Category Archives: Islam

கற்றல் பற்றி அருள் மறை திருக் குர்ஆன் கூறுவதென்ன?

குர்ஆன், பிரசவமாகிய அக்கணப் பொழுதிலேயே கற்றலைத் தொட்டே தனது அசைவை முன் வைக்கிறது. அது கல்விக்கு குர்ஆன் தரும் கௌரவம், முக்கியத்துவம். கிபி ஏழாம் நூற்றாண்டில் ஹிரா பொதும்பில் கற்றல் என்பதே என்னவென்று அறியாத ‘நம்பிக்கைக்குரியவர்’ என அந்நாட்டு மக்களால் புகழ்ந்து போற்றப்பட்ட கருணை முஹம்மதைத் தன் தூதராக, நபிகளாராக அல்லாஹ் தேர்கின்றான். அன்றே அன்னாருக்குத் தன் வானவர் கோன் மூலம் ‘வஹி’ என்ற இறை செய்தியை விடுக்கிறான்.

Continue reading

குர்ஆன் வழியில்… நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான்!

நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான்!

மேற்கண்ட தலைப்புக்கு உரிமையாளன் வல்ல நாயன் அல்லாஹ் சுபுஹானஹுவதஆலா. அவன் தனது புனித மாமறையில் காலம் என்ற பெயரிலான 103ஆவது அத்தியாயத்தில் 2ஆம் வசனமாக இதனைக் கூறியிருக்கிறான். முதலாவது வசனம் காலத்தின் மீது சத்தியமாக என சூழுரைப்பது. 3ஆம் வசனம், இரண்டாம் வசனத்துக்கு விதிவிலக்கு. அதாவது, ‘ஈமான் கொண்டு, நற்செயல் செய்து, உண்மையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும், பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கு ஒருவர் உபதேசித்தும் கொண்டார்களே அத்தகையோரைத் தவிர’ என்ற விதிவிலக்கைக் கூறுவது. 114 அத்தியாயங்களைக் கொண்ட புனி குர்ஆனில் மூன்றே வசனங்களையும், ஓரே விடயத்தையும் கூறிக் கொண்டிருக்கின்றது, காலம் என்ற சூரா. மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான் என்பதைக் கூற அல்லாஹ் மூன்று சிறிய வசனங்களுடன், தனது சத்தியத்துடன் ஓர் அத்தியாயத்தை இறக்கி இருக்கிறான் என்பது, இறக்கிய அவ்விடயத்துக்கு எந்தளவு முக்கியத்துவத்தை அவன் அளித்திருக்கிறான் என்பதை விளக்குகின்றது. மனிதன் நஷ்டத்தில் இருப்பது அல்லாஹ்வுக்கு உகப்பான காரியமல்ல என்ற அவனது கருணையாலேயே அந்த முக்கியத்துவம் ஏற்பட்டிருக்கின்றது. ஆதலால் அவனது விருப்பத்துக்கமைய நாம் நஷ்டமாகாத தொழிலைச் செய்ய வேண்டும் என்பதை உணர்த்தவே இச்சிறு ஆக்கம் வெளியாகிறது. Continue reading

குறும்பா வடிவில் குர்ஆனிய நறும்பா !

அறி லாஇலாஹஇல்லல்லாஹு கலிமா அதை
அறிந்து சொல்வதே விதிமா – பொருளுண்மை
அறியாமல் சாட்சியம் கூறியதால் இற்றைவரை
அறிந்து பொய்யுரைத்த பழிமா ! Continue reading

Link

முஸ்லிம் அல்லாதவர்களுக்கு ஸலாம் கூறலாமா !

அல்லாஹ், உலக மாந்தர் ஒருவருக்கொருவர் ‘ஸலாம்’ என்ற முகமன் கூறுமாறு தனது திருமறையில் பணித்துள்ளான். நாமும் அவ்வாறே செய்து வருகின்றோம். ஸலாத்துக்கு முந்திக் கொள்ளுங்கள் என்ற நாயக வாக்கியமும் உள்ளது. இந்த வகையில் ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்று முகமன் கூறுதல் மூலம் ‘வஅலைக்கும் ஸலாம்’ என்ற பதிலைப் பெறும் போது, மனிதர் மத்தியில் ஐக்கியம், அந்நியோன்யம், நட்பு, நல்லெண்ணம், கருத்துப் பரிமாற்றம் போன்ற இன்னபிற நன்மைகள் உருவாகின்றன. Continue reading

பொறுமையைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள்…

மேற்கண்ட தலைப்பு அருளாளனனின் திருவசனம். புனித குர்ஆன் 2:153 ‘முஃமின்களே! நீங்கள் பொறுமையைக் கொண்டும், தொழுiகையைக் கொண்டும் உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்வாஹ் பொறுமையாளருடன் இருக்கிறான்.’ என்ற வசனமேயாகும். பொறுமையையும் தொழுகையையும் கொண்டு உதவி தேடுங்கள் என்ற இந்த வசனம் எனக்குப் புரியாத புதிராகவும், பின்னர் முரண்பாடு போலவும் தோற்றம் அளித்தாலும், அல்லாஹ் மீதும் அவனது அருள்மறையின் மீது கொண்ட அளப்பரிய நம்பிக்கையும், வல்ல அல்லாஹ்வின் கருணையும் இருந்ததனால், பொறுமை என்றால் என்ன ? தொழுகை என்றால் என்ன? என்பதை அறியும் ஆவலும் தொடர்ந்து முயற்சியும் உண்டானது. அதன் பயனே இவ்வாக்கத்தின் வெளிப்பாடு. தொடங்குமுன் அருளாளன் அன்புடையோனாகிய அல்லாஹ் சுபுஹானஹுவதஆலாவின் பாதுகாப்பையும், வழிகாட்டையும் வேண்டுகிறேன். Continue reading

வல்ல அல்லாஹ்வை நினைவு கூர்ந்து நல்ல வாழ்வு பெறுவோம்….

இப்பிரபஞ்சத்தில் மனித தோற்றம் நிகழ்ந்த காலமுதல், மனுக்குலத்தின் உயர்வுக்காக வல்ல அல்லாஹ்வால், முதல் மனிதன் ஆதம் (அலை) முதல், இறுதி நபி முகம்மது (ஸல்) அவர்கள் வரையில் தோன்றிய அனைத்து நபிமார்களுக்கும் அவர்கள் காலத்தில் வாழ்ந்த மக்களின் சீரான, நேரான வாழ்வுக்காக வேதங்களையும், வேதக் கட்டளைகளையும் அவ்வப்போது வழங்கி ஈடேற வழிவகுத்தான். அந்த வகையில் வழங்கப்பட்ட அனைத்து வேதங்களையும் மெய்ப்படுத்துவான் வேண்டி, (குர்ஆன் 3:3 இதற்கு முன்னுள்ளவற்றையும் உண்மைப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், இவ்வேதத்தை உண்மையைக்கொண்டு உம்மீது அவன்தான் இறக்கிவைத்தான்.) தனது இறுதித் தூதர் முகம்மது நபி (ஸல்) அவர்கள் மூலம் இறுதி வேதமாகிய இஸ்லாத்தை 6237 வசனங்களைக் கொண்ட புனித குர்ஆன் மூலம் இறக்கித் தனது அருளை தனது மக்களுக்கு முழுமையாக்கினான்.‘…இன்றையதினம் உங்களுடைய மார்க்கத்தை உங்களுக்குப் பரிபூரணமாக்கி விட்டேன். மேலும் என்னுடைய அருட்கொடையையும் உங்கள்மீது முழுமையாக்கி வைத்து விட்டேன்..’ குர்ஆன் 5:3.

Continue reading