Monthly Archives: October 2014

UNDERSTAND THE QURANIC VERSES DAILY IN KNOWN LANGUAGE AND MEMORIZE!

தினமொரு திருமறை வசனம்  தெரிந்த மொழியில் மனனம் செய்ய!

 

அல் குர்ஆன் 6:44

 

ஆகவே, அவர்களுக்கு நினைவூட்டப்படடதை அவர்கள் மறந்த பொழுது, எல்லாப் பொருட்களின் வாயில்களையும் நாம் அவர்களுக்குத் திறந்துவிட்டோம். முடிவாகத் தங்களுக்கு வழங்கப்பட்டவற்றைக் கொண்டு அவர்கள் மகிழ்ந்து கொண்டிருந்த பொழுது அவர்களைத் திடீரென நாம் பிடித்துக் கொண்டோம். அப்பொழுது அவர்கள் நம்பிக்கை இழந்தவர்களாகிவிட்டனர்.

 

- நிஹா -

 

Al Quran 6:44

 

But when they forgot the warning they had received, We opened to them the gates of all things. Until, in the midst of their enjoyment of Our gifts, on a sudden, We called them to account, when lo! They were plunged in despair! 

 

- niha -

Quran Kural ! குர்ஆன் குறள் !

குர்ஆன் குறள்

கடல்மையும் தீர்ந்திடும் கலிமத்தி ரப்பை எழுதிட
மறுகடலும் சேர்ந்தே ஒழியும் 31:27

 

நேர்வழியில் செலுத்துதலே நன்மைக்கான கூலியென
சீர்பெறக் கூறுவனே ஹக்கை! 6:84

 

நேர்வழியில் செலுத்திவிட ஓர்வழியும் கூறுவனே
பார்புகழும் நன்மையே அது! 6:84

 

செலுத்திடுவான் அல்லாஹ் கூலியாய் நேர்வழியில்
செய்தோர்க்கு நாளும் நன்மை ! 6:84

 

திட்டிடாதீர் அவரழைப்போரை அல்லாஹ்வை அன்றி
திட்டுவரே வரம்புமீறித் தனை! 6:108

 

-நிஹா -

UNDERSTAND THE QURANIC VERSES DAILY IN KNOWN LANGUAGE AND MEMORIZE!

தினமொரு திருமறை வசனம்  தெரிந்த மொழியில் மனனம் செய்ய!

 

அல் குர்ஆன் 33:58 – மேலும், முஃமினான ஆண்களையும், முஃமினான பெண்களையும் அவர்கள் செய்யாததைக் கூறித் துன்புறுத்துகிறார்களே அத்தகையவர்கள், நிச்சயமாக அவதூறையும், பாவத்தையும் சுமந்து கொண்டனர்.

- நிஹா -

 

Al Quran   33:58    And those who annoy beieving men and women undeservedly,  bear a calumny and a glaring sin.  

 

- niha -

QURAN kURAL ! குர்ஆன் குறள் !

குர்ஆன் குறள்  !

கருத்துள்ள குர்ஆன் தந்தது இறங்கியே
பெரும் பெருமை குர்ஆனுக்கு!          2:183

 

இருக்கிறான் நம்மருகில் கூறுகிறான் பதில்
தேறுவீர் பகறா186 பார்த்து!

 

ஒருவருக் காடையாய் ஒருவ ருலகத்தில்
இருவரும் இணைந்து வாழ்வீர்!        2:187

 

நுழையாதீர் நன்மை இல்லை பின்வழியில்
நுழைவீரே வெற்றியாமே முன்வழி! 2:189

 

மனிதருக்கும் ஹஜ்ஜுக்கும் ‌கூறிடுமே நேரத்தை
வானில் வளர் பிறை!                         2:189

 

- நிஹா -

 

UNDERSTAND THE QURANIC VERSES DAILY IN KNOWN LANGUAGE AND MEMORIZE!

தினமொரு திருமறை வசனம்  தெரிந்த மொழியில் மனனம் செய்ய!

அல் குர்ஆன் 27:81

குருடர்களுக்கு, அவர்களது வழிகேட்டை விட்டும் நேர்வழி காட்டுபவராக நீர் இல்லை. நம்முடைய வசனங்களைக் கொண்டு ஈமான் கொள்பவர்களைத் தவிர, நீர் செவியேற்கச் செய்திட முடியாது. இவர்கள்தாம் முஸ்லிம்கள்.

– நிஹா -

 

Al Quran 27:81

 

Nor canst thou be a guide to the blind, from straying : only those will thou get to listen who believe in Our Signs, so they submit.  

 

- niha -

Quran Kural!

குர்ஆன் குறள்

 

திருப்பிடுக முகத்தை மஸ்ஜிதுல்ஹரம் பக்கல்
இருந்தாலும் எங்கும் நீர்! 2:150

படுத்துவாருமை தூய்மை நம்வசனங் கொண்டு
கற்றுத்தருவார் ஞானத்துடன் வேதம்! 2:150

Continue reading

Long March of People Liberation Army – 1934

சீன கம்யூனிஸ இராணுவத்தினரின் பாத யாத்திரை – 1934

சீனாவில் கம்யூனிஸம் தோற்றம் பெற்ற நிலையில் அன்றைய நெருக்கடி நிலையின் தேவையான தீர்வாக மேற்கொள்ளப்பட்ட நீண்ட தூர நடை உலக வரலாற்றில் தனித்துவத்துடன் ‌பேசப்படுவது.

மாவோ சே துங் அவர்களின் தலைமையில், அன்றைய ஆட்சியாளரின் சீன தேசியக் கட்சியின் கே.எம்.ரி என அழைக்கப்பட்ட இராணுவத்தின் அழிவிலிருந்து, மக்களைக் காப்பாற்ற மக்கள் விடுதலை இராணுவம் எனும் கம்யூனிஸ இராணுவத்திரால் முன்னெடுக்கப்பட்டது. இது 1934ஆம் ஆண்டில் தொட்ங்கி முன்னூற்றி எழுபது நாட்களுக்கு மேல் நீடித்தது. அக்கால எல்லையில் அவர்கள் கால்களால் கடந்த தூரம் எட்டாயிரம் மைல்கள். Continue reading

நற்சிந்தனை 28 எது மிக அழகானதோ அதைக் கொண்டு தடுத்துக் கொள்வீராக!

நற்சிந்தனை 28

எது மிக அழகானதோ அதைக் கொண்டு தடுத்துக் கொள்வீராக!

 

அல் குர்ஆன் 41:34 நன்மையும், தீமையும் சமமாகாது. எது மிக அழகானதோ அதைக் கொண்டு தடுத்துக் கொள்வீராக! அப்போது எவருக்கும் உமக்கும் இடையே பகைமை இருந்ததோ அவர் உமது உற்ற நண்பரைப் போல் ஆகிவிடுவார்

 

மேற்கூறிய குர்ஆனிய வசனம் ஒன்றே உலகில் சாந்தி, சமாதானத்தை நிச்சயமாக வருவித்துவிடும் என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றது.  Continue reading