குர்ஆன் குறள் !
மேலும் ஹலாலை மேன்மையாய்க் கூறும்
சாலும் மாயிதா நாலைந்து !
வுளுவின் முறைமையினை முழுமையாய்க் கண்டுகொள்
வழுவிலா தயமத் துடன்! 5:6
காகம் பிணம் புதைக்கும் வல்லபத்தை
வாகாக 5:31 கூறும்!
செய்தல் கொலை ஓரான்மாவைக் காரணமின்றி
செய்ததற்குச் சமனாம் அனைவரையும்! 5:32
நற்செயல் செய்பவர் ஆணோபெண்ணோ அல்லாஹ்
சொற்படி சுவனம் புகுவர்! 4:124