வேணில் காலம் வீணில் அலையாதே,
கானில் கூளம் வீணில் போடாதே!

தேனுள் அமிழ்ந்தால் ஊனும் சிறக்கும்,
தீனுள் நுழைந்தால் ஞானம் பிறக்கும்!

வானுள் நுழைந்தால் வையம் தெரியும்,
வானுள் வலம்வர வசதியும் வேண்டும்!

சண்டையர் வாழ்வு மண்டையில் முடியும்,
சண்டாளர் வாழ்வு திண்டாடி மடியும்!

தன்னை வருத்தும் தவமே சிறக்கும்,
தன்னை வளர்க்கும் தனமே சிறுக்கும்!
.
பறப்பதை விட்டு பறவாது பார்,
கறப்பதை விட்டுக் கறந்ததைக் கார்!

வரைவிலா வாழ்வு விரைவிலே அழியும்,
கரைகாணா இன்பம் பிறர் காண வருத்தும்!

நிறை உணவு தருமே நீடித்த வாழ்வு,
நிறை உயர்வு தருமே வாடிய வாழ்வு!

அரைத்திடாதுண்ணின் நரைத்திடாச் சாவு,
கரைந்திடாது சேர்ந்தால் கரைத்திட முயலு!

பிந்தலும் முந்தலும் போட்டியில் நிகழ்வே,
பிந்தாது செய்தல் வாழ்வினில் உயர்வே!

– நிஹா –