Daily Archives: February 9, 2015

மருத்துவம் – படித்ததில் இருந்து…

மருத்துவம் – படித்ததில் இருந்து…

 

கொலஸ்ட்ரோல் அடைப்பு, நரம்பு வியாதிகள் நீங்க….

வல்லாரைக் கற்கம்

 

பூண்டு, சுக்கு, மிளகு, திப்பிலி, மல்லி, வல்லாரை, உருண்டைப் பிரண்டை வகைக்கு ஐந்து கிராம் அரைத்துக் குளிகை போல் செய்து, காய வைத்துக் காலை, மாலை பாவித்துவர நரம்பு சம்பந்தமான சகல வியாதிகளும் நீங்கும், அத்தோடு கொலஸ்ட்ரோல் ஆல் ஏற்படும் அடைப்பு சுகமாகும்.

 

- நிஹா -

Quran Kural!

குர்ஆன் குறள்!

 

அறிவதற்காய் வந்தமகன் அறிந்திடனும் நல்லவற்றை
தெரிந்து தெளிந்து காலமெலாம்!

 

அக்கணமே முடிந்துவிடும் மூச்சிழந்தால் வாழ்வு
சிக்கனமாய் செலவு செய்!

 

சிறப்பான வாழ்விற்கு உரித்தான ஆயத்தம்
பிறப்புமுதல் செய்து வரனும்!

 

மிச்சமுள்ள வாழ்வுதனை கச்சிதமாயக் கடந்துசெல
இச்சைதனை ஒழித்து விடு!

 

ஈமானின் முதல்படிவம் தொழிலே‌யாமது சீரானால்
ஈசனிடை விலகும் திரை !

 

- நிஹா -

UNDERSTAND THE QURANIC VERSES DAILY IN KNOWN LANGUAGE AND MEMORIZE!

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண !

 

அல் குர்ஆன் 2:177

கிழக்கிலோ, மேற்கிலோ உங்கள் முகங்களைத் திருப்புவது நன்மை ஆகிவிடாது. எனினும், நன்மையை அடைபவர், எவர் அல்லாஹ்வையும், மறுமை நாளையும், வானவர்களையும், வேதத்தையும், நபிமார்களையும் நம்பிக்கை கொண்டு, செல்வத்தைத் தம் விருப்பத்துடன் உறவினர்கள், அனாதைகள், ஏழைகள், வழிப்போக்கர்கள், யாசகம் கேட்போர் முதலியோருக்கும், விடுபடுவதற்கும் கொடுத்து உதவுபவரும், மேலும், தொழுகையை நிலைநிறுத்தி, ஸகாத்தை வழங்கி வருபவரும், மேலும், வாக்குறுதிகளை நிறைவேற்றுபவரும, கடும் வறுமையிலும் பிணியிலும், போர்க் காலத்திலும் பொறுமையை மேற்கொள்பவரும்தான். இத்தகையோரே உண்மையாளர். இன்னும் அவர்கள்தான் இறை அச்சம் கொண்டோர்.

- நிஹா -

 

Al Quran 2:177

 

It is not righteousness that ye turn your faces towards East or West; but it is righteousness to believe in Allah and the Last Day and the Angels and the Book and the Messengers;  to spend of your substance, out of love for Him. for your kin, for Orphans, for the Needy, for the Wayfarer, for those who ask, and for the ransom of slaves, to be steadfast in prayer and give Zakat, to fulfil the contracts which you have made; and to be firm and patient in pain and adversity and throughout all periods of panic.  Such are the people of truth, the God-fearing.   

- niha -