Monthly Archives: February 2014

Medical tips! மருத்துவக் குறள் !

மருத்துவக் குறள் !

கைமருந்து
தேய்த்துக் குளித்திடுக தேமல்தீர வெற்றிலைபூண்டு
சேர்த் தரைத்த விழுது!

தேங்காநெய் கற்பூரம் சுடவைத்துப் நெஞ்சினிற்பூசிவர
பாங்காய் ஒளிந்திடும் சளி! Continue reading

Quran Kural !

குர்ஆன் குறள்!

செய்திடுகலந் தாலோசனை காரியங்க ளனைத்தையும்
செய்யுமுன் 3:159 காண்!

குன்றிடாதீர் பலம் கொண்டிடாதீர் கவலை
குன்றாவிசுவாசி 3:139 பார்! Continue reading

Siddha Medical Tips! சித்த மருத்துவக் குறிப்புகள்!

கைமருந்து

 

சீதபேதியகல மலைவாழைப் பழத்தை யுண்டிடுக
பேதமில் நல்லெண்ணெய் சேர்த்து!

உண்டுவர இருவேளை செவ்வரத்தை யிலைத்தூள்
நின்றிடுமே மலச்சிக்கல் நம்பே!

சுட்டெடுத்த மஞ்சள்சாம்பலை தேனுடன் அருந்திவர
கட்டாயம் குடற்புண் சுகம்!

நெல்லிச் சாறைத் தேன்கலந்து அருந்த
பொல்லாத தொடர்விக்கல் தீரும்!

பவுத்திரமாக டம்ளர்நீரில் கறிவேப்பிலை இஞ்சிசீரகம்
அவித்தருந்த அஜீரணம் சுகம்!

 

- நிஹா -

புதுக் கவிதை! புத்தகங்கள் இன்று!

புதுக் கவிதை!

 
புத்தகங்கள் இன்று!

புத்தகங்கள் இன்று மைநிறைந்த
பக்கங்களின் தொகுப்பு
சத்தில்லா அரசியல் யாப்பு
வித்தில்லா மரங்களின் தோப்பு

 
- நிஹா -

அல்லாஹ்வுக்கு உருவம் உண்டா? இல்லையா?

அல்லாஹ்வுக்கு உருவம் உண்டா? இல்லையா?
என்ற விவாதம் இறை விரோதக் கருத்தே!

A view about the debate on Allah!

மேற்கண்ட தலைப்பில் ஓர் விவாதம் அண்டை நாடான தமிழ்நாட்டில் அண்மையில் நடை பெற்று, அது இணைய தளத்தில் ஊட்டுதல் செய்யப்பட்டு, ஒரு நண்பரால் எனக்குச் சிபாரிசு செய்யப்பட்டு, அதனைக் கேட்க வேண்டியேற்பட்டு, கேட்டதைத் துர்பாக்கியமாக நினைந்து வேதனைப்படுகிறேன். Continue reading

Sanskrit and Tamil Names of Years !

Sanskrit and Tamil Names of Years !

ஆண்டுகளின் வடமொழிப் பெயர் -தமிழ்ப் பெயர்

பிரபவ -நற்றோன்றல்

விபவ -உயர்தோன்றல்

சுக்கில-வெள்ளொளி

பிரமோதூத-பேருவகை

பிரசோத்பத்தி-மக்கட்செல்வம் !

ஆங்கீரச-அயல்முனி

சிறிமுக-திருமுகம்

பவ- தோற்றம்

யுவ-இளமை

தாது-மாழை

ஈசுவர-ஈச்சுரம்

வெகுதானிய-கூலவளம்

பிரமாதி-முன்மை

விக்ரம-நேர்நிரல்

விச-விளைபயன்

சித்திரபானு-ஓவியக்கதிர்

சுபானு-நற்கதிர்

தாரண-தாங்கெழில்

பார்த்திப-நிலவரையன்

விய-விரிமாண்பு

சர்வசித்த-முற்றறிவு

சர்வதாரி-முழுநிறைவு

விரோதி- தீர்பகை

விகிர்தி-வளமாற்றம்

கர-செய்நேர்த்தி

நந்தன-நற்குழவி

விசய-உயர்வாகை

சய-வாகை

மன்மத-காதன்மை

துன்முகி-வெம்முகம்

ஏவிளம்பி-பொற்றடை

விளம்பி-அட்டி

விகாரி-எழில்மாறல்

சார்வரி-வீறியெழல்

பிலவ-கீழறை

சுபகிருது-நற்செய்கை

சோபகிருது-மங்கலம்

குரோதி-பகைக்கேடு

விசுவாவசு-உலகநிறைவு

பராபவ-அருட்டோற்றம்

பிலவங்க-நச்சுப்புழை

கீலக-பிணைவிரகு

சவுமிய-அழகு

சாதாரண-பொதுநிலை

விரோதி கிருது-இகல்வீறு

பரிதாபி-கழிவிரக்கம்

பிரமாதீச-நற்றலைமை

ஆனந்த-பெருமகிழ்ச்சி

இராட்சச-பெருமறம்

நள- தாமரை

பீங்கள-பொன்மை

காளயுக்தி-கருமைவீச்சு

சித்தார்த்தி-முன்னியமுடிதல்

ரவுத்ரி-அழலி

துன்மதி-கொடுமதி

துந்துபி-பேரிகை

உருத்ரோத்காரி-ஒடுங்கி

இரக்தாட்சி-செம்மை

குரோதன்-எதிரேற்றம்

அட்சய-வளங்கலன்

 

- நிஹா -

Source: Web

Quran Kural ! குர்ஆன் குறள் !

குர்ஆன் குறள் !

செய்யாவிடில் நீரும் செய்யப்படமாட்டீர் அநியாயம்
பொய்யாது 2:179குர் ஆனில்

நேர்வழி யென்ப வேறல்ல அல்லாஹ்வதே
சீர்பெறு 3:173ஐகுர் ஆனில் Continue reading