மருந்தாகும் உணவு!

கொலஸ்ட்ரோலை குணமாக்க
கோரைக் கிழங்கு பவுடர்! 

இன்று உலகை உலுக்கி வரும் உபாதையான மாரடைப்புக்கு முக்கிய காரணிகளில் ஒ்னறாக உள்ளது கொலஸ்ட்ரோல் என்ற கொழுப்பே!

இதி்ல் கெட்ட கொலஸ்ரோல் எல்டீஎல் என்பது குருதியில் கலந்து வெளியேறிடாது, ஆங்காங்கே நரம்புகளில் தங்கி, அவற்றினைக் குறுகலாக்குவதுடன் அடைப்புக்களையும் ஏற்படுத்தி மரணத்தையும் விளைவித்து விடுகின்றது.

அதனால், கொலஸ்ட்ரோலை உணவால் கட்டுப்பாட்டுள் வைத்திருக்கும் முறைகள் நன்மை பயப்பன. அவற்றில் மிக முக்கயமான நடைமுறையாக பசிக்காமல், மற்றும் செரிமானமற்ற நிலையில் புசிக்கும் ‌ பழக்கத்தைத் தவிரத்துக் கொள்ளல் அவசியம்.

உணவாக, மோர் அருந்தி வருதல் இலகுவாகக் கெட்ட கொலஸ்ட்ரோலை வெளியேற்றும் எளிய முறையாகும்.

சாப்பிட்டவுடன் சுடுநீர் குடிக்க வேண்டும. அதிலும் சிறிது மிளகும், இஞசியும் இடித்துப் போட்டு அவித்த சுடுநீரைக் குடிப்பது கொலஸ்ட்ரோலைக் குறைக்க உதவும்.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய்ச் சாறு அருந்துவது மற்றொரு உண்ணும் முறை. 

கோரைக் கிழங்கு பவுடர் கிடைக்குமாயின் அதில் ஒரு கரண்டி, அரை கிளாஸ் தண்ணீரிலிட்டு கொதிக்க வைத்து கால் வாசியாகக் குறைந்த பின்னர், காலையும் மாலையும் உணவுக்கு முன்னர் அருந்திவ‌ர நன்மை பயக்கும்.

 

தொகுப்பு – நிஹா