Author Archives: factsbeh

நீதி சரிவர நிலைநிறுத்தப்படும் போதுதான் அரசாங்கம் நாட்டின் ஸ்திரத்தன்மையை பாதுகாக்க முடியும்

நீதித்துறையில் காணப்படும் குறைபாடுகள் நீக்கப்படாதவரை நீதியை நிலைநிறுத்துவது என்பது வெறும் பகற்கனவாகவே இருக்கும். 
சட்டங்கள் இயற்றப்பட்டிருப்பது குற்றச் செயல் நடந்து விடாமல் தடுப்பதற்காகவே தவிர, அதே சட்டமே குற்றச் செயலுக்கு சாதகமான சூழலை உருவாக்கிக் கொடுப்பதற்கல்ல. குற்றச் செயல் சரியான தண்டனையைப் பெற்றுக் கொள்ளவில்லை என்றால், குற்றச் செயல்களுக்கு எண்ணெய் ஊற்றி வளர்ப்பதாக சட்டங்களே அமைந்து விடுகின்றன.  Continue reading

அறு சுவைகளின் குணங்கள்!

அறு சுவை

தொடர்ச்சி…

இனிப்பு: மனதுக்கும், உடலுக்கும் உற்சாகத்தைத் தரக்கூடியது. அதிகமானால் எடை கூடும். உடல் தளரும் சோர்வும், தூக்கமும் உண்டாகும். பழங்கள், உருளைக்கிழங்கு, கரட், அரிசி. கோதுமை, கரும்பு போன்றவற்றில் இச்சுவை உண்டு. Continue reading

புற்று நோயைக் குணப்படுத்த, தடுக்க மாற்றுவழி!

புற்று நோயைக் குணப்படுத்த, தடுக்க மாற்றுவழி

மனித உடல் கலங்களால் ஆக்கப்பட்டது என்பதை அனைவரும் அறிவீர்கள். இக்கலங்களுள் தீமை பயக்கத்தக்க கலன்களும், நன்மை பயக்கத்தக்க கலங்களும், தீயவைகளை அழிக்கக் கூடிய ஆற்றல் வாய்ந்த கலன்களும் நிறைந்தே காணப்படுகின்றன. நம் உடல் அடையும் பல்வேறு மாற்றங்களுக்கு முக்கிய காரணமாயமைபவையும் இக்கலன்களே. இவைகளுள்ளே நாமறியாமலே நம்மனைவரது உடலிலும் புற்று நோயை உருவாக்கக் கூடிய கலன்களும் உண்டு. இவை நமக்குத் தெரிவதில்லை. தரமான வைத்திய பரிசோதனைகளின் போதுகூட இவை தெரிய வருவதில்லை. இக்கலன்கள் பல பில்லியன்களாக பெருகும் வரை அவை கண்டு பிடிக்கப்படுவதில்லை. Continue reading

அறு சுவைகளின் குணங்கள்!

அறு சுவைகள்:

அறு சுவைகள் பற்றி அறியாத மனிதர்கள் இருக்க முடியாது. உணவுண்போர், பிறப்பு முதல் அறிந்து அனுபவித்து வருவது. அதற்குப் பேருதவி செய்வது, நாவும், அண்ணமும் என்றால் சிலருக்கு ஆச்சரியமாகவே இருக்கும். விஷேடமாக புளிப்பை நாக்கு அண்ணத்தின் உதவியின்றி அறிந்து கொள்ளாது என்பது அனுபவித்து உணர்ந்த உண்மை! Continue reading

‘ப’ – ‘பா’ ஆகின்றது!

படித்துத்தான் பாருங்களே!

ப வில் பொதிகை எனக் கூற பொதி என்றேன், பொதியில்
பதித்ததனால் எழுந்த பயங்கரத்தை பேசிடாதே என்றதே!

ப வில் பெயர் எனத் தொடங்கியதும் பிழை புரிந்தால்
பறந்திடாதோ பேரும் புகழும் என்றதே! Continue reading