நற்சிந்தனை 32
அல்லாஹ்வை மறவாது அவனும் நம்மை மறக்காதிருக்க வழி தேடுவோம்!
அல் குர்ஆன் 59:19 அல்லாஹ்வை மறந்து விட்டவர்களைப் போன்று நீங்களும் ஆகிவிட வேண்டாம். ஏனென்றால், அவன், அவர்கள் தங்களையே மறக்குமாறு செய்துவிட்டான்!
மேற்கண்ட வசனத்தில் முன்னைய கூட்டம் ஒன்று அவனை மறந்தது பற்றியும், அதனால் அல்லாஹ், அவர்களைத் தங்களையே மறக்கும்படி செய்து விட்டான் என்ற ஒரு உண்மையை வெளிப்படுத்தி நம்மையும் அப்படி ஆகிவிட வேண்டாம் என எச்சரிக்கின்றது.
இச்சம்பவத்தில் இறுதி இழப்பு அல்லது தண்டனை அல்லது விளைவு நம்மை அவன் மறந்து விடுவதுடன், நம்மை நாம் மறந்து விடவும் செய்வதிலுள்ள பாரதூரம் விளங்க வேண்டியது. எதற்காக நாம் நம்மை மறக்க வேண்டிய நிலையை அடைந்துள்ளோம் என்பதை ஒப்புநோக்கின்அல்லாஹ்வை மறந்ததற்காகக் கொடுக்கப்பட்டதனைக் காண்கின்றோம். Continue reading