Author Archives: factsbeh

Quran Kural ! குர்ஆன் குறள்!

குர்ஆன் குறள்!

 

படைத்தானே வானம்பூமி உண்மையைக் கொண்டே
படைப்பானே நினைத்தவுடன் புதிதாக! 14:19

மணம்வீசும் வார்த்தை வேறில்லை கலிமாதையிபாவே
காணலையோ அதனடி முடியை!         14:29 Continue reading

இயற்கை மருத்துவம்

இயற்கை மருத்துவம்

முயன்று பாருங்கள் முடியுமா பருமனைக் குறைக்க என்று !

இன்றைய அவசர உலகில் நிலை கொண்டுள்ள உணவுப் பழக்கமும், உடலுழைப்பின்மையும், இன்று மக்களை, சிறப்பாக நடுத்தர மற்றும் மேல்தட்டு மக்களைப் பாடாய்ப்படுத்துகின்றது உடற்பருமன் என்று. அதற்காக ஏங்கிக் கிடப்போர் எண்ணிலடங்கார். அவர்களுக்கு இது ஓர் நற்செய்தியாகலாம். இறை நாட்டமிருந்தால் எதுவும் நடக்கலாம் என்ற நம்பிக்கையோடு முயன்று பாருங்கள். இறை கருணை கிட்டினால், நன்மை பயக்கும்.

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண !

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண !

 

அல் குர்ஆன் 21:7

உமக்கு முன்னர் அவர்கள்பால் நாம் வஹி அறிவிக்கின்ற மனிதர்களையே அன்றி, நாம் தூதராக அனுப்பவில்லை. எனவே, நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் ஞானமுடையவர்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.

 

 – நிஹா – Continue reading

விவாதமா ஆய்வா உண்மையை வெளிப்படுத்த வல்லது!

விவாதமா – ஆய்வா உண்மையை வெளிப்படுத்த வல்லது!

மனித நடவடிக்கைகளில் மிக உன்னதமான இடத்ததை வகிப்பது உண்மையைக் கண்டறிவதே! அந்த வகையில் உண்மையைக் கண்டறியும் பல்வேறு வசதிகளும் வாய்ப்புகளும், உத்திகளும் இருந்தாலும்கூட ஒப்பு நோக்கல் comparative study மிகத் தெளிவான உண்மையைக் கண்டறிய உதவும் ஓர் பொறிமுறையாகப் பார்க்கலாம். Continue reading

புதுக்கவிதை ! ஒப்பீடு ! – புது விலை!

புதுக்கவிதை !

ஒப்பீடு – புது விலை!

 

’28 சதத்திலிருந்து 65 ரூபாவாகிய
ஏழைகளின் உணவுப்பண்டம்
5 சதத்திலிருந்து 15ரூபாவாகிய
தேநீரைவிடக் குறைவுதான்’

 

- நிஹா -

அறிந்து அவனது அருட்கொடையை அடைந்து கொள்ள ஓர் வசனம்!

அறிந்து அவனது அருட்கொடையை அடைந்து கொள்ள ஓர் வசனம்!

அல்குர்ஆன் 4:147

‘நீங்கள் அல்லாஹ்வை விசுவாசித்தும், அவனுக்கு நன்றி செலுத்தியும் வந்தால், உங்களுக்கு வேதனை செய்து அவன் என்ன அடையப் போகின்றான்? அல்லாஹ் நன்றி பாராட்டுகிறவனாகவும் நன்கு அறிகிறவனாகவும் இருக்கின்றான்.’ Continue reading

நம்மைப் பற்றிச் சில விநாடிகள் சிந்திப்போமே!

நம்மைப் பற்றிச் சில விநாடிகள் சிந்திப்போமே!

 

முன்னைய பின்னூட்டம் ஒன்று கண்ணோட்டத்திற்காக….

 

மிக நேர்மையான முறையில் குர்ஆனியக் கருத்துக்களின் அடிப்படையில் தற்போதைய பிரச்சாரகர்களாக அல்லது பிதாமகர்களாக, அல்லது பாதுகாப்பாளர்களாக, அல்லது சீர்திருத்தவாதிகளாகக் கூறிகொண்டு குழப்பத்தை மட்டுமே ஏற்படுத்தி வருவோரைப் பற்றிய விமர்சனத்தை நடுநிலையில் நின்று வாசித்து அறிந்து கொள்ளும், ஆர்வமோ, ஏற்கும் மனமோ, விளங்கிக் கொள்ளும் ஆற்றலோகூட சம்பந்தப்பட்டவர்களுக்கு இருக்குமோ என்பது தெரியவில்லை.  Continue reading

ஏற்பும் மறுப்பும் இருபது! ஏற்பதும் மறுப்பது உங்களது!

ஏற்பும் மறுப்பும் இருபது!

ஏற்பதும் மறுப்பதும் உங்களது! 

கோத்திரங்கள் அறிந்ததுண்டு ஆனால்
உபத்திரவங்கள் கொடுத்ததில்லை!

சந்திகளில் நின்றதுண்டு ஆனால்
சிந்திக்கும் திறனை இழந்ததில்லை!

பந்திகளில் அமர்ந்ததுண்டு ஆனால்
பாரபட்சம் காட்டியதில்லை! Continue reading