அறு சுவைகள்:

அறு சுவைகள் பற்றி அறியாத மனிதர்கள் இருக்க முடியாது. உணவுண்போர், பிறப்பு முதல் அறிந்து அனுபவித்து வருவது. அதற்குப் பேருதவி செய்வது, நாவும், அண்ணமும் என்றால் சிலருக்கு ஆச்சரியமாகவே இருக்கும். விஷேடமாக புளிப்பை நாக்கு அண்ணத்தின் உதவியின்றி அறிந்து கொள்ளாது என்பது அனுபவித்து உணர்ந்த உண்மை!

அந்த வகையில் நான் இங்கு கூற விழைவது ஆறு சுவை –  துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, காரம் அல்லது உறைப்பு, கசப்பு, உவர்ப்பு – களின் குணநலன்களை! முன்னோடியாக, துவர்ப்பு பற்றி பார்ப்போம்.

துவர்ப்பு: உடல் நலத்திற்கு மிகவும் உகந்தது. விருப்பு, வெறுப்பு இல்லாதது. வியர்வை, இரத்தப் போக்கு, வயிற்றுப் போக்கைச் சரி செய்யும். வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அத்திக்காய் போன்றவை துவர்ப்பு சுவை உடையவை.

முடிவில் சாப்பிடும் ஒழுங்கை அறியலாம்.

– நிஹா –