குர்ஆன் குறள்!

 

படைத்தானே வானம்பூமி உண்மையைக் கொண்டே
படைப்பானே நினைத்தவுடன் புதிதாக! 14:19

மணம்வீசும் வார்த்தை வேறில்லை கலிமாதையிபாவே
காணலையோ அதனடி முடியை!         14:29

கனிதருமே அல்லாஹ்வி னனுமதி கொண்டு
நனிபெறுவீருபதேசம் கலிமா தனில்      14:25

கண்டுகொள ஹறாமான உணவகை மாயிதாவில்
உண்டே மூன்றில் தெளிவாய்                 5:3

மார்க்கத்தைப் பரிபூரணம் ஆக்கினானே அல்லாஹ்
பார்க்கமீண்டும் மூன்று மாயிதாவில்     5:3

- நிஹா -