Category Archives: Politics

இலங்கை முஸ்லிம்களின் உரிமைகளும் கடமைகளும் ஓர் போஸ்ட்மோட்டம் ( post-mortem)

இலங்கை முஸ்லிம்களின் உரிமைகளும் கடமைகளும்
ஓர் போஸ்ட்மோட்டம் ( post-mortem)

இலங்கை முஸ்லிம்களிடம் காணப்படும் சிந்தனையில் மாற்றம் தேவை. நாமும் இந்நாட்டுப் பிரஜைகளே! இந்நாட்டின் பெரும்பான்மையினருக்குள்ள அதேயளவு உரிமைகள் நமக்கும் உண்டு. இன்னும் சொல்லப் போனால், மற்றைய இனங்களை விட நாம் இந்நாட்டுக்கு விஸ்வாசமாக நடந்துள்ளோம்.

சிங்களவரும், தமிழரும் கூட இந்நாட்டில் புரட்சி, உரிமை என்ற பெயர்களில் இரத்த ஆறை ஓட வி்ட்டுள்ளனர். ஆனால் நாம் என்றும் இந்நாட்டின் அரசியல் யாப்புக்கெதிராக கிளர்ந்தெழுந்ததில்லை. நமக்குப் பிரச்சினைகள் ஏற்பட்ட போதெல்லாம் பேச்சு வார்த்தை மூலமும், நீதிமன்றின் மூலமும் அவற்றைத் தீர்த்துக் கொண்டு சிங்கள, தமிழ் மக்களோடு சகஜீவன வாழ்வை மேற்கொண்டு வந்துள்ளோம்.  Continue reading

குறைகாண முடியாத நிறைவான வல்ல நாயன் அல்லாஹ் பற்றி ஒரு நோக்கு…

தனது இறுதிச் செய்தியை உலகோருக்கு வெளிப்படுத்த ஏன் ஓர் எழுத,வாசிக்கக் கற்காத மனிதனைத் தேர்ந்தான் !  

                            ( சிறப்புக் கண்ணோட்டம்)

                  

வல்ல அல்லாஹ் ரப்புள் ஆலமீன் நபிமாரைத் தேர்ந்து அவர்கள் மூலம் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கில் வேதங்களை வழங்கினான். அப்படித் தெரிவு செய்யப்பட்டவர்கள் அனைத்து நபிமாரும் அறிவின் சிகரங்களாகவும், பண்பின் பிறப்பிடங்களாகவும், பொறுமையின் பொக்கிஷங்களாகவும், ஒழுக்கத்தின் விழுப்பங்களாகவும், உண்மையின் வாரிசுதாரர் களாகவும், நன்மையின் உறைவிடங்களாகவும், தன்மையின் உதாரணங்களாகவும் இருந்தே வந்துள்ளனர்.

பல்வேறு சிறப்பம்சங்களும் பொருந்தியவராக பால்ய வயதிலேயே திகழ்ந்த முஹம்மது அவர்கள் கல்வியை நாடாதிருந்தமைக்கான காரணம் எதுவும் இருந்திருக்கவில்லை. குழந்தையாக இருந்த போதே பெற்றாரை இழந்திருந்தாலும், அவர்களை வளர்த்தவர்கள் அக்காலை குறைசிகளான ஹாஸிம் கோத்திரத்தார். இவர்கள் கல்வியறிவு, ஆட்சி அந்தஸ்து, பணபலம், பொருட் செல்வம், மனித வளம் போன்ற அனைத்தையும் பெற்றிருந்த சீராளர்களே. ஆயினும், அவர்கள் ஏன் தம்மால் வளர்க்கப்பட்ட தமது பேரக்குழந்தையை, பெறாமகனை பாடசாலைப் பக்கம்கூட ஓதுங்க விடாது கல்வியை அவர்களுக்கு எட்டாக் கனியாக்கி, உம்மி  எழுத, வாசிக்கத் தெரியாதவர், அல்லது யாரிடமும் கல்வி பெறாதவர், யாராலும் கல்வி ஊட்டப்படாதவர் என்ற பட்டப் பெயருக்குச் சொந்தமாக்கினரோ தெரியவில்லை. Continue reading

Lesser known facts about Libya and Gaddafi !

1. There is no electricity bill in Libya; electricity is free for all its citizens.

2. There is no interest on loans, banks in Libya are state-owned and loans given to all its citizens at 0% interest by law.

3. Home considered a human right in Libya – Gaddafi vowed that his parents would not get a house until everyone in Libya had a home. Gaddafi’s father has died while him, his wife and his mother are still living in a tent. Continue reading

பதிப்பில் வராத கிடப்புகள்! குட்டுப்பட்டுச் சாவீர் …

குட்டுப்பட்டுச் சாவீர் என்றும் நட்டநடு றோட்டில் தானே!

நாட்டைவிட்டு நம்மைத் துரத்திய
துயரக் கதையால் தொடர்ந்த இழப்பை
எட்டாண்டு சென்றும் தாக்கம் தீரா
விதியை நொந்து வெந்த வேளை
கெட்டவர் செய்கையை வெறுத்துச் சபித்து
அறம்போல் ஓர்வரி கவிதையி னிடையே
குட்டுப் பட்டுச் சாவீரொரு நாள்
நட்ட நடு றோட்டில்தா னென்றேன்! 1 Continue reading

1990இல் இனச்சுத்திகரிப்புக்கு உள்ளான வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துடன் செயற்படுத்தப்பட வேண்டியவை !

வடக்கு முஸ்லிம்களை மீள்குடியேற்றம் செய்ய முனைபவர்களுக்கு கீழ்க்கண்டவற்றை மிகத் தெளிவாகக் குறிப்பிட விரும்புகிறேன். முஸ்லிம்களைப் பாதுகாக்கத் தவறியதற்கு அரசுகளும், அவர்களைக் கவனிக்காது மாற்றாந்தாய் மனப்பான்மை கொண்டிருந்த அனைத்து தரப்பினரும், விரட்டிய பயங்கரவாதிகளும் விசாரிக்கப்பட்டு நியாயம் காணப்படல் வேண்டும்.

Continue reading

பத்திராதிபர் கடிதங்கள்… நம்பிக்கையீனங்களே வாழ்க்கையாகி…..

ஒரு நாடு சுபிட்சமாக வாழ்கின்றதென்றால், அங்கு மக்கள் வாழ்க்கை அமைதியாக, நிம்மதியாக, சந்தோஷமாக, பயமற்றவர்களாக, கவலையற்றவர்களாக எவ்விதப் பிரச்சினைகளுமற்று வாழ்கிறார்கள் என்பதே! நம்நாட்டு மக்கள் அனைவரும் அந்த வகையில் எதிர்மாறான தன்மைகளுடன் 2009 இன் கடைப்பகுதிவரை எழுத்தில் வடிக்க முடியா பல்வேறு துன்பங்கள், துயரங்கள், அச்சுறுத்தல்கள், பாதுகாப்பின்மை, பயங்கரம், வறுமை போன்ற இன்னோரன்ன இன்னல்களால் மனதாலும், உடலாலும், மானசீகமாகவும், வெளிப்படையாகவும் பாதிக்கப் பட்டவர்களாகவே இருந்து வந்துள்ளனர். அப்போதைய அனைத்துக் கஸ்டங்களும் பங்கரவாதத்தின் பாதிப்புக்களால் ஏற்பட்டிருந்ததாக மக்களும் நம்பிப் பொறுமையைக் கடைப்பிடித்தனர். அனைத்துப் பிரச்சினைகளிலும் நேரடியாக, தாக்கத்தை ஏற்படுத்தி, அன்றாடம் முகங்கொடுக்க வேண்டிய பிரச்சினையாக விஸ்வரூபம் எடுத்திருந்தது வாழ்க்கைச் செலவு என்பதே! இவற்றை, அமைதியை விரும்பிய மக்கள் மிகப் பொறுமையாக ஏற்றனர் விடிவை எதிர்பார்த்து! Continue reading

பதிப்பில் வரா கிடப்புகள் ….

காற்றும் இங்கு கூற்றாய் மாறுமுன் நாற்றமடிக்கும் கூற்றைவெறுப்போம் …

அன்னையைப் பிள்ளையை அண்ணியை அண்ணனை
கண்ணின்மணியாம் கணவனைத் தனையனை
பெண்ணைப் பேதையை கன்னியைத் தந்தையை
எண்ணிலடங்கா இனத்தவர் பலரை ! Continue reading

பதிப்பில் வராத கிடப்புகள் ….

                                              ஓட்டிய புலிகளை உவந்திட தகுமோ !                                                 விரட்டிய குற்றம் வேறுலகில் உண்டோ !

எட்டொண்ப தாண்டுகள் ஒட்டு மொத்தமாகப்
பட்டதை எண்ணிப் படைத்திடல் எளிதோ !
சுட்டதை யாற்ற மருந்துக ளுண்டோ !
விட்டதைப் பிடிக்க வித்தைக ளுண்டோ ! Continue reading

பதிப்பில் வரா கிடப்புகள்

நேர்மையே நிறைந்த தூது

மணித்திரு நாட்டின் பிணித்திரை நீங்க
சனித்தது புரிந்துணர் வொப்பந்த மொன்று
திணித்தனர் புளிப்பதை இனித்திடு மென்று
கனிந்தன மனங்கள் கனவு கனிந்ததென
இனிவராப் போரென இனிதே மகிழ்ந்தனர்
துணிவாய்த் திரிந்தனர் துயரம் மறந்தே ! Continue reading