது அதைக் கொண்டு எவருக்கும் அவர்கள் இடர் ஏற்படுத்துபவர் அல்லர். இன்னும், அவர்கள் தங்களுக்குப் பயனளிக்காததும், இடர் அளிக்கக் கூடியதுமான ஒன்றைக் கற்றுக் கொள்கின்றனர். ‘எவரொருவர் இதை விலைக்கு வாங்குவாரோ அவருக்கு மறுமையில் எத்தகைய நற்பேறும் இல்லை’ என்பதை உறுதியாக அறிந்தே இருந்தனர். மேலும், எதற்காகத் தங்கள் ஆத்மாவை விற்று விட்டார்களோ, அது மிகவும் கெட்டது. அவர்கள் அறிந்திருக்க வேண்டுமே! Continue reading